உபுண்டுவின் புதிய பதிப்பான 11.04ல் medibuntu repository எப்படி நிறுவுவது என்பதைப்பற்றி பார்க்கலாம்.

மேசையின்மீது இருக்கும் ubuntu software centerல் கிளிக் செய்து Edit->software sources என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். software sources திறந்தவுடன் அதில் other software->add தேர்ந்தெடுத்து வரும் விண்டோவில் கீழ்கண்ட வரியினை சேர்த்துவிடவேண்டும்.
deb http://packages.medibuntu.org/ natty free non-free


பின்னர் authentication key பெறுவதற்க்கு இந்த சுட்டியினை சொடுக்கவும். அப்படி சொடுக்கினால் வரும் விண்டோவில் இருக்கும் டெக்ஸ்டினை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் செமித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் software sources->authentication->import key file என்பதனை தேர்ந்தெடுத்து மேலே செமித்து வைத்திருக்கும் கோப்பினை தேர்ந்தெடுத்தால் authentication key சேர்ந்துவிடும்.

இப்போது டெர்மினலுக்கு வந்து கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo apt-get update
sudo apt-get install w32codecs libdvdcss2
இதில் நமக்கு தேவையான கோடக்குகள் நிறுவப்பட்டு ஆடியோ மற்றும் வீடியோ பார்க்க முடியும்.
2 comments:
எதுக்கு அவ்வளவு பிரச்சினை? இங்கே போய் காப்பி செய்து டெர்மினல்லே பேஸ்ட் செய்தா போச்சு! http://medibuntu.org/repository.php
உண்மைதான் ஆனால் டெர்மினலில் கட்டளையிட்டால் சில கணினிகளில் medibuntu repository சேரவில்லை நண்பர்கள் சொன்னதால் இந்த முறை
Post a Comment