Pages

Monday, November 29, 2010

உபுண்டு Places மெனுவில் மேலும் அடைவுகளை சேர்த்தல்

உபுண்டு Places மெனுவில் ஒரு சில அடைவுகள்தான் இருக்கும். அதில் மேற்கொண்டு அடைவுகளை சேர்க்க முடியும்.


முதலில் Home அடைவினுள் நாம் சேர்க்க விரும்பும் அடைவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்கனவே இருக்கும் அடைவனாலும் இருக்கலாம்.


மேலே உள்ள படத்தில் இருக்கும் அடைவான Public என்ற அடைவிவை எடுத்துக்கொள்வோம். இந்த அடைவினை Places மெனுவில் சேர்ப்பது பற்றிப்பார்ப்போம்.

முதலில் டெர்மினலில்

gksudo gedit .gtk-bookmarks

என்ற கட்டளையை கொடுத்து home அடைவினுள் இருக்கும் .gtk-bookmarks என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.

file:///home/user name/Public


இப்போது Places மெனுவில் Public என்ற அடைவு வந்திருப்பதை பார்க்கலாம்.


gtk-bookmarks என்ற கோப்பானது home அடைவினுள் மறைக்கப்பட்ட கோப்பாக இருக்கும்.

Sunday, November 28, 2010

உபுண்டுவில் ALt+printscr பயன்படுத்தி screenshot எடுத்தல்



உபுண்டு 10.10 நிறுவப்பட்டவுடன் Alt+prinscr ஐ பயன்படுத்தி screenshot எடுக்க முடியவில்ல. இந்த கீக்களின் செயல்படுகளை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். அந்த சுட்டி.

மீண்டும் செயல்பட வைக்க டெர்மினலில்.

sudo gedit /etc/sysctl.conf என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில்

kernel.sysrq = 1 என்ற வரியை kernel.sysrq = 0 என்று மாற்றிவிடவேண்டும். இப்போது alt+printscr பயன்படுத்தி screenshot எடுக்கலாம்.


Tuesday, November 23, 2010

உபுண்டுவில் தேவையில்லாத கோப்புகள்/அடைவுகளை நீக்க

உபுண்டுவில் தேவையில்லாத அடைவுகள் மற்றும் கோப்புகளை சிரமமின்றி நீக்குவதற்கு ஒரு எளிய நிரல். இதனை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவேண்டும்.. இந்த கோப்பு zip வடிவில் இருக்கும். இந்த கோப்பினை exatract செய்யும் போது FCLEANER-2.2 என்ற அடைவாக இருக்கும்.


மேற்கண்ட அடைவினுள் இருக்கும் install.sh என்ற கோப்பினை இரட்டை கிளிக் செய்ய நிரல் நிறுவப்பட்டுவிடும்.

இதனை இயக்க Applications->Accessories->File-organiser செல்ல வேண்டும்.



இந்த நிரல் இயங்கும்போது



இதில் ok பொத்தானை அழுத்த கோப்புகளை அழிக்க வேண்டிய அடைவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்தவுடன் கோப்புகள் அழிக்கப்பட்டு இருக்கும்.







Monday, November 22, 2010

உபுண்டுவில் gnome panel font bold/italic/font size மாற்ற

உபுண்டுவில் top panelல் உள்ள எழுத்துக்களை பளீச்சென்று, சாய்வாக மற்றும் எழுத்துருவின் அளவை மாற்ற முடியும். இதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo gedit .gtkrc-2.0 என்று தட்டச்சு செய்து .gtkrc-2.0 என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். கோப்பு இல்லையேன்றால் காலி கோப்பாக திறக்கும். அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவும்.


style "modpanel"
{
font_name = "Bold 10"
}
widget "*PanelWidget*" style "modpanel"
widget "*PanelApplet*" style "modpanel"
widget "*fast-user-switch-applet*" style "modpanel"

பின்னர் செமித்து வெளியேறிவிடவேண்டும். மேற்கண்ட கோப்பினை செயல்படுத்த டெர்மினலில்

killall gnome-panel என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

சாதாரண நிலையில் பேனல்


மேலே உள்ள வரிகளில் font_name="Italic 10" என்று மாற்றினால்


font_name="Bold 10" என்று மாற்றினால்


font_name="Bold 12" என்று மாற்றினால்


இதில் ( ") குறியீடு நேராக இருக்க வேண்டும். சாய்வாக இருக்க கூடாது.

Saturday, November 20, 2010

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் உறைந்து போகாமல் காண

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது சில சமயம் உறைந்து நின்றுவிடுகிறது. மீண்டும் சின்னதாக அமைத்து மீண்டும் முயற்சிகையில் தான் சரியானது. இப்போது இதற்கு ஒரு வழி உள்ளது.

டெர்மினலில்

sudo mkdir /etc/adobe என்று தட்டச்சு செய்து /etc/adobe என்ற ஒரு அடைவினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /etc/adobe/mms.cfg என்று தட்டச்சு செய்து mms.cfg என்ற ஒரு காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவும்.

OverrideGPUValidation=true

சேமித்து வெளியேறிவிடவும்.

இப்போது youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது உறைந்து போவதில்லை.

உபுண்டு கணினி விரைவாக இயங்க ஒரு கர்னல் patch

உபுண்டு கணினி வேகமாக இயங்க ஒரு கர்னல் பேட்ச். இதை அளித்தவர் Red Hatன் developer Lennart Poettering, கர்னலை உருவாக்கிய LinusTorvaldsக்கு எழுதிய பதிலில் தெரிவித்திருக்கிறார்.

இதை எப்படி உபுண்டுவில் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

1.முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/rc.local என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். அதில் exit 0 என்பதற்கு மேலாக கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட வேண்டும்.

mkdir -p /dev/cgroup/cpu
mount -t cgroup cgroup /dev/cgroup/cpu -o cpu
mkdir -m 0777 /dev/cgroup/cpu/user
echo "/usr/local/sbin/cgroup_clean" > /dev/cgroup/cpu/release_agent



பின்னர் சேமித்து வெளியேறிவிடவேண்டும். டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo chmod +x /etc/rc.local

2.Home அடைவினுள் இருக்கும் ./bashrc என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit ./bashrc அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

if [ "$PS1" ] ; then
mkdir -p -m 0700 /dev/cgroup/cpu/user/$$ > /dev/null 2>&1
echo $$ > /dev/cgroup/cpu/user/$$/tasks
echo "1" > /dev/cgroup/cpu/user/$$/notify_on_release
fi



3.டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்து புதிய ஒரு கோப்பினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/local/sbin/cgroup_clean இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

#!/bin/sh
rmdir /dev/cgroup/cpu/$*

பின்னர் டெர்மினலில்

sudo chmod +x /usr/local/sbin/cgroup_clean என்று தட்டச்சு செய்துவிட வேண்டும்.

பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.

இப்போது கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.

மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.

இதை செய்துமுடித்தவுடன் எனக்கு நெருப்பு நரி, தண்டர்பேர்டு, ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்கள் வேகமாக இயங்குவதாக தெரிகிறது.

Thursday, November 18, 2010

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver QMLSaver.


இந்த screen saverஐ நிறுவ டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:prodoomman/qmlsaver
sudo apt-get update
sudo apt-get install qmlsaver

இந்த நிரலை இயக்க System->Preferences->Screensaver சென்று QMLSaver ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது பற்றிய ஒரு வீடியோ