Pages

Tuesday, October 13, 2009

உபுண்டுவில் இணையத்தின் வேகத்தை காண

உபுண்டுவில் இணையத்தின் வேகத்தை காண netspeed என்னும் நிரல் உதவுகிறது.

Synaptic Package Manager சென்று அதன் search boxல் netspeed என்று தட்டச்சு செய்து நிரலை தேர்வு செய்து நிறுவி கோள்ளவேண்டும்.

இதன் பின்னர் panel ல் ரைல் கிளிக் செய்தால்
இதில் காணும் network monitorஐ இழுத்து panilல் விட்டால்

மேற்கண்ட படத்தில் காணப்படும் கீழ்நோக்கிய அம்பு குறியுடனும் மேல்நோக்கிய அம்புகுறியுடனும் காணப்படும் பகுதியில் நாம் ஏதேனும் கோப்பையோ அல்லது இணையத்தில் உலாவும்போதோ நெட்ஸ்பீடு தெரியும்.

பின்னர் ஐகானில் சென்று இடது கிளிக் செய்தால் Device Details தேர்வு செய்தால் input/output graph தெரியும். இதில் download/upload அளவு தெரியும்.

பின்னர் Preference சென்றால் network device நாம் தேர்ந்தேடுத்துக்கொள்ளலாம்.

Monday, October 12, 2009

உபுண்டுவில் photo printer

நேற்று Add/Removeல் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட ஒரு நிரல்தான் Gnome Photo Printer.பலவகையில் உபயோகமாகயிருக்கும்.

Applications->Add/Remove->Gnome Photo Printer என்று search boxல் தேடி நிரலை தேர்ந்தெடுத்து apply செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

Applications->Graphics->Gnome Photo Printer இப்போது நிரல் வேலை செய்யதொடங்கும்.

இந்த பகுதியில் +Add அழுத்தினால் படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் பலவித layoutகளையும் custom size வைத்துக்கொள்ளலாம்.
அளவுகளை சரிசெய்ய உதவுகிறது.

இதில் printerகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த பகுதியில் paper size, margin, போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது. print previewயும் பார்த்துக்கொள்ளலாம். பின்னர் print செய்துக்கொள்ளலாம்.ஒரே பக்கத்தில் பல படங்களையும் அச்சு எடுத்துக்கொள்ளலாம்.

Sunday, October 11, 2009

உபுண்டுவில் HP printer

உபுண்டுவில் printer வேலை செய்வதைப்பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும் HP printerகள் நன்றாக வேலை செய்கிறது. இதற்கு Applications-Add/Removeல் HP Toolbox நிறுவிக்கொள்ளவேண்டும். நேற்றுதான் இந்த வகை printer ஒன்று HP deskjet F4288 என்ற பேசிக் மாடல் பிரின்டர் வாங்கினேன். இந்த பிரின்டர் உபுண்டுவில் நன்றாக வேலை செய்கிறது. இதில் scanம் நன்றாக இருக்கிறது. Applications->Graphics->Xsane Image Scanning program உதவியாக இருந்தது.


பொருத்தி பார்த்ததில் கச்சிதமாக வேலை செய்ய ஆரம்பித்தது.printer test page கொடுத்தவுடன் அழகாக output வந்தது.
மேலே கண்ட படம் அதே பிரின்டரில் ஸ்கேன் செய்யப்பட்டது.

உபுன்டுவில் wallpaper தானாகவே மாறுவதற்கு

உபுண்டுவில் wallpaper தானாகவே ஒரு நிமிடத்திலோ அல்லது ஐந்து நிமிடத்திலோ நம் விருப்பம் போல் அமைத்து கொள்ள ஒரு நிரல்.

getdeb.net சென்று webilder_0.6.4-1~getdeb1_all.deb மற்றும் webilder-gnome_0.6.4-1~getdeb1_all.deb ஆகிய இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் இந்த நிரலை Add to panel லில் நிறுவவேண்டும்.

panelலில்
சிறிய வடிவில் இருக்கும் கேமராவில் கர்ஸரை கொண்டும் சென்று இடது கிளிக் செய்தால் preference வரும்.


