Pages

Monday, July 5, 2010

உபுண்டுவில் notify-osd நம் விருப்பம் போல் மாற்றி அமைக்க

உபுண்டு திரையில் notify-osdஐ நம் விருப்பம்போல் எந்த மூலையிலும் வைத்துக்கொள்ளலாம். அதாவது

1 - top-right corner
2 - middle-right
3 - bottom-right corner
4 - bottom-left corner
5 - middle-left
6 - top-left corner

போன்ற இடங்களில் வைத்துக்கொள்ளலாம். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை அளிக்க வேண்டும்.

sudo add-apt-repository ppa:leolik/leolik
sudo apt-get update && sudo apt-get upgrade

பின்னர்

pkill notify-osd

இப்போது bottom-right corner வைக்க

gconftool-2 -s /apps/notify-osd/gravity --type=int 3 என்று தட்டச்சு செய்யவேண்டும்.




இப்போது bottom-left corner ல் வைக்க

gconftool-2 -s /apps/notify-osd/gravity --type=int 4 என்று தட்டச்சு செய்ய வேண்டும்.



இது போல் மேல் பகுதியிலும் அமைக்கலாம் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டது.

சோதனை செய்துப்பார்க்க கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

notify-send xxx

இங்கு xxx என்பது நமக்கு விருப்பமான டெக்ஸ்ட் ஆகும்.

Saturday, July 3, 2010

உபுண்டுவில் தொலைந்துபோன மடிகணினியை கண்டுபிடிக்க

உபுண்டுவில் தொலைந்து போன மேசைகணினி அல்லது மடிகணினியை இருக்கும் இடத்தை காண உதவும் நிரல் prey. இது ஒரு opensource மென்பொருள் ஆகும்.இதை கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி கொள்ளவேண்டும். நிறுவியவுடன் configure செய்ய வேண்டும்.

prey

இதை நிறுவியபின் applications->system tools->prey configurator செல்ல வேண்டும்.


இதில் api key மற்றும் devide key தெரிந்துகொள்ள http://preyproject.com சென்று நம்முடைய கணினியை பற்றி தகவல்கள் அளித்து பதிவு செய்துகொண்டபின் அதில் வந்துவிடும். அதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்.பின்னர் accept பொத்தானை அழுத்தினால் போதும்.

இதில் உள்ள அப்படியே அமைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உலாவியில் அட்ரச் பாரில் preyproject.com என்று தட்டச்சு செய்து அதில் நம்முடைய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்துகொள்ளவேண்டும். ஆரம்பத்தில் unverified ஆக இருக்கும். நாம் device key, api key கொடுத்து 20 நிமிடங்கள் காத்திருந்தால் ok வந்துவிடும்.



இதில் device key உள்ளது. பின்னர் profile சென்றால் api key இருக்கும். இதில் தொலைந்து போனதாக தகவல் தர அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் கர்ஸரை வைத்து சொடுக்க கீழ்கண்ட விண்டோ விரியும்.


இதில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்து submit பொத்தானை அழுத்த வேண்டும்.


இதில் வெப்கேம் வசதியும் உள்ளது. தொலைந்து போன மடிகணினியை இயக்குபவரின் புகைப்படத்தையும் email மூலம் நமக்கு தகவல் அளித்துவிடும்.

இப்போது நமக்கு வரும் email நாம் ஏற்கனவே பயனாளர் பெயராக கொடுத்த முகவரிக்கு வந்துவிடும்.


மேலே உள்ள படத்தில் உள்ள சுட்டியை சொடுக்கி பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். கொடுத்தவுடன் நமக்கு ரிப்போர்ட் கிடைத்துவிடும்.


இதில் இயக்குபவரின் ip address நமக்கு கிடைத்துவிடும். google location api மூலம் நமக்கு இடத்தை பற்றியும் தகவல் தெரிந்துவிடும். தொலைந்து போன மடிகணினியில் அலாரம் வைக்கலாம் அல்லது தகவல் அனுப்பலாம்.

Friday, July 2, 2010

உபுண்டுவில் displaying keypresses

உபுண்டுவில் நாம் தட்டச்சு செய்யும் ஒவ்வொன்றையும் நம்முடைய கணினி திரையில் காணலாம்.
இதற்கு உதவுவது screenkey என்ற நிரல் ஆகும். இதனை கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

screenkey

பின்னர் Applications->accessories->screenkey சென்றால் top panelல் இதன் icon இருக்கும்.


