Pages

Saturday, November 20, 2010

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் உறைந்து போகாமல் காண

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது சில சமயம் உறைந்து நின்றுவிடுகிறது. மீண்டும் சின்னதாக அமைத்து மீண்டும் முயற்சிகையில் தான் சரியானது. இப்போது இதற்கு ஒரு வழி உள்ளது.

டெர்மினலில்

sudo mkdir /etc/adobe என்று தட்டச்சு செய்து /etc/adobe என்ற ஒரு அடைவினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /etc/adobe/mms.cfg என்று தட்டச்சு செய்து mms.cfg என்ற ஒரு காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவும்.

OverrideGPUValidation=true

சேமித்து வெளியேறிவிடவும்.

இப்போது youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது உறைந்து போவதில்லை.

உபுண்டு கணினி விரைவாக இயங்க ஒரு கர்னல் patch

உபுண்டு கணினி வேகமாக இயங்க ஒரு கர்னல் பேட்ச். இதை அளித்தவர் Red Hatன் developer Lennart Poettering, கர்னலை உருவாக்கிய LinusTorvaldsக்கு எழுதிய பதிலில் தெரிவித்திருக்கிறார்.

இதை எப்படி உபுண்டுவில் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

1.முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/rc.local என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். அதில் exit 0 என்பதற்கு மேலாக கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட வேண்டும்.

mkdir -p /dev/cgroup/cpu
mount -t cgroup cgroup /dev/cgroup/cpu -o cpu
mkdir -m 0777 /dev/cgroup/cpu/user
echo "/usr/local/sbin/cgroup_clean" > /dev/cgroup/cpu/release_agent



பின்னர் சேமித்து வெளியேறிவிடவேண்டும். டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo chmod +x /etc/rc.local

2.Home அடைவினுள் இருக்கும் ./bashrc என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit ./bashrc அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

if [ "$PS1" ] ; then
mkdir -p -m 0700 /dev/cgroup/cpu/user/$$ > /dev/null 2>&1
echo $$ > /dev/cgroup/cpu/user/$$/tasks
echo "1" > /dev/cgroup/cpu/user/$$/notify_on_release
fi



3.டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்து புதிய ஒரு கோப்பினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/local/sbin/cgroup_clean இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

#!/bin/sh
rmdir /dev/cgroup/cpu/$*

பின்னர் டெர்மினலில்

sudo chmod +x /usr/local/sbin/cgroup_clean என்று தட்டச்சு செய்துவிட வேண்டும்.

பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.

இப்போது கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.

மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.

இதை செய்துமுடித்தவுடன் எனக்கு நெருப்பு நரி, தண்டர்பேர்டு, ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்கள் வேகமாக இயங்குவதாக தெரிகிறது.

Thursday, November 18, 2010

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver QMLSaver.


இந்த screen saverஐ நிறுவ டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:prodoomman/qmlsaver
sudo apt-get update
sudo apt-get install qmlsaver

இந்த நிரலை இயக்க System->Preferences->Screensaver சென்று QMLSaver ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது பற்றிய ஒரு வீடியோ

Wednesday, November 17, 2010

உபுண்டுவில் screen saverகளை desktop ல் வைக்க

உபுண்டுவில் இருக்கும் screen saverகளை மேசையின்மீது background ஆக வைக்க முடியும். இதற்கு Anibg மற்றும் Shantz-XWinWrap இந்த இரண்டு நிரல்களை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். நிறுவியபிறகு Applications->Accessories->anibg க்கு செல்ல வேண்டும். இந்த நிரல் top panelல் இருக்கும். இதன் மீது கர்சரை வைத்து இடது சொடுக்கவேண்டும். இந்த நிரல்களை தரவிறக்க


இதில் preferences தேர்ந்தெடுத்தால் உபுண்டுவை ஆரம்பிக்கும்போதே வரவழைக்கலாம்.



இது பற்றிய ஒரு வீடியோ

Monday, November 15, 2010

உபுண்டுவில் remote flight control Drone



உபுண்டுவில் remote flight control இப்போது சிறிய அளவில் வந்துள்ளது. சிறிய helicopter வந்துள்ளது. இந்த சிஸ்டம் wifi இணைப்பாகும். இதில் இரண்டு கேமிராக்கள் உண்டு. இது விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 15000 இருக்கும். இது பற்றிய ஒரு வீடியோ. இது open source மென்பொருளாகும்.





இது பற்றிய தகவல்களுக்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து பெறலாம்.

Official website

ubuntuforms

Sunday, November 14, 2010

உபுண்டுவில் தட்டச்சு கற்றுதர ஒரு நிரல் tux typing

உபுண்டுவில் இந்த குழந்தைகள் தினத்தில் அவர்கள் அறிவை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு எழுத்துக்கள் மற்றும் தட்டச்சு செய்யும் திறனை அதிகரிக்கும் விதமாக இருக்கும் நிரல் தான் tux typing. இந்த நிரலை ubuntu software centerலிருந்து நிறுவிக்கொள்ளலாம்.


இந்த நிரல் தட்டச்சு செய்வதை எளிதாக கற்றுத்தருகிறது. நிரலை நிறுவியப்பின் Applications->Education->Tux Typing செல்ல வேண்டும்.




இதில் தமிழ் உண்டு. ஆப்ஷனில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்தால் தமிழ் தட்டச்சு செய்யலாம்.

இது பற்றிய ஒரு வீடியோ

Saturday, November 13, 2010

உபுண்டுவில் நம் கணினித்திரை ஆதரிக்கும் resolutionகள்

உபுண்டுவில் நம்கணினி திரை ஆதரிக்கும் resolution கள் எவை என்று கண்டுபிடிக்க முடியும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get install v86d hwinfo


பின்னர் டெர்மினலில்

sudo hwinfo --framebuffer என்று கட்டளையிட்டால் நம் கணினிதிரை கீழ்கண்ட resolutionகளை ஆதரிக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

Revision: "Hardware Version 0.0"
Memory Size: 7 MB + 704 kB
Memory Range: 0xd0000000-0xd07affff (rw)
Mode 0x033c: 1920x1440 (+1920), 8 bits
Mode 0x034d: 1920x1440 (+3840), 16 bits
Mode 0x033a: 1600x1200 (+1600), 8 bits
Mode 0x034b: 1600x1200 (+3200), 16 bits
Mode 0x035a: 1600x1200 (+6400), 24 bits
Mode 0x0307: 1280x1024 (+1280), 8 bits
Mode 0x031a: 1280x1024 (+2560), 16 bits
Mode 0x031b: 1280x1024 (+5120), 24 bits
Mode 0x0305: 1024x768 (+1024), 8 bits
Mode 0x0317: 1024x768 (+2048), 16 bits
Mode 0x0318: 1024x768 (+4096), 24 bits
Mode 0x0312: 640x480 (+2560), 24 bits
Mode 0x0314: 800x600 (+1600), 16 bits
Mode 0x0315: 800x600 (+3200), 24 bits
Mode 0x0301: 640x480 (+640), 8 bits
Mode 0x0303: 800x600 (+832), 8 bits
Mode 0x0311: 640x480 (+1280), 16 bits
Config Status: cfg=new, avail=yes, need=no, active=unknown