Pages

Sunday, February 27, 2011

உபுண்டுவில் libreoffice 3.3.1



உபுண்டுவில் libreoffice ன் புதிய பதிப்பு 3.3.1 வெளி வந்துவிட்டது. இதனை எப்படி நிறுவுவது என்பது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி.

சுட்டி1

சுட்டி2

தற்சமயம் புதிய பதிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே நிறுவியவர்கள் update செய்துகொள்ளலாம். புதியதாக நிறுவ விரும்புவர்கள் ppa மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

Thursday, February 24, 2011

உபுண்டுவில் வீடியோ ஒலியினை தனியாக mp3 வடிவில் பிரித்தல்

உபுண்டுவில் வீடியோக்களை ஒடவிடும்போது அதன் ஒலியினை தனியாக mplayer மூலம் பிரித்தெடுக்க முடியும். டெர்மினலில் இதன் கட்டளையை செயல்படுத்த முடியும்.

1. இந்த கட்டளை

mplayer -dumpaudio -dumpfile output_filename.mp3 input.video_file.name


2.avi கோப்பிலிருந்து பிரித்தல்

mplayer -dumpaudio -dumpfile clip_track.mp3 clip.avi

3. vcdயிலிருந்து பிரித்தல்

mplayer vcd://04 -cdrom-device /dev/sr0 -dumpaudio -dumpfile /tmp/track04.mp3

4.dvdயிலிருந்து பிரித்தல்

mplayer dvd://04 -cdrom-device /dev/sr0 -dumpaudio -dumpfile /tmp/track04.mp3

5.இணையதளத்திலிருந்து stream ஆக ஒலிக்கும் போது பிரித்தல்

mplayer -dumpstream http://example.com/xyz/3 -dumpfile /tmp/stream_03.mp3


Wednesday, February 23, 2011

உபுண்டுவில் எந்த ஒரு இணையதளத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கமல் வைக்க

உபுண்டுவில் எந்த ஒரு இணையதளத்தையும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்காமல் இருக்க வைக்க முடியும். உதாரணமாக google.com ஐ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்காமல் இருக்க வைக்க முடியும். இதற்கு உதவும் நிரல் self control.

இந்த நிரலை நிறுவ இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதனை இயக்க

Applications->Internet->Self Control செல்ல வேண்டும்.



இதில் Add பொத்தானுக்கும் முன்னால் இருக்கும் இடத்தில் தடை செய்ய வேண்டிய இனைய தள முகவரியை தட்டச்சு செய்து add பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் Block Timeல் எத்தனை நிமிடங்கள் தடை செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும். பின்னர் start பொத்தானை அழுத்தினால் இணைய தள முகவரி திறக்காது.

மீண்டும் நம்மால் தடை செய்யப்பட்ட இணைய தள முகவரி திறக்க மீண்டும் self control சென்று குறிப்பிட்ட இணைய தல முகவரியை தேர்ந்தெடுத்து Delete பொத்தானை அழுத்தினால் block listல் இருந்து நீக்கப்பட்டுவிடும்.

Sunday, February 20, 2011

உபுண்டுவில் random password

உபுண்டுவில் நமக்கு தேவையான கடவுச்சொல்லை மிக எளிதில் உருவாக்கிக்கொள்ளலாம். நமக்கு தேவையான நீளத்திற்கு உருவாக்கலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

gedit ~/.bashrc

ஹோம் அடைவினுள் இருக்கும் .bashrc என்ற கோப்பு திறக்கும் அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து சேமித்து மூடிவிடவேண்டும்.

genpasswd() {
local l=$1
[ "$l" == "" ] && l=16
tr -dc A-Za-z0-9_ < /dev/urandom | head -c ${l} | xargs }




பின்னர் டெர்மினலில்

genpasswd என்று தட்டச்சு செய்தால் random password உருவாகிவிடும்.

இந்த கட்டளையை கீழ்கண்ட முறையிலும் கொடுக்கலாம்.

genpasswd 8 என்று கொடுத்தால் கடவுச்சொல் 8 எழுத்துக்கள் கொண்டதாக இருக்கும். இந்த எண்னிக்கையை நமக்கு தேவையான அளவு மாற்றிக்கொள்ளலாம்.

Saturday, February 19, 2011

உபுண்டுவில் openshot video editor பற்றிய ஒரு வீடியோ

உபுண்டுவில் openshot video editor பற்றிய ஒரு சிறு விளக்க வீடியோ. இதன் மூலம் இந்த நிரலில் எப்படி வேலை செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியும்.



இதன் மூலம் வீடுகளில் நடக்கும் சிறு விழாக்களிலும் வீடியோ எடுத்து அதனை ஒரு தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரைப்போல் எடிட் செய்ய முடியும்.

Friday, February 18, 2011

உபுண்டுவில் open shot video editor 1.3.0

உபுண்டுவில் நம்முடைய வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருள் openshotvideo editor இப்போது 1.3.0 புதிய பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோக்களை நம்முடைய விருப்பம் போல் எடிட் செய்து கொள்ளலாம்.

முதலில் இதனை நிறுவுவதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:jonoomph/openshot-edge
sudo apt-get update
sudo apt-get install openshot openshot-doc

இந்த நிரலை செயல்படுத்துவதற்கு Applications->Sound & video->Open shot video editor செல்ல வேண்டும்.


இதில் பல வீடியோ மற்றும் ஆடியோக்களை சேர்த்து எடிட் செய்து கொள்ளலாம். இந்த நிரலில் 3டி அனிமே ஷன் டெக்ஸ்ட் title செயல்படுத்துவதற்கு blender என்ற நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும்.

Blender நிறுவுவதற்கு கீழ்கண்ட கட்டளைகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:cheleb/blender-svn
sudo apt-get update
sudo apt-get install blender

நிறுவியப்பிறகு openshot video editor திறந்து Edit->Preferences சென்றால் அதில் Blender Executable பகுதியில் /usr/bin/blender என்று தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.


பின்னர் அனிமே ஷன் இல்லாத டெக்ஸ்டை எடிட் செய்வதற்கு inskape என்ற மென்பொருளை இதில் நிறுவிக்கொள்ள வேண்டும். இந்த நிரல் ubuntu software centerல் இருக்கிறது. இந்த நிரலை நிறுவாவிட்டாலும் பரவாயில்லை.

இப்போது முழுமையான வீடியோ எடிட்டர் நிறுவப்பட்டுவிட்டது. சென்ற பதிவில் இந்த நிரலை பற்றி எழுதியிருந்தேன். இந்த நிரலை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ.




Monday, February 14, 2011

உபுண்டுவில் cairo dock மேசை

உபுண்டுவில் cairo dock மேசையை எளிதாக நிறுவிக்கொள்ளலாம். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

sudo add-apt-repository ppa:cairo-dock-team/ppa
sudo apt-get update
sudo apt-get install cairo-dock

நிறுவியப்பின் நிரலை இயக்க Applications->system tools-> GLX-Dock (Cairo-Dock withOpenGPL) செல்ல வேண்டும்.


Cairo dockல் configure செய்ய அதன் இடத்தில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் Configure செல்ல வேண்டும்.




இதனை கணினி ஆரம்பிக்கும்போது ஆரம்பிக்க Launch cairo-dock on startup என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது பற்றிய ஒரு வீடியோ




மேற்கண்ட வீடியோ Desktop recorder, open shot video editor மற்றும் blender ஆகிய மூன்று மென்பொருட்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.