Pages

Saturday, October 2, 2010

உபுண்டுவில் libreoffice

உபுண்டுவில் openofficeக்கு பதில் வந்திருப்பது தான் libreoffice. இதன் செயல்படுகள் அனைத்தும் openoffice போலவே இருக்கிறது. Open officeஐ oracle நிறுவனம் வாங்கிவிட்டதால் நாம் libreofficeக்கு மாற வேண்டியதாகிவிட்டது. இந்த நிரலை உருவாக்கியவர்கள் openoffice உருவாக்கியவர்களே. மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்கவும்.


உபுண்டுவும் libre officeக்கு மாற போவதாக செய்திகள் வந்திருக்கின்றன். முதலில் இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.

டெர்மினலில் கோப்பினை தரவிறக்கிகொள்ளலாம்.

cd Desktop

wget http://download.documentfoundation.org/libreoffice/testing/LO_3.3.0-beta1_Linux_x86_install-deb_en-US.tar.gz

இந்த கோப்பினை நம்முடைய மேசையின் மீதே வைத்துக்கொள்ளலாம்.பின்னர் இதை விரிவாக்கினால் en-US என்ற அடைவினுள் இருப்பதை பார்க்கலாம்.

sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/*.deb என்று கட்டளையிட்டால் libreoffice நிறுவப்பட்டுவிடும்.

பின்னர் கீழ்கண்டவாறு கட்டளையிட்டு இந்த நிரல்களை Applications->Officeல் வரவழைக்கலாம்.

sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/desktop-integration/libreoffice3.3-debian-menus_3.3-9526_all.deb

இப்போது மேனுவில் வந்துவிடும்.




இந்த நிரலின் சிறு ஐகான் மேலே உள்ள பேனலில் இருப்பதை காணலாம்.


1.Libreoffice 3.3 Writter




2.LibreOffice 3.3 Calc


3.LibreOffice 3.3 base


Libreoffice ன் வரவை Richard Stallman வரவேற்றிருக்கிறார். Canonical,Redhat,Google,Novell போன்ற லினக்ஸ் நிறுவனங்களும் வரவேற்றுள்ளன.

Libreoffice உடன் openoffice செர்த்து இயக்கலாம். அல்லது open office நீக்கிவிட்டும் இயக்கலாம்.


உபுண்டுவில் Control keyஐயும் Caps lock keyஐயும் மாற்றி பயன்படுத்த

உபுண்டுவில் control keyஐ caps lock keyஆகவும், caps lock key ஐ control key ஆகவும் மாற்றி பயன்படுத்த முடியும்.

முதலில்

System->Preferences->Key board->Layouts->Options செல்ல வேண்டும்.


பின்னர் வரும் விண்டோவில் Cntrl key position தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் swap contrl and caps lockஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.


Close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது control keyஐ அழுத்த caps lockஆக வேலை செய்யும். இதேபோல் caps lock ஐ அழுத்த control key ஆக வேலை செய்யும்.

இந்த வசதி தேவையில்லைன்றால் cntrl key positionல் இருக்கும் default ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.


இந்த நிகழ்வு உடனடியாக வேலை செய்யும். கணினியை மீளதுவங்க வேண்டியதில்லை.

உபுண்டுவில் blender பயன்படுத்தி அனிமே ஷன் படங்கள்

உபுண்டுவில் blender நிரலை பயன்படுத்தி 3டி மற்றும் அசையும் படங்களை உருவாக்க முடியும். இந்த நிரலை ubuntu software centreல் இருக்கிறது.


Blenderஐ பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு அனிமே ஷன் படம்.



மேற்கொண்டு இது பற்றிய தகவல்களுக்கு இந்த சுட்டியில் பார்க்கவும்.