இதில் நான்கு options உள்ளது.
1.General optionல் எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை wallpaper மாற வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம். auto downloader என்பது தானாகவே படங்களை download செய்யவேண்டும் என்பதை செட் செய்யலாம்.
2.flickr இதில் flickr.com ல் இருந்து படங்களையும் ஆல்பங்களையும் இறக்கிக் கொள்ளலாம்.flickr.comல் இருக்கும் பல்வேறு படங்களின் தொகுப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
3.webshot இத்தளத்திலிருந்தும் user name and password கொடுத்து படங்களை தரவிறக்கிக் கொள்ளலாம். இதற்கு webshot.com தளத்தில் கணக்கு ஒன்று துவக்கிக்கொள்ளவேண்டும்.
4.Advanced இதில் படங்கள் இருக்கும் folder பெயரை குறிப்பிடவேண்டும்.

இந்த நிரலை பற்றி ஒரு வீடியோ.

Friday, October 9, 2009

உபுண்டுவில் ஒரு driveஐ image கோப்பாக மாற்றுதல்

உபுண்டுவில் ஒரு driveஐ image file ஆக காப்பி செய்து வேறொறு driveல் காப்பி செய்தல் அல்லது அதே driveல் restore செய்தல்.

#sudo apt-get install partimageஎன்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். இந்த நிரலை செயற்படுத்த

#sudo partimage என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ விரியும்.

இதில் பல partitionகள் தெரியும். அதில் எந்த partitionஐ காப்பி செய்ய வேண்டுமொ அதை தேர்வு செய்து Tab பொத்தனை அழுத்தி Image file to create/use என்ற இடத்தில் image file name தர வேண்டும். பின்னர் action to be done என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டத்தில் Save partition into a new image file என்பதை தேர்வு செய்து F5 பொத்தனை அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதில் Compression levelல் gzip அல்லது bzip2 தேர்வு செய்து பின்னர் image file ஒரே கோப்பாகவோ அல்லது பல கோப்புக்களாகவோ பிரித்து கோள்ளலாம். Image split modeல் Into file whose size என்பதனை தேர்வு செய்து எவ்வளவு sizeல் கோப்பு வேண்டுமோ அதை தட்டச்சு செய்யவேண்டும்.பின்னர் F5 தட்டச்சு செய்தால் கீழ்கண்ட விண்டோ விரியும்.
இதில் ok அழுத்தவும்.Save partition to image file என்ற தலைப்பில் விண்டோ விரியும்

இதில் ok கொடுத்து அழுத்தவும்.NTFS Information என்ற விண்டோ விரியும்


இங்கும் ok அழுத்தவும்.Save partition to image file


இந்த விண்டோவில் drive save ஆக தொடங்கும். நிரல் முடிந்தவுடன்

இங்கே ok அழுத்தி நிரலை முடிக்கலாம். restore செய்யவேண்டுமானாலும் இந்த நிரலில் முடியும்.முதல் படத்தில் Save partition into image file என்பதற்கு பதிலாக Restore partition from an image file என்பதனை தேர்வு செய்யவேண்டும்.சேமிக்கப்பட்டimage கோப்பு home folderல் சேமிக்கபட்டுவிடும்.

உபுண்டுவிற்க்கும்(9.10) விண்டோஸிற்க்கும்(7RC) ஒரு போட்டி

உபுண்டு 9.10 alpha 2விற்கும், விண்டோஸ் 7RC க்கும் நடுவே நடந்த ஒரு சுவாரஸ்யமான போட்டி. இந்த வீடியோவை பார்க்கலாம்.


youtube.comஐ பார்வையிட்டு கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட வீடியோ.

Thursday, October 8, 2009

உபுண்டுவில் space எந்தெந்த folder க்கு எவ்வளவு இடம்.

உபுண்டு நிறுவப்பட்ட வட்டில் எந்தெந்த folderகள் எவ்வளவு இடம்(space) என்பதை பார்க்க. கீழ்கண்ட நிரலை நிறுவினால் தெரியும்.

டெர்மினலில்
#sudo apt-get install xdiskusage என்று தட்டச்சு செய்து enter அழுத்தியதும் நிரல் நிறுவப்பட்டுவிடும். மீண்டும் டெர்மினலில்

#sudo xdiskusage என்று தட்டச்சு செய்தால் பின்வரும் விண்டோ கிடைக்கும்.

தனிதனியாககூட folder name அதற்குரிய இடத்தில் தட்டச்சு செய்தால் folderன் கொள்ளளவு தெரியும்.