உபுண்டு நெருப்பு நரியை பயன்படுத்துவோர்கள் முதலில் செய்ய வேண்டியது இரண்டு முக்கிய குறிப்புகள்
- home அடைவினுள் இருக்கும் .mozilla என்ற மறைக்கப்பட்ட அடைவினை ஒரு backup எடுத்துகொள்ள வேண்டும்.
- நெருப்பு நரி முகவரி பெட்டியில் about: config தட்டச்சு செய்து உள்ள போகும் போது என்ன மாற்றம் செய்ய போகிறோமொ அதை முதலில் அதன் default மதிப்பு மற்றும் மாற்றம் செய்ய போகும் வரிகளை ஆகியவற்றை தனியாக ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
about:config ல் இருக்கும் அனைத்து அமைப்புகளும் home அடைவினுள் இருக்கும் ./mozilla என்ற மறைக்கப்பட்ட அடைவினுள் இருக்கும் /firefox/xxx.default/prefs.js என்ற கோப்பில் இருக்கும். இதில் xxx.default என்ற அடைவானது .mozilla/firefox/profiles.ini என்ற கோப்பினுள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
profile.ini என்ற கோப்பினுள் path=xxx.default என்ற அடைவு தான் நம்முடைய profile ஆகும்.
இன்றையதினம் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கலை பற்றி பார்ப்போம். about:config பகுதிக்குள் நுழைந்து அதில் கீழ்கணட வரியில் தவறுதாலாக செய்த சிறு மாற்றம் தான் சிக்கலுக்கு காரணம்.
இன்றையதினம் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கலை பற்றி பார்ப்போம். about:config பகுதிக்குள் நுழைந்து அதில் கீழ்கணட வரியில் தவறுதாலாக செய்த சிறு மாற்றம் தான் சிக்கலுக்கு காரணம்.
மேற்கண்ட படத்தில் layout.css.devPixelsPerPx என்பதன் மதிப்பு -1 என்று இருக்க வேண்டும். தவறுதாலாக 96 என்று மாற்றி விட நெருப்பு நரியில் கீழ்கண்ட வாறு தெரிய ஆரம்பித்தது.
இதை சரிசெய்ய home அடைவினுள் இருக்கும் .mozilla/firefox/xxx.default/prefs.js என்ற கோப்பினை திறந்து அதில் layout.css.devPixelsPerPx அதன் மதிப்பு 96 ஆக இருக்கும்.
இந்த 96 என்பதை -1 என்று மாற்றி சேமித்து வெளியேற நெருப்பு நரி மீண்டும் நல்ல முறையில் இயங்கியது.இந்த கோப்பினை திறக்கவோ அல்லது சேமிக்கவோ டெர்மினல் செல்ல தேவையில்லை.
இப்போது நெருப்பு நரி திறக்க நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது.
2 comments:
மிக்க நன்றி
நன்றி ஹரி
Post a Comment