Pages

Saturday, January 8, 2011

உபுண்டுவில் /tmp அடைவில் உள்ள கோப்புகள் கணினி பூட் ஆகும்போது அழியாமல் இருக்க

உபுண்டுவில் /tmp அடைவினுள் இருக்கும் கோப்புகள் கணினி ஆரம்பிக்கும் போது அழிந்துவிடும். அதாவது ஏதேனும் ஒரு வீடியோ கோப்புகள் இணையத்தில் பார்க்கும் போது இந்த அடைவினுள் தான் சேமிக்கப்படும். ஆனால் கணினி மீண்டும் அணைத்துவிட்டு ஆரம்பிக்கும்போது அவைகள் எல்லாம் அழிந்துவிட்டு இருக்கும்.

இந்த கோப்புகள் அழியாமல் இருக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

முதலில் இதை செயல்படுத்தும் கோப்பு /etc/default/ என்ற அடைவினுள் இருக்கும் rcS என்ற கோப்புதான். அதை முதலில் டெர்மினலில் திறந்து கொள்ளவேண்டும்.


இந்த கோப்பினை டெர்மினலில் திறந்தால்

sudo gedit /etc/default/rcS என்று கட்டளை கொடுக்க வேண்டும்.



இந்த கோப்பில் TMPTIME என்பதன் மதிப்பு 0 என்று இருக்கும். அதாவது கோப்புகளை உடனடியாக அழிக்க வேண்டும் என்று இருக்கும்.

இதன் மதிப்பை -1 என்று கொடுத்தால் எப்போது அழியாமல் இருக்கும். அல்லது infinite என்று வார்த்தையால் கொடுத்தாலும் அழியாமல் இருக்கும்.

மேலும் 1 லிருந்து எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமொ அத்தனை நாட்களுக்கு கோப்புகள் அழியாமல் இருக்கும்.

உபுண்டு மற்றும் மற்ற லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஒரு வேண்டுகோள்

உபுண்டு மற்றும் மற்ற லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

All India Council for Technical Education (AICTE) (A statutory body of the Government of India) என்பது இந்தியவில் engineering college மற்றும் polytechnic college ஆரம்பிக்க மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தை நீட்டிக்கவும் அனுமதி வழங்கும் ஒரு அரசு அமைப்பாகும். தொழில்நுட்ப படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இதன் தளமான http://aicte-india.org னை பார்வையிட்டு அதன் படி எந்த கல்லூரி அனுமதி பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த அமைப்பு அறிவித்துள்ள ஒரு அறிவிப்பின்படி அனைத்து தொழில்நுட்பக்கல்லூரிகளும் அதன் இணைய தளத்தில் தம்முடைய கல்லூரிகளை பதிவு செய்தபின்னர் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது மாணவர்களுக்கு ஏற்ற ஒரு அறிவிப்பாகும். எனவே ஒவ்வொரு கல்லூரியும் அதன் இணையத்தளத்தை திறந்து அதில் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி தளத்தினை திறந்தால் முதலில் பதிவு செய்ய அதில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை படித்துக்கொள்ளவேண்டும். அப்படி படிக்குபோதுதான் சில உண்மைகள் நமக்கு அதாவது லினக்ஸ் ஆர்வலர்களுக்கு தெரிய வருகிறது.

பதிவு செய்வதற்கு கீழ்கண்ட கணினி அமைப்புகள் தேவை என்று சொல்லப்படுள்ளது.

1.windows xp service pack 2 with internet explorer 6.0 with service pack2 or internet explorer 7.
2.Windows vista
3.Sun Java Runtime Environment (JRE) 1.5.0 or above is a prerequisite
4.Office 2007


மேற்கண்டவற்றை கணினியில் நிறுவினால் மட்டுமே aicte தளம் வேலை செய்கிறது.



இப்போது பதிவு செய்ய அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் தளம் திறக்கப்பட்டு அதிலும் எந்த வேலையும் லினக்ஸ் உபயோகிப்பாளர்களால் செய்ய முடிவதில்லை.


