Pages

Saturday, July 31, 2010

உபுண்டுவில் force quit

உபுண்டுவில் சில நிரல்கள் இயங்கும் போது உதாரணமாக நெருப்பு நரி இயங்கும்போது சிலசமயங்களில் அப்படியே hang ஆகி நின்றுவிடும். உடனே நாம் close போத்தானை அழுத்தி மூட முயற்சி செய்வோம். ஆனால் சிறிது நேரம் கழித்துதான் மூடமுடியும். இப்போது அப்படியில்லாமல் உடனடியாக மூடுவதற்கு வழி ஒன்று உள்ளது.

முதலில் top panelல் வலது சொடுக்க வரும் விண்டோவில் force quit என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


add பொத்தானை அழுத்தினால் இதனுடைய icon top panelல் தெரியும்.


இப்போது ஏதேனும் ஒரு நிரல் இயங்க மறுத்து நின்றுபோனால் top panelல் உள்ள iconல் இடது சொடுக்க எந்த விண்டோவை மூட வேண்டுமோ அந்த விண்டோவில் கர்சரை வைத்து இடது அழுத்தினால் விண்டோ உடனடியாக மூடப்பட்டுவிடும்.




Friday, July 30, 2010

உபுண்டுவில் bash shell history கோப்பும் அதன் அளவை மாற்றுதல்

உபுண்டு டெர்மினலில் history என்று தட்டச்சு செய்தால் நாம் உபுண்டு நிறுவியதிலிருந்து என்ன கட்டளைகள் கொடுக்கிறோமொ அந்த விவரங்கள் வந்துவிடும். வரிசை எண்களுடன் வந்து நிற்கும்.


இந்த தவல்களை ஒரு கோப்பில் பதிவு செய்வதற்கு டெர்மினலில்

history -w ~/userhistory.txt

என்று தட்டச்சு செய்தால் userhistory.txt என்னும் கோப்பில் சேமிக்கப்படும். இந்த கோப்பின் பெயர் நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம்.

இந்த கோப்பின் அளவை மாற்ற டெர்மினலில்

sudo gedit ~/.bashsrc என்னும் கோப்பின திறந்துக்கொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை கோப்பின் ஆரம்பத்தில் சேர்த்துவிட வேண்டும்.

export HISTFILESIZE=3000

userhistory.txt கோப்பினை சரிப்பார்க்க home அடைவினுள் இருக்கும் bash_history என்னும் கோப்பினை திறந்து பார்த்திக்கொள்ளலாம். இந்த கோப்பு bash shell லினால் தானாகவே உருவாக்கப்பட்ட கோப்பாகும்.

Wednesday, July 28, 2010

உபுண்டுவில் nautilus pyextensions

உபுண்டுவில் nautilus pyextensions என்பது உபுண்டுவில் nautilus file managerஐ எளிதாக உபயோகப்படுத்துவதற்க்கான ஒரு நிரல் ஆகும். இதனை இயக்குவது மிகவும் எளிதாக இருக்கிறது. மேற்கண்ட சுட்டியிலிருந்து இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். இது .deb கோப்பாகவே கிடைக்கிறது. பின்னர்

Applications->Accessories->Nautilus PyExtensions செல்ல வேண்டும்.



இந்த நிரலின் பயன்கள்

1. open-as-root.py இது எந்த ஒரு கோப்பு/அடைவுயும் root user ஆக திறக்க முடியும். இது administrative rightsஉடன் கூடியது.



2.set-as-desktop-background.py எந்த ஒரு பட கோப்பையும் வால் பேப்பராக்க முடியும்.

3.open-terminal-geometry.py இது எந்த அடைவினுள் இருந்துகொண்டும் டெர்மினல் செல்ல முடியும்.


4.replace-in-filenames.py இது கோப்பில் உள்ள ஒரு சில டெக்ஸ்ட்களை மாற்றக்கூடியது.


5.kdiff3-compare.py மற்றும் meld-compare.py எனப்படுவது எந்த ஒரு கோப்பு/அடைவையும் compare செய்ய பயன்படுவது.

