Pages

Tuesday, September 14, 2010

உபுண்டு டெர்மினலில் screenshot எடுத்தல்

உபுண்டுவில் டெர்மினலில் நமக்கு தேவையான பாகத்தையோ அல்லது முழுவதையுமோ screeshot எடுக்க முடியும்.

முதலில் டெர்மினலில்

sudo apt-get install imagemagick

என்று தட்டச்சு செய்து imagemagick என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

import screen.png என்று தட்டச்சு செய்தால் நமக்கு வேண்டிய அளவில் தேர்வு செய்து எடுத்துக்கொள்ளலாம். screen.png என்பது கோப்பின் பெயராகும். இதை நமக்கு பிடித்தமான பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.

விண்டோ முழுவதும்




பகுதியாக

Monday, September 13, 2010

உபுண்டு vlcயில் யூடியுப் படங்கள்

உபுண்டு vlcயில் youtube படங்களை காண முடியும். vlcயின் பல பயன்களில் இதுவும் ஒன்று.

முதலில்

Applications->Sound&video->VLC media player திறந்து கொள்ளவேண்டும். அதில்

Media->Advanced Open file->network சென்று அதில் யூடியுப் இணைய முகவரியை கொடுத்து play பொத்தானை அழுத்தினால் படங்கள் தெரியும்.



இதில் தெரியும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இணைய இணைப்பு சரியாக இருந்தால் வீடியோ நன்றாக வருகிறது.

உபுண்டு: நெருப்பு நரிஉலாவியைப் பற்றிய ஒரு வீடியோ

நெருப்பு நரியைப்பற்றிய ஒரு வீடியோ காட்சி

Sunday, September 12, 2010

உபுண்டுவில் vlc1.1.4 மற்றும் thunderbird 3.1.3

உபுண்டுவில் vlc 1.1.4 மற்றும் thunderbird 3.1.3 ஆகிய புதிய பதிப்புகளை நிறுவுவதற்கான ppa வந்துள்ளது.

முதலில் டெர்மினலில்


sudo add-apt-repository ppa:lucid-bleed/ppa

sudo apt-get update


என்று தட்டச்சு செய்தால் புதிய வந்து இருப்பதை update managerல் காண்பிக்கும். பின்னர் install updates என்ற பொத்தானை அழுத்தி நிறுவிக்கொள்ளலாம்.


VLC 1.1.4


Thunderbird 3.1.3

Friday, September 10, 2010

உபுண்டுவில் terminalல் vlc உதவியுடன் பாடல்/வீடியோ கேட்க/பார்க்க

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் டெர்மினலில் பாடல் மற்றும் வீடியோ கேட்க பார்க்க முடியும். தற்போது வெளிவந்துள்ள 1.1.4 ன் உதவியுடன் இதனை செயல்படுத்த முடியும்.

முதலில் டெர்மினலில்

nvlc /media/entertainment/Aadhavan/*.mp3 என்று கட்டளை கொடுக்க வேண்டும். இதில் entertainment என்ற பார்டிஷீயனில் பாடல் மற்றும் வீடியோ சேமித்து இருக்கிறேன். *.mp3 என்பது பல பாடல்களை தேர்வு செய்வதற்கு பயன்படுகிறது.



இந்த கட்டளையை பயன்படுத்தி வீடியோ பார்க்க முடியும்.

nvlc /media/entertainment/ice3/ice3.avi

என்று டெர்மினலில் கட்டளை கொடுத்தால் ice3.avi என்ற வீடியோவை பார்க்க முடியும்.




இங்கு entertainment என்ற partition mount ஆகி இருக்க வேண்டும்.

nvlcல் playlist, media library போன்றவைகளையும் இயக்க முடியும்.

Thursday, September 9, 2010

உபுண்டுவில் restart/shutdown icon மீண்டும் கொண்டு வருதல்

உபுண்டுவில் சிலசமயங்களில் restart/shutdown icon காணாமல் போய்விடுவது உண்டு. இதை எளிதில் வரவழைக்க முடியும்.


Top panelல் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் Add to panel தேர்ந்தெடுக்க வேண்டும்.


வரும் விண்டோவில் Indicator applet session தேர்ந்தெடுத்து add பொத்தானை அழுத்த top panelல் restore/shutdown icon வந்துவிடும்.

Tuesday, September 7, 2010

உபுண்டுவில் 3D viewer

உபுண்டுவில் 3d கோப்புகளை காண ஒரு நிரல். இது ubuntu software centerஇல் இருக்கிறது. இந்த நிரல் autocad மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளை கூட பார்க்க முடியும். மேலும் கீழ்கண்ட வகை கோப்புகளையும் காண முடியும்.

* 3D Studio (.3ds, .prj)
* LightWave (.lw, .lwb, .lwo)
* Alias Wavefront (.obj)
* Impulse TurboSilver / Imagine (.iob)
* AutoCAD (.dxf)
* Quake II Models (.md2)
* Quake III Models (.md3)
* Neutral File Format (.nff)
* 3D Metafile (.3dmf, .3mf, .b3d)
* Caligari TrueSpace Objects (.cob)
* Quick3D Objects & Scenes (.q3o, q3s)
* VRML 1.0 files (.wrl, .vrml)
* AC3D objects (.ac, .acc)
* LeoCAD Models (.lcd)
* Racer car models (.ar, .dof)
* Ultimate Stunts car models (.glb)
* VDrift car models (.joe, .car)
* COLLADA & G**gle Earth (.dae, .kmz) (new in libg3d 0.0.7)
* LDraw (.dat, .mpd) (new in libg3d 0.0.7)
* ASCII Scene Exporter (.ase) (new in libg3d 0.0.7)


இந்த நிரலை செயல்படுத்த Applications->Graphics->G3DViewer செல்ல வேண்டும்.


இதற்கு சில உதாரணங்கள்



இந்த நிரலில் கோப்புகளை உருவாக்க முடியாது. பலவித கோணங்களில் பார்க்க முடியும்.View வில் சென்று பல்வேறு விதமாக அமைப்புக்கள் மூலம் பார்க்க முடியும்.



மேலும் விவரங்கள் தெர்ந்துகொள்ள சுட்டி