Pages

Showing posts with label terminal. Show all posts
Showing posts with label terminal. Show all posts

Monday, January 16, 2012

உபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண

உபுண்டு டெர்மினலில் நமக்கு அருகில் இருக்கும் wifi இணைப்புகளை காண கீழ்கண்ட கட்டளையினை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

iwlist scan

உடனே கீழ்கண்ட திரை டெர்மினலில் தோன்றும்.


இதிலிருந்து wifi யின் தன்மைகளை வேகம் போன்ற தகவல்களை டெர்மினலில் அறிந்து கொள்ளலாம்.

Monday, December 13, 2010

உபுண்டுவில் டெர்மினலில் இணையம் பார்க்க

உபுண்டுவில் எந்தவோரு உலாவியும் இல்லாமல் இணையத்தில் உலவ முடியும். ஆனால் வெறும் டெக்ஸ்ட் மட்டும்தான் நாம் காண முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில்

w3m (இணைய முகவரி) என்று தட்டச்சு செய்தால் போதும்.

உதாரணமாக

w3m ubuntu.com என்று தட்டச்சு செய்தால் இணைப்பு ஏற்பட்டு உபுண்டு.காம் திறக்கும்.


இதில் டெக்ஸ்ட் மட்டுமே பார்க்க முடியும். படங்கள் மற்றும் கிராபிக்ஸ் ஏதுவும் பார்க்க முடியாது. தகவல்களை தெரிந்துகொள்ள மட்டும் இதனை பயன்படுத்தாலாம்.

Sunday, February 28, 2010

உபுண்டுவில் search history முன்னால் மற்றும் பின்னால்

உபுண்டு டெர்மினலில் எத்தனையோ கட்டளைகளை நாம் பயன்படுத்துகிறோம். எடுத்துகாட்டாக sudo மற்றும் ls ஆகியவைகள் ஆகும். இந்த கட்டளைகளை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்து டெர்மினலில் uparrow key அல்லது downarrow keyஐ தான் பயன்படுத்துவோம்.

sudo மற்றும் ls ஆகியவற்றுடன் தொடங்கும் கட்டளைகள் மட்டும் searchல் வரவழைக்க முடியும். கீழ்கண்ட வரிகளை home அடைவினுள் இருக்கும் ./bashrc என்ற கோப்பில் சேர்த்துவிட்டால் போதும்.

bind '"\e[A"':history-search-backward
bind '"\e[B"':history-search-forward


பின்னர் செமித்து வெளியேற வேண்டும்.



டெர்மினலில் bash என்று கட்டளை கொடுக்க வேண்டும். பின்னர் டெர்மினலில்

su என்று மட்டும் தட்டச்சு செய்து uparrow key அல்லது downarrow keyஐ அழுத்தினால் su என்று ஆரம்பிக்கும் எல்லா கட்டளைகளும் அதாவது ஏற்கனவே நாம் தட்டச்சு செய்த பல கட்டளைகள் ஒன்றன்பின் ஒன்றாக திரையில் தோன்றும்.

அதேபோல் ls என்று மட்டும் தட்டச்சு செய்து uparrow key அல்லது downarrow key ஐ அழுத்தினால் ls என்று தொடங்கும் கட்டளைகள் திரையில் தோன்றும்.

su என்று தொடங்கும் கட்டளைகள்

sudo apt-get install package name
sudo apt-get update
sudo chmod +x /bin/scriptname

போன்ற பல கட்டளைகள்

அதேபோல் lsல் ஆரம்பிக்கும் பல கட்டளைகள்

lshw
lspci
ls -la | xclip
போன்றவைகள் ஆகும்.

இதேபோல் பல கட்டளைகள் நாம் பயன்படுத்தியிருப்போம். c என்று டெர்மினலில் தட்டச்சு செய்து uparrokeyஐ அழுத்தினால் cd மற்றும் cancel கட்டளை அதாவது cயில் ஆரம்பிக்கும் கட்டளைகள் மட்டும் search historyயில் வரும்.

Thursday, February 25, 2010

உபுண்டுவில் number command

உபுண்டுவில் டெர்மினலில் நாம் பலவிதமான கட்டளைகளை கொடுக்கிறோம். அதை மறந்துவிடுவோம். ஆனால் உபுண்டு அந்த கட்டளைகளை நினைவில் வைத்திருக்கும்.

எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக டெர்மினலில்

#sudo apt-get update என்று ஒரு கட்டளையை கொடுப்போம். கட்டளை முடிந்தவுடன் டெர்மினலில்

@history | tail -3 என்று கட்டளை கொடுத்தால்



நாம் இதற்குமுன் கொடுத்த மற்ற இரண்டு கட்டளைகளும் சேர்ந்து மொத்தம் மூன்று கட்டளைகளாக டெர்மினலில் தெரியும்.

மூன்றிற்கு பதில் 10,20, என்று கூட கொடுக்கலாம்.

மேலே உள்ள படத்தில் 187 என்ற எண்ணிற்கு நேராக sudo apt-get update என்ற கட்டளை இருப்பதை பார்க்கலாம். இந்த கட்டளையை செயல்படுத்த கட்டளை முழுவதையும் தட்டச்சு செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக

#!187 என்று மட்டும் தட்டச்சு செய்தால் 187 என்ற எண்ணிற்கு நேராக உள்ள கட்டளை செயல்படதுவங்கும். இந்த 186,187,188 எண்கள் அவரவை கணினிக்கு ஏற்றார் போல் மாறும்.


இப்போது sudo apt-get update கட்டளை செயல்படுவதை பார்க்கலாம். இதுபோல் வேறு பல கட்டளைகள் கொடுத்து இருந்தால் அதையும் செயல்படுத்தலாம்.


Wednesday, February 24, 2010

உபுண்டு டெர்மினலில் எழுத்துக்கள் கலரில் வரவழைக்க

உபுண்டுவில் டெர்மினலில் காணப்படும் எழுத்துக்கள் பல்வேறு வண்ணத்தில் வரவழைக்க முடியும்.



இதேபோல் பலவேறு வண்ணத்தில் வரவழைக்க முடியும். அதற்கு கீழ்கண்ட வரிகளை /home/user/.bashrc என்ற கோப்பில் சேர்ப்பதன் மூலம் முடியும்.

PS1='${debian_chroot:+($debian_chroot)}\u@\h:\w\$ ' PS1='\[$(tput setaf 2)\]\u@\h:\w$ '


இந்த வரியில் tput setaf 2 என்ற இடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் '2' பச்சை கலரை குறிக்கும். இதில் பல்வேறு வண்ணத்தில் வரவழைக்க

1 = red (dark)
2 = green
3 = orange (dark)
4 = blue (dark)
5 = magenta (dark)
6 = blue (turqois)
7 = gray
8 = red (bright)
9 = white

2ற்கு பதில் 1 லிருந்து 9 வரை எண்களை கொடுக்கலாம்.

4 என்று கொடுத்தால்



எனவே நமக்கு பிடித்தமான வண்ணத்தில் டெர்மினலில் எழுத்துக்களை அமைத்துகொள்ளலாம்.

Saturday, January 16, 2010

உபுண்டுவில் multi terminal

உபுண்டுவில் Applications->Accessories->Terminal க்கு சென்றால் ஒரு டெர்மினல்தான் திறக்கும். பல டெர்மினல் ஒரே விண்டொவில் பல வேலைகளை செய்வதற்கு software centreலேயே வழி இருக்கிறது. முதலில் டெர்மினலில்

#sudo apt-get install terminator என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரலானது

Applications->Accessories->Terminator சென்று இயங்க செய்யலாம்.


நிரலை செயற்படுத்தும் போது



விண்டொவின் மீது கர்சரை வைத்து mouse ல் இடது சொடுக்கினால் வரும் optionல் split vertically, split horizontally, open tab என்ற option வரும்.

இதில் split vertically என்று தேர்ந்தெடுத்தால்

மேற்கண்ட விண்டொவில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று split horizontally என்று தேர்ந்தெடுத்தால்


இந்த நான்கு பகுதியிலும் நான்கு விதமான வேலைகளை செய்யலாம்.



இப்போது open tab தேர்வு செய்தால் firefox tab போல செயல்படும்.

இதில் edit profile தேர்வு செய்தால்

இதில் colour, background image போன்றவை அமைத்துக்கொள்ளலாம்.