என்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு.
முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரையல் வெர்ஷன். எனவே இதில் உபுண்டுவை நிறுவி அலுவலக பணிக்காக பயன்படுத்த முடிவு செய்தேன். எல்லா நிறுவல் வேலைகளும் எளிதாக முடிந்தது. உபுண்டுவின் புதிய பதிப்பான 11.04 நிறுவினேன்.
அனைத்து வன் பொருட்களும் நல்ல முறையில் இயங்கின. எந்தவித மென்பொருள்களும் இதற்கென்று நிறுவவில்லை. sound card, network card, wireless network போன்றவைகளில் எந்தவித பிரச்னை இல்லாமல் இயங்கியது.
பின்னர் system info என்ற மென்பொருளினை பயன்படுத்தி மடிக்கணினியினுள் எந்தெந்த பாகங்கள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
1.பொதுவான கணினியின் தகவல்கள்
2.இதன் cpu வை பார்க்கலாம்
3.இதன் ram நினைவக தகவல்கள்
4.இதன் hardisk மற்றும் dvd rw
5.இதன் motherboard
6.Graphics card
7.Sound card
8.Ethernet card, wireless card
HP மடிக்கணினிகளில் உபுண்டு எந்தவித பிரச்னையின்றி நன்றாக செயல்படுகிறது. எல்லா டிரைவர்களும் உள்ளினைந்தே வருகிறது. Internal modem மட்டும் செயல்படவில்லை. Headphone பயன்படுத்தும் போது கணினியின் உள்ளே இருக்கும் speakerகள் செயல்படுவதில்லை .
No comments:
Post a Comment