இப்போது ஏதாவது கோப்பு/அடைவின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க

Sunday, July 25, 2010

உபுண்டுவில் remote desktop

உபுண்டுவில் remote desktopல் உள்ளவற்றை பார்க்க முடியும். இதற்கு முதலில்

system->preferences->remote desktop செல்ல வேண்டும்.



இதில் allow other users to view your desktop என்பதில் டிக் செய்யவும். பின்னர் நம்முடைய ip address தெரியும். இதை நம்முடைய நண்பர்களிடம் கொடுத்தால் அவர்கள நம்முடைய desktopஐ பார்க்க முடியும்.இதில் securityயில் your must confirm each access to the machine என்பதில் டிக் செய்ய வேண்டும்.

பின்னர் applications->internet->remote desktop viewer என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் connect பொத்தானை அழுத்த


மேற்கண்ட விண்டோவில் protocoல் vnc என்பதனை தேர்ந்தெடுத்து hostல் ip address கொடுத்து connect பொத்தானை அழுத்தவேண்டும். இதில் find அழுத்தினால் remote desktop list தெரியும்.

connect பொத்தானை அழுத்தியபின் நம்மிடம் அனுமதி கேட்கும்.


இதில் allow பொத்தானை அழுத்த remote desktop நம்முடைய கணினியில் தெரியும்.



இப்போது top panelல் இதனுடைய icon வந்துவிடும்.


இந்த iconஇல் வலது சொடுக்க வரும் விண்டோவில் Disconnect என்பதனை அழுத்த தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

Saturday, July 24, 2010

உபுண்டு நெருப்பு நரி address bar drop down list clear செய்ய

உபுண்டு நெருப்புநரி உலாவியில் முகவரி பெட்டியில் ஏதெனும் ஒரு இணைய முகவரி தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் அதன் தொடர்புடைய எல்ல இணைய முகவரிகளும் drop down list ஆக வரும்.



இதை வராமல் செய்வதற்கு முகவரி பெட்டியில் about:config என்று தட்டச்சு செய்து I'll be careful, I promise என்பதனை அழுத்தி வரும் விண்டோவில் browser.urlbar.maxRichResults என்பதனை தேடி அதன் மதிப்பை 12லிருந்து 0 ஆக மாற்ற வேண்டும்.

மேற்கண்ட வரியில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் modify தேர்ந்தெடுக்க வேண்டும்.



இப்போது மீண்டும் நெருப்பு நரியை திறக்க drop down list வராது.

Thursday, July 22, 2010

உபுண்டுவில் தேதி மற்றும் நேரத்தை டெர்மினலில் மாற்ற

உபுண்டுவில் டெர்மினலில் தேதி மற்றும் நேரத்தை டெர்மினலில் மாற்றுவதற்கு

டாஸ் ஒஸ்ஸில் தேதி மற்றும் நேரத்தை மாற்ற டெர்மினலில் வழி உண்டு. ஆனால் லினக்ஸில் அவ்வாறு மாற்ற முடியும்.

தேதியை மாற்ற

டெர்மினலில்

date -d mm/dd/yyyy

அல்லது

date --date=mm/dd/yyy

இதில் mm=மாதம், dd=தேதி, yyyy=வருடம்.

நேரத்தை மாற்ற

date -s hh:mm:ss

அல்லது

date --set=hh:mm:ss

இதில் hh=மணி, mm=நிமிடம், ss=வினாடி

உதாரணம்

date -d 07/22/2010

date -s 08:41:00

Tuesday, July 20, 2010

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான குறியீடு.

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான குறியீட்டை தட்டச்சு செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

Rupee Font Version 2.0 என்ற சுட்டியிலிருந்து எழுத்துருவை தரவிறக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் தரவிரக்கப்பட்ட எழுத்துரு கோப்பின் மீது இரட்டை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ விரியும்.


இந்த எழுத்துருவை நிறுவ install font என்பதனை கிளிக் செய்தால் போதும். எழுத்துரு நிறுவப்பட்டு விடும்.

இதை சோதிக்க openoffice word processorஐ திறந்து அதில் எழுத்துருவை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.



விசை பலகையில் tabற்க்கு மேல் உள்ள கீயை அழுத்தினால் போதும்