Thursday, September 30, 2010

உபுண்டு 10.10 Maverick Meerkat நிறுவுதல் பற்றிய ஒரு slideshow

உபுண்டுவில் அடுத்து வரவிருக்கும் பதிப்பான 10.10ன் நிறுவுதல் பற்றிய ஒரு slideshow

உபுண்டுவில் package version lock செய்ய

உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை மேம்படுத்தாமல் அதாவது update செய்யாமல் வைத்துக்கொள்ளமுடியும். இதற்கு

System->Administration->Synaptic package manager->package->lock version சென்றால் லாக் செய்துவிடமுடியும். இப்படி செய்வதால் நிரலை மேம்படுத்த முடியாது. இந்த வசதி தேவையில்லை என்றால் மீண்டும் System->Administration->Synaptic package manager->package->lock version சென்றால் போதும்.

உதாரணமாக தண்டர்பேர்டு நிரலை பார்ப்போம்.



இதில் தண்டர்பேர்டு ன் பதிப்பை 3.1.4ல் வைக்க package->lock version செல்ல வேண்டும்.




இடதுபக்க ஒரத்தில் சிறிய பூட்டு போன்ற ஒரு படம் இருப்பதை பார்க்கலாம். இதனால் நிரலை மேம்படுத்தமுடியாது.

Sunday, September 26, 2010

உபுண்டுவில் படங்களின் slideshow வை desktop wallpaperஆக வைப்பதற்கு

உபுண்டுவில் படங்களின் slideshow வை அப்படியே desktopல் wallpaper ஆக வைக்கலாம். இதற்கு முதலில் OpenJDK Java 6 Runtime என்ற நிரலை ubuntu software centreல் தேடிப்பார்த்து நிறுவிக்கொள்ளவேண்டும்.



பின்னர் இந்த சுட்டியிலிருந்து jar கோப்பினை தரவிறக்கி கொள்ளவேண்டும்.


இந்த கோப்பின் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் properties->Permissions சென்று அதில் execute என்பதற்கு நேராக டிக் மார்க் செய்ய வேண்டும்.


பின்னர் close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது தரவிறக்கப்பட்ட jar கோப்பின் மீது கர்ஸரைவைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->OpenJDK Java 6 Runtime என்பதனை தேர்ந்தெடுத்து open பொத்தானை அழுத்தவேண்டும்.


இப்போது கீழ்கண்ட விண்டோ வரும்.


இதில் browse பொத்தானை அழுத்தி எந்த அடைவினுள் படங்களை இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கவேண்டும். Durationல் வால்பேப்பர் எத்தனை விநாடிகள் தோன்ற வேண்டுமொ அதை அமைத்துக்கொள்ளவேண்டும்.



எல்லாவற்றையும் அமைத்த பின்னர் create xml என்ற பொத்தானை அழுத்தியவுடன் Background.xml என்ற கோப்பு படங்கள் அடங்கிய அடைவினுள் உருவாகிவிடும்.


பின்னர் desktopல் வெற்று இடத்தில் கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் change desktop background என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேல் கண்ட விண்டோவில் 1 என்ற இடத்தில் all files என்பதனை தேர்ந்தெடுத்தால் 2 என்ற இடத்தில் புதியதாக உருவாகி இருக்கும் xml கோப்பினை தேர்ந்தெடுத்து open பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது desktopல் படங்கள் slideshow ஆக தொன்றுவதை பார்க்கலாம்.

Saturday, September 25, 2010

உபுண்டுவில் அதிகம் பயன்படுத்திய டெர்மினல் கட்டளைகளை தெரிந்துகொள்ள

உபுண்டுவில் நாம் அதிகம் பயன்படுத்திய டெர்மினல் கட்டளைகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட கட்டளையை முனையத்தில் கொடுக்க வேண்டும்.

history | awk '{print $2}' | sort | uniq -c | sort -rn | head -10

இதன் விடை கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு வரும்.


இதேபோல் இன்னொரு கட்டளையும் உண்டு.

history | awk '{if ($2=="sudo") print $3; else print $2; }' | sort | uniq -c | sort -rn | head -10

இதன் விடை கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் வரும்