உபுண்டுவில் caps/numeric/scroll கீக்களை அழுத்தும்போது திரையின் வலது ஒரத்தில் notification வரவழைக்க முடியும். இதற்கு compiz config settings manager மூலம் செயல்படுத்த முடியும்.

1. முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து compizconfig settings manager ஐ நிறுவிக்கொள்ள வேண்டும்.
sudo apt-get install compizconfig-settings-manager
2.பின்னர் notifyosdஐ மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
sudo add-apt-repository ppa:leolik/leoli
sudo apt-get update && sudo apt-get upgrade
sudo apt-get install libnotify-bin
pkill notify-osd
3.இந்த
சுட்டியிலிருந்து ஸ்கிரிப்டை தரவிறக்கி அதை home அடைவினுள் scripts என்னும் அடைவினுள் சேமித்துக்கொள்ளவேண்டும். இந்த ஸ்கிரிப்டை இயங்கு நிலையில் வைக்க ஸ்கிர்ப்டில் வலது சொடுக்கி வரும் விண்டோவில் properties->permission சென்று Execute நேரில் உள்ள பெட்டியைல் டிக் செய்திடவேண்டும்.

4.System->preferences->compizconfig settings manager சென்று அதில் General ஆப்ஷனில் உள்ள Commands enable செய்து அதில் இரட்டை கிளிக் செய்ய வேண்டும். வரும் விண்டோவில் உள்ள command line களில் கீழ்காணும் கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.
command line 0 -> /home/username/scripts/lock_keys caps
command line 1 -> /home/username/scripts/lock_keys num
command line 2 -> /home/username/scripts/lock_keys scrl

பின்னர் அதில் key bindings பகுதிக்கு செல்ல வேண்டும்.

இதில் run command 0விற்க்கு நேரே உள்ள பெட்டியில் disable என்று இருக்கும். அதில் கர்சரை வைத்து கிளிக் செய்ய வரும் விண்டோவில் enable டிக் செய்திட கீழ்காணும் விண்டோ வரும்.

இதில் grab key combination கிளிக் செய்துவிட்டு commands பகுதியில் command line 0 வில் என்ன கட்டளை கொடுத்தோமோ அதாவது /home/username/scripts/lock_keys caps என்று கொடுத்து இருப்போம் அதனால் key board உள்ள caps lock பொத்தானை அழுத்தி ok பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும். இதே போல் மற்ற கீக்களையும் அதாவது run command 1 மற்றும் run command 2லும் செயல்படுத்த வேண்டும்.
இப்போது caps/numerical/scroll கீக்களை அழுத்த திரையின் வலது ஒரத்தில் notification வருவதை பார்க்கலாம்.