Pages

Showing posts with label firefox. Show all posts
Showing posts with label firefox. Show all posts

Wednesday, June 29, 2011

உபுண்டுவில் நெருப்பு நரி 5 மற்றும் தண்டர்பேர்ட் 5

உபுண்டுவில் அண்மையில் வெளிவந்த நெருப்பு நரி5 நிறுவுவதைப்பற்றிப்பார்க்கலாம். கடந்த 21.06.2011 அன்று வெளியிடப்பட்டது. இது PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable
sudo apt-get update
sudo apt-get upgrade


தண்டர்பேர்டு 5 நிறுவுவதைப்பற்றிப்பார்க்கலாம். இதனையும் PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:mozillateam/thunderbird-stable
sudo apt-get update
sudo apt-get upgrade


Sunday, January 9, 2011

உபுண்டு நெருப்பு நரி about:config பற்றிய ஒரு சிறு விளக்கம்.

உபுண்டு நெருப்பு நரியை பயன்படுத்துவோர்கள் முதலில் செய்ய வேண்டியது இரண்டு முக்கிய குறிப்புகள்

  1. home அடைவினுள் இருக்கும் .mozilla என்ற மறைக்கப்பட்ட அடைவினை ஒரு backup எடுத்துகொள்ள வேண்டும்.
  2. நெருப்பு நரி முகவரி பெட்டியில் about: config தட்டச்சு செய்து உள்ள போகும் போது என்ன மாற்றம் செய்ய போகிறோமொ அதை முதலில் அதன் default மதிப்பு மற்றும் மாற்றம் செய்ய போகும் வரிகளை ஆகியவற்றை தனியாக ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.




about:config ல் இருக்கும் அனைத்து அமைப்புகளும் home அடைவினுள் இருக்கும் ./mozilla என்ற மறைக்கப்பட்ட அடைவினுள் இருக்கும் /firefox/xxx.default/prefs.js என்ற கோப்பில் இருக்கும். இதில் xxx.default என்ற அடைவானது .mozilla/firefox/profiles.ini என்ற கோப்பினுள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.



profile.ini என்ற கோப்பினுள் path=xxx.default என்ற அடைவு தான் நம்முடைய profile ஆகும்.

இன்றையதினம் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கலை பற்றி பார்ப்போம். about:config பகுதிக்குள் நுழைந்து அதில் கீழ்கணட வரியில் தவறுதாலாக செய்த சிறு மாற்றம் தான் சிக்கலுக்கு காரணம்.


மேற்கண்ட படத்தில் layout.css.devPixelsPerPx என்பதன் மதிப்பு -1 என்று இருக்க வேண்டும். தவறுதாலாக 96 என்று மாற்றி விட நெருப்பு நரியில் கீழ்கண்ட வாறு தெரிய ஆரம்பித்தது.



இதை சரிசெய்ய home அடைவினுள் இருக்கும் .mozilla/firefox/xxx.default/prefs.js என்ற கோப்பினை திறந்து அதில் layout.css.devPixelsPerPx அதன் மதிப்பு 96 ஆக இருக்கும்.


இந்த 96 என்பதை -1 என்று மாற்றி சேமித்து வெளியேற நெருப்பு நரி மீண்டும் நல்ல முறையில் இயங்கியது.இந்த கோப்பினை திறக்கவோ அல்லது சேமிக்கவோ டெர்மினல் செல்ல தேவையில்லை.


இப்போது நெருப்பு நரி திறக்க நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது.

Sunday, December 5, 2010

உபுண்டுவில் google chrome adobe flashஐ நெருப்பு நரியில் பயன்படுத்த

உபுண்டுவில் google chrome இணைய உலாவியின் adobe flasherஐ உபயோகப்படுத்தமுடியும். Google chrome adobe flasher தானாகவே மேம்படுத்திக்கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இதற்கு முதலில் கூகுள் குரோமின் இணைய உலாவியை இந்த சுட்டியிலிருந்து நிறுவிக்கொள்ளவேண்டும்.

முதலில் இதற்கு பயன்படும் அடைவுகளை பார்க்கலாம்.

நெருப்பு நரியின் அடைவு

/usr/lib/firefox-addons/plugins


அதேபோல் கூகுள் குரோமின் அடைவு

/opt/google/chrome/libgcflashplayer.so



இந்த இரண்டு அடைவுகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும்.

இதற்கு டெர்மினலில்

cd /usr/lib/firefox-addons/plugins
sudo ln -s /opt/google/chrome/libgcflashplayer.so ./

என்று கட்டளை கொடுக்க வேண்டும்.

பின்னர் நெருப்பு நரியில் ஏற்கனேவெ நிறுவியிருந்த flash ஐ disable செய்ய வேண்டும்.

அதற்கு நெருப்பு நரி உலாவியை திறந்து அதில்

Tools->Add-ons->plugins செல்ல வேண்டும். அதில் shockwave flash தேடி அதனை செயலிழக்க செய்ய வேண்டும்.


Wednesday, October 27, 2010

உபுண்டு நெருப்பு நரி உலாவியில் ஒரு பெரிய security bug

உபுண்டு நெருப்பு நரியில் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்த அலெக்ஸ் மில்லர் என்ற 12 வயது சிறுவனுக்கு 3000 டாலர்கள