Pages

Showing posts with label boot. Show all posts
Showing posts with label boot. Show all posts

Friday, June 3, 2011

உபுண்டுவில் boot னை சரி செய்ய ஒரு எளிய நிரல்


உபுண்டுவில் bootனை சரிசெய்ய ஒரு எளிய நிரல். உபுண்டு நிறுவியபிறகு ஏதெனும் ஒரு ஒஸ் இயங்காமல் போனலோ, boot loaderனை திரும்ப நிறுவ வேண்டியிருந்தாலோ மற்றும் original boot sector னை மீண்டும் கொண்டு வரலாம் இதற்கு clean-ubiquity நிரல் மூலம் boot sectorஐ ஒரு backup எடுத்து வைத்து கொண்டால் மட்டுமே முடியும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install boot-repair-ubuntu

நிரல் நிறுவப்பட்டபின் system->administration->boot repair செல்ல வேண்டும்.


Tuesday, June 22, 2010

உபுண்டுவில் bootchart

உபுண்டுவில் bootchart என்பது எவ்வளவு நேரத்தில் கணினியை இயக்க ஆரம்பிக்கிறது என்பதை காண உதவும் ஒரு நிரல் ஆகும். இதை நிறுவிக்கொள்ள டெர்மினலில் கீழ்கண்ட கட்டளை தரவேண்டும்.

sudo apt-get install bootchart

இந்த நிரலை நிறுவியப்பின் கணினியை மீளதுவங்கவேண்டும்.

இதன் log கோப்புகள் /var/log/bootchart என்ற அடைவினுள் சேமிக்கப்படும். இந்த நிரல் நேரத்தை மட்டும் கணக்கிடவில்லை. பூட்டிங்கின் போது நிகழும் செயல்படுகளையும் படமாக தருகிறது.ஒரு png கோப்பாக சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை மீளதுவங்குபோதும் தனித்தனி png கோப்பாக செமிக்கப்படுகிறது.





Friday, February 5, 2010

உபுண்டு console modeல் boot ஆக

உபுண்டு தற்போது graphical modeல் தான் திறக்கிறது. இதையே console modeல் திறக்க வைக்கமுடியும்

அதற்கு /etc/default/grub கோப்பில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்து செமிக்க வேண்டும்.. முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/default/grub என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். பின்னர் கோப்பில்


GRUB_CMDLINE_LINUX_DEFAULT=”quiet splash” என்பதற்கு பதில்

GRUB_CMDLINE_LINUX_DEFAULT=”quiet splash text” என்று மாற்றம் செய்ய வேண்டும்.

இப்போது grub update செய்ய டெர்மினலில்

sudo update-grub2 என்று தட்டச்சு செய்து கணினியை மீண்டும் துவக்க console mode ல் வந்து நிற்கும் தேவையில்லை என்றால் மீண்டும் grub கோப்பில் பழையபடியே மாற்றம் செய்து செமிக்க வேண்டும்.

மறக்கமால் sudo update-grub2 என்று தட்டச்சு செய்யவேண்டும்.