Applications->Add/removeல் சென்று அதன் செர்ச் பாக்ஸில் pdfsam என்று தட்டச்சு செய்து இந்த நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.
Applications->Office->pdfsam என்று தொடங்கினால்
1.plugin->split

இதில் pdf கோப்பை Add கீ மூலம் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் இந்த pdf கோப்பில் உள்ள பக்கங்களை எவ்வாறு பிரிப்பது என்பதை தேர்வு செய்யவேண்டும்.இங்கு பக்கங்களை பிரிக்கும் போது 1,3,5... ஆகவோ அல்லது 2,4,6.. ஆகவோ பிரிக்கமுடியும் அல்லது size படியு பிரிக்க முடியும். பின்னர் எந்த folderல் சேமிக்க வேண்டுமோ அதை தெர்வு செய்ய வேண்டும். run என்பதை அழுத்தினால் கோப்பு பல பக்கங்களாக பிரியும்.
2.plugin->merge/Extract

மேலே கண்ட விண்டோவில் Add பட்டனை அழுத்தி எந்தெந்த pdf கோப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் எந்த folderல் சேமிக்க வேண்டுமோ அதை தெர்வு செய்து run கட்டளையிட்டால் தனித்தனியாக இருக்கும் pdf கோப்புகள் ஒன்றாக இணைந்துவிடும்.
No comments:
Post a Comment