ஒரு அரசு அமைப்பில் எந்த ஒஸ்ஸிலும் வேலை செய்யலாம் என்று இருக்க வேண்டாமா, இதில் பதிவு செய்வதற்கு எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கி அதன்பிறகுதான் நிறுவ வேண்டும். லினக்ஸிலோ அல்லது நெருப்பு நரி உலாவியிலோ இந்த தளம் வேலை செய்வது கிடையாது.

எனவே லினக்ஸ் ஆர்வலார்கள்தான் இது போன்ற அரசு துறைகளில் open source ஐ பரவ முயற்சி செய்ய வேண்டும். இன்னும் இது போல் எவ்வளவு இருக்கிறதோ தெரியவில்ல. இப்படி வைத்துக்கொண்டு சீனக்காரன் ஊடுறுவினான் என்று சொன்னால் பிரயோசனம் இல்லை.

Thursday, January 6, 2011

உபுண்டுவில் multiboot cd உருவாக்குதல்

உபுண்டுவில் பலவேறு லினக்ஸ் ஒஸ்களை ஒரே சிடியில் காப்பி செய்து அவற்றை bootble cd ஆக செய்ய முடியும். இதற்கு உதவும் ஸ்கிரிப்ட் தான் multicd.sh ஆகும். இந்த ஸ்கிரிப்டை தரவிறக்கி ஒரு அடைவினுள் காப்பி செய்து கொள்ளவேண்டும். நான் இந்த அடைவினை மேசைமீது காப்பி செய்து வைத்துள்ளேன்.

இந்த அடைவினுள் நாம் விரும்பும் ஒஸ்க்களை காப்பி செய்து கொள்ளவேண்டும். ஒஸ்களை இந்த சுட்டியில் கண்டவாறு பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.


இங்கு நான் எடுத்துகொண்டு இருப்பது உபுண்டு 10.10, லினக்ஸ் மின்ட் மற்றும் டினிகோர் எனப்படும் ஒஸ்க்கள். இதில் multicd.sh என்ற தரவிறக்கப்பட்ட ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும்.

இப்போது டெர்மினலில்

arulmozhi@arulmozhi-945GZM-S2:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ cd ubuntu1004

இதில் என்னுடைய அடைவின் பெயர் ubuntu1004.

தரவிறக்கப்பட்ட ஸ்கிரிப்டை இயங்கு நிலையில் வைக்க

sudo chmod +x multicd.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் டெர்மினலில்

sudo ./multicd.sh என்று தட்டச்சு செய்தால் iso கோப்பு உருவாகிவிடும். இதனை ஒரு சிடியில் காப்பி செய்து கணினியில் பூட் செய்தால் multiboot சிடியாக துவங்கும்.





மேலே உள்ள படத்தில் அடைவினுள் iso கோப்பு உருவாகி இருப்பதை பார்க்கலாம்.

Monday, January 3, 2011

உபுன்டுவில் libreoffice ஐ PPA வழியாக நிறுவ

உபுண்டுவில் libreoffice நிறுவுவதற்க்கு தரவிறக்கம் செய்துதான் நிறுவவேண்டியிருந்தது. இப்போது இதற்கேன PPA வந்துள்ளது. டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்தால் software sourceல் சேர்ந்துவிடும்.

sudo add-apt-repository ppa:libreoffice/ppa

sudo apt-get update

sudo apt-get install libreoffice

என்று தட்டச்சு செய்தால் libreoffice நிறுவப்பட்டுவிடும்.

உபுண்டுவில் கணினியில் உருவாகும் கேச் கோப்புகளை அகற்ற

உபுண்டுவில் தேவையில்லாமல் சேர்ந்துவிடும் கேச் கோப்புகளை அகற்ற system clean ஸ்க்ரிப்ட் உதவுகிறது. இதனை தரவிறக்கி ஏதேனும் ஒரு அடைவினுள்ளோ அல்லது மேசைமீதோ வைத்து விரித்துக்கொள்ளவேண்டும். SystemcleanV_1.3 என்ற பெயருடைய அடைவாக இருக்கும்.


இந்த அடைவினுள் இருக்கும் setup என்ற கோப்பினை இரட்டை கிளிக் செய்து வரும் விண்டோவில் run பொத்தானை அழுத்த ஸ்கிரிப்ட் நிறுவப்பட்டு செயல்படதுவங்கும்.

