முதலில் டெர்மினலில்
firefox என்று தட்டச்சு செய்ய வேண்டும். அல்லது
/usr/bin/firefox என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
புதியதாக ஒரு டேப்பில் இணைய தளத்தை திறக்க
/usr/bin/firefox www.ubuntuintamil.blogspot.com
என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
புதியதாக ஒரு விண்டோவில் இணையதளத்தை திறக்க
/usr/bin/firefox -new-window http://www.ubuntuintamil.blogspot.com/
என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
நெருப்பு நரியில் ஏதேனும் ஒரு வார்த்தையை கொடுத்து தேடவேண்டும் என்றால் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.
/usr/bin/firefox -search "word"
நெருப்பு நரியில் preferences ஐ திறக்க வேண்டுமென்றால் Edit->preferences செல்ல வேண்டும். இதையே டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை கொடுத்தால் திறக்கலாம்.
/usr/bin/firefox -preferences
நெருப்பு நரியை default உலாவியாக வைப்பதற்கு கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.
/usr/bin/firefox -setDefaultBrowser
நெருப்பு நரி செல்லாமல் டெர்மினலில் அனைத்தையும் செய்ய முடியும்.
1 comment:
பயனுள்ள பதிவு.
Post a Comment