இப்போது தட்டச்சு பலகையில் எதை தட்டச்சு செய்தாலும் திரையில் காணமுடியும்.



இதற்கான ஒரு சிறு வீடியோ காட்சி.

Wednesday, June 30, 2010

உபுண்டுவில் audio mixing

உபுண்டுவில் இரண்டு ஆடியோ கோப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக சேர்க்க முடியும். அதாவது பேச்சையும் இசையையும் ஒன்றாக சேர்க்க முடியும். இதற்கான நிரல் தான் mixxx ஆகும். இது ubuntu software centreல் உள்ளது.


நிறுவியவுடன் Applications->sound & video->mixxx செல்ல வேண்டும்.


இதில் எந்த ஆடியோ கோப்பினையும் ஒலியின் அளவினை குறைத்துக்கொள்ளலாம்.

File->Load song (player 1) இது முதல் ஆடியோ கோப்பினை திறந்துவிடும். அதேபோல் அடுத்த ஆடியோ கோப்பினையும் திறந்து கொள்ளலாம். இதில் பல ஆடியோ கோப்புகளை அடுத்தடுத்து பிளே செய்யும் வசதியும் உள்ளது. Playlist யும் இதில் இம்போர்ட் செய்துகொள்ளமுடியும். ஒரே ஆடியோ கோப்பினையும் தொடர்ந்து இயக்க முடியும். இரண்டு டிரக்கிலேயும் தனித்தனி volume contro, balance போன்றவையும் உள்ளது.

பின்னர் options சென்றால் Record mix அழுத்தினால் ஆடியோ கோப்புகள் இணைந்து ஒரு புதிய ஆடியோ கோப்பாக மாற்றலாம். நாம் விரும்பியபடியே கோப்பின் பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.wav வடிவில் கோப்புகள் பதிவாகும்.


இதில் options->preference சென்றால் பல்வேறு அமைப்புகளை நாம் அமைத்துக்கொள்ளமுடியும்.

Saturday, June 26, 2010

உபுண்டுவில் mozilla thunderbirdன் புதிய பதிப்பு 3.1

உபுண்டுவில் mozilla thunderbird 3.1 புதிய பதிப்பு வெளி வந்துள்ளது. இது PPA ஆக இல்லாமல் deb கோப்பாக வந்துள்ளது. ubuntuzilla வழியாக நிறுவ சற்று சிரமமாக இருக்கிறது.

Download mozilla thunderbird 3.1


இன்னும் உபுண்டுவில் update வரவில்லை.



உபுண்டுவில் GIMPன் புதிய பதிப்பு 2.6.9



உபுண்டுவில் GIMPன் புதிய பதிப்பை எப்படி மேம்படுத்துவது என்று பார்ப்போம். இந்த நிரல் விண்டோவில் போட்டோஷப்பினை விட மேம்பட்டது.

முதலில் டெர்மினலில் இதன் PPAவை கீழ்கண்ட கட்டளை கொடுத்து software sourceல் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

sudo add-apt-repository ppa:ferramroberto/linuxfreedomlucid

ஏற்கனவே GIMP நிறுவப்பட்டிருந்தால் கீழ்கண்ட கட்டளையை கொடுக்க வேண்டும்.

sudo apt-get update && sudo apt-get upgrade

புதியதாக நிறுவ வேண்டியிருந்தால்

sudo apt-get update && sudo apt-get install gimp என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.


Friday, June 25, 2010

உபுண்டுவில் mouse pointer வடிவை மாற்ற

உபுண்டுவில் மவுஸ் பாயிண்டர் வடிவினை மாற்றுவதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை கொடுக்க வேண்டும்.

sudo update-alternatives --config x-cursor-theme

இவ்வாறு கொடுக்கப்பட்டவுடன் கீழ்கண்ட விண்டோ விரியும்.


இதில் நமக்கு பிடித்தமான தீமை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.

2 வது முறை

System->Preference-Appearance->Theme->customise தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கீழ்கண்ட விண்டோ விரியும். இதிலிருந்து பாயிண்டரை தேர்ந்தெடுக்கலாம்.