பின்னர் மேசைமீது ஏதெனும் ஒரு இடத்தில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் script->systemclean என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.







இதில் ok பொத்தானை அழுத்தவேண்டும்.


இங்கு yes பொத்தானை அழுத்தவேண்டும்.



நிரல் இயங்கும் போது ஏற்படும் கோப்புகளை நீக்க அந்த நிரலை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.



இப்போது தேவையில்லாத கேச் கோப்புள் அழிந்துவிட்டிருக்கும்.

Friday, December 31, 2010

உபுண்டுவில் steganography ஒரு எளிய நிரல்

உபுண்டுவில் புகைப்படத்தில் தகவல்களை மறைத்துவைக்கும் நிரல்தான் steghide என்பதாகும். இந்த நிரல் synaptic package managerல் உள்ளது. எளிதாக search செய்து நிறுவிக்கொள்ளலாம். இந்த நிரலை பயன்படுத்துவது மிக எளிதானது.




மேலே உள்ள படத்தில் இரண்டு கோப்புகள் அதாவது ஒன்று படக்கோப்பு இரண்டாவது டெக்ஸ்ட் கோப்பாகும். இந்த டெக்ஸ்ட் கோப்பினை படக்கோப்பில் மறைத்து வைக்க முடியும். படக்கோப்பு jpg வடிவில் இருக்க வேண்டும்.

டெர்மினலில் கீழ்கண்டவாறு கட்டளையிட வேண்டும்.

steghide embed -cf gra.jpg -ef gra.txt

மேற்கண்டவாறு கட்டளையிட்டவுடன் டெர்மினலில்

Enter passphrase: கேட்கும். இங்கு நாம் ஒரு கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். கொடுத்தவுடன் ReEnter passphrase கேட்கும். திரும்ப அதே கடவுச்சொல்லை கொடுத்தவுடன் டெக்ஸ்ட் கோப்பு படக்கோப்பில் மறைக்கப்படுவிடும்.

இதனை மீண்டும் வெளிகொணர கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

steghide extract -sf gra.jpg என்று கட்டளை கொடுத்தவுடன்

Enter passphrase கேட்கும். கோப்பினை மறைப்பதற்கு கொடுத்த அதே கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கோப்பு தனியாக பிரிக்கப்பட்டுவிடும்.




steganography என்பதை பற்றி கேள்விபட்டு இருப்போம். இதனை நாமே செய்து பார்க்க இருக்கும் ஒரு சிறிய மற்றும் எளிமையான நிரல்தான் இது.

Monday, December 27, 2010

உபுண்டுவில் வெப் காமிராவை security cam ஆக மாற்ற

உபுண்டுவில் வெப் காமிராவை செக்யூரிட்டி காமிராவாக பயன்பத்திக்கொள்ளமுடியும். இதற்கு முதலில் motion என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரல் synaptic package managerல் உள்ளது.


இந்த நிரலை இயக்க வெப் காமிராவை கணினியுடன் இணைத்தவுடன் டெர்மினலில்

sudo motion என்று தட்டச்சு செய்தால் நிரல் இயங்க துவங்கும். சீரான இடைவெளியில் படங்கள் எடுத்து /tmp/ அடைவினுள் செமித்துக்கொள்ளும். முதலில் .swf என்ற கோப்பு உருவாகிவிடும்.பின்னர் படங்கள் கோப்பு உருவாகும்.


இந்த படங்களை நெருப்பு நரி உதவியுடன் பார்க்க முடியும். அட்ரஸ் பாரில் localhost:8081 என்று தட்டச்சு செய்தால் படங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

/tmp/motion/ அடைவிற்கு சென்று .swf கோப்பினை நெருப்பு நரியில் திறந்தால் உலாவியில் வீடியோவாக தெரியும். இந்த அடைவினுள் இருக்கும் கோப்பினை வேறு ஒரு கோப்பிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும். கணினியை மீளதுவங்கினால் /tmp/motion அடைவு அழிக்கப்பட்டு இருக்கும்.


கீழே ஒரு இதற்கேன ஒரு வீடியோ