முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo gedit /etc/sysctl.conf
இதில் sysctl.conf என்ற கோப்பு etc என்ற அடைவினுள் இருக்கும். இந்த கோப்பினை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
இந்த கோப்பினுள் கீழ்கண்ட வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட வேண்டும்.
kernel.sysrq = 1

பின்னர் சேமித்து வெளியேற வேண்டும்.
இப்போது கணினி உறைந்து போய் நின்று விட்டால் alt+sysrq பொத்தான்களை அழுத்தி கீழ்வரும் எழுத்துக்களை அழுத்தவேண்டும்.
R S E I U B என்ற எழுத்துக்களை அழுத்தினால் கணினி திரையில் எழுத்துக்கள் ஒடி ஒரிடத்தில் வந்து நிற்கும். பின்னர் control+alt+f7 என்ற மூன்று கீகளையும் ஒருசேர அழுத்தினால் login பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். அதை கொடுத்த பின் console மொடில் இருக்கும். இங்கு sudo reboot என்று கொடுத்தால் கணினி எந்தவிதமான டேட்டா இழப்பு இல்லாமல் reboot ஆகிவருவதை பார்க்கலாம்.
ஒருசில keyboard களில் இந்த கீ இருக்காது. printscr என்று இருக்கும்.
No comments:
Post a Comment