Pages

Saturday, November 6, 2010

உபுண்டுவில் உபயோகிப்பாளரின் பெயரை top panelலிருந்து நீக்க

உபுண்டுவில் user name top panelலிருந்து நீக்க முடியும்.


டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool -s /system/indicator/me/display --type int 0

இப்போது user name இருக்காது.


மீண்டும் user name கொண்டு வர கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool -s /system/indicator/me/display --type int 1

Preferences->about meல் நம்முடைய உண்மையான பெயரை கொடுத்திருப்போம் அந்த பெயரை வரவழைக்க

gconftool -s /system/indicator/me/display --type int 2

என்று டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

Friday, November 5, 2010

உபுண்டுவில் டெர்மினலில் good morning உடன் ஆரம்பிக்க

உபுண்டுவில் டெர்மினலுக்கு செல்லும் போது காலை நேரம் என்றால் Good Morning, மதியம் என்றால் Good afternoon மற்றும் மாலை நேரம் என்றால் Good Evening என்ற வாழ்த்துகளுடன் ஆரம்பிக்க வைக்கலாம்.


முதலில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவேண்டும். இதற்கு ஏதேனும் ஒரு பெயர் அவரவர் விருப்பப்படி கொடுத்துக்கொள்ளலாம். நான் இங்கு good.sh என்று கொடுத்துள்ளேன்.

#!/bin/bash
# Shell program which gets executed the moment the user logs in, it should
# display the message "Good morning", "Good Afternoon", or "Good Evening"
# depnding upon the time which the user logs in.
# =====================================================================

# get current hour (24 clock format i.e. 0-23)
hour=$(date +"%H")

# if it is midnight to midafternoon will say G'morning
if [ $hour -ge 0 -a $hour -lt 12 ]
then
greet="Have a Nice Day Good Morning, $USER"
# if it is midafternoon to evening ( before 6 pm) will say G'noon
elif [ $hour -ge 12 -a $hour -lt 18 ]
then
greet="Good Afternoon, $USER"
else # it is good evening till midnight
greet="Good evening, $USER"
fi

# display greet
echo $greet


இந்த கோப்பினை home அடைவினுள் வைத்துக்கொள்ளலாம். பின்னர் அதே அடைவினுள் உள்ள .bashrc என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். இந்த கோப்பானது hidden கோப்பாகும். இதை திறப்பதற்கு home அடைவினுள் சென்று view->show hidden files என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.

/home/username/good.sh அதாவது ஸ்கிரிப்ட் அடங்கிய கோப்பு எந்த அடைவினுள் உள்ளதோ அந்த அடைவின் பெயரோடு இருக்க வேண்டும்.


இப்போது Applications0>accessories->terminal சென்றால் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கும்.

கீழ்கண்ட படத்தில் மாலை வணக்கதுடன் டெர்மினல் ஆரம்பிக்கிறது.


இந்த வாழ்த்தை ஒலியுடன் பெற முடியும். அதற்கு ஸ்கிரிப்டில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.

Have a Nice Day Good Morning, $USER என்பதற்கு பதிலாக அதன் நடுவில் உள்ள space இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது

HaveaNiceDayGoodMorning,$USER என்று இருக்க வேண்டும். பின்னர் ஸ்கிரிப்டின் அடியில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.

espeak $greet


Thursday, November 4, 2010

உபுண்டுவில் வீடியோ conversion encode

உபுண்டுவில் நாம் தரவிறக்கம் செய்யும் வீடியோக்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றுவதற்கு உதவும் நிரல் தான் encode. இந்த நிரல் ffmpegன் gui வடிவமாகும். இதை நிறுவுவதற்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து இரண்டு deb கோப்புகளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

Encode

Youtube Downloader.

நிறுவிய பின் Applications->sound & video->encode செல்ல வேண்டும்.


இதில் convert பொத்தானை அழுத்தினால் கீழ்காணும் விண்டோ விரியும்.


இதில் நமக்கு தேவையான அமைப்புகளை அமைத்துக்கொள்ளலாம். open பொத்தானை அழுத்தி மாற்ற வேண்டிய கோப்பினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டு. பின்னர் encode பொத்தானை அழுத்தினால் conversion ஆரம்பிக்கும்.


முடித்தவுடன் வடிவம் மாற்றப்பட்ட கோப்பு இருப்பதை காணலாம்.

பின்னர் yavtd பொத்தானை அழுத்தினால் வரும் விண்டோவில் youtube முகவரியை கொடுத்தால் வீடியோ தளத்திலிருந்து தரவிறங்க ஆரம்பிக்கும். இது அடுத்த நிரல் ஆகும்.


Wednesday, November 3, 2010

உபுண்டுவில் எந்த ஒரு டிரைவும் தானாக mount ஆக

உபுண்டுவில் எந்த ஒரு டிரைவ் அதாவது ஒரு partition உபுண்டு லாகின் ஆகி வரும்போது தானாக mount ஆகும்படி செய்ய முடியும்.

முதலில் டெர்மினலில்

sudo fdisk -l என்று கட்டளை கொடுத்து எந்த partition என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.


டெர்மினலில்

sudo mkdir /media/mpoint என்று தட்டச்சு செய்ய வேண்டும். mpoint என்பது நம் விருப்பம் போல் பெயர் இருக்கலாம்.

பின்னர் /etc/fstab என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.

sudo gedit /etc/fstab

இந்த கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிட வேண்டும்.

/dev/sda7 /media/mpoint ntfs-3g default 0 0


இங்கு mpoint என்பது நம் விருப்பம் போல் கொடுத்த பெயர் ஆகும். இப்போது கணினியை மீள துவங்க டிரைவ் மேசையின்மீது இருப்பதை பார்க்கலாம்.

Tuesday, November 2, 2010

உபுண்டுவில் driveன் லேபிளை டெர்மினலில் மாற்ற



உபுண்டுவில் ஒரு டிரைவின் பெயரை டெர்மினலில் மாற்ற முடியும். முதலில் டெர்மினலில்

sudo apt-get install ntfsprogs


என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரல் default ஆக நிறுவப்பட்டிருக்கும். பின்னர் டெர்மினலில்

sudo fdisk -l என்று தட்டச்சு செய்து எந்த டிரைவின் பெயரை மாற்ற வேண்டுமோ அதை குறித்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில்

sudo ntfslabel /dev/sda7 name என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

பெயர் மாற்றம் செய்வதற்கு முன் உள்ள டிரைவின் பெயர்.



ஒரு டிரைவின் பெயர் soft என்று உள்ளது அதை software என்று மாற்ற கீழ்கண்ட கட்டளையை கொடுக்க வேண்டும்.

sudo ntfslabel /dev/sda7 software இப்போது பெயர் மாறிவிட்டு இருக்கும்.



Monday, November 1, 2010

உபுண்டுவில் unity desktop

உபுண்டு ஏப்ரல் 2011 ல் வரவிருக்கும் புதிய வெர்ஷன் 11.04 Natty Narwhal பதிப்பில் gnome desktopஐ எடுத்துவிட்டு unity desktop வரப்போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மேசை எப்படி இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

இந்த மேசையை 10.10ல் நிறுவ முதலில் டெர்மினலில்

sudo apt-get install unity என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும். பின்னர் logout செய்து மீண்டும் உள்ளே வரவேண்டும். உள்ளே வரும் சமயம் login செய்யும்முன் sessionல் gnome netbook edition என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.







இது பற்றிய ஒரு வீடியோ


உபுண்டு நம்முடைய கணினியில் graphics card பற்றி தெரிந்துகொள்ள



உபுண்டு கணினியில் பயன்படுத்தப்படும் graphic card பற்றி தெர்ந்துகொள்ள டெர்மினிலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

lspci -v -s `lspci | awk '/VGA/{print $1}'`

இப்போது graphic card பற்றிய தகவல்கள் திரையில் வந்துவிடும்.

arulmozhi@arulmozhi-945GZM-S2:~$ lspci -v -s `lspci | awk '/VGA/{print $1}'`
00:02.0 VGA compatible controller: Intel Corporation 82945G/GZ Integrated Graphics Controller (rev 02) (prog-if 00 [VGA controller])
Subsystem: Giga-byte Technology Device d000
Flags: bus master, fast devsel, latency 0, IRQ 16
Memory at e2000000 (32-bit, non-prefetchable) [size=512K]
I/O ports at c000 [size=8]
Memory at d0000000 (32-bit, prefetchable) [size=256M]
Memory at e2080000 (32-bit, non-prefetchable) [size=256K]
Expansion ROM at [disabled]
Capabilities:
Kernel driver in use: i915
Kernel modules: i915

arulmozhi@arulmozhi-945GZM-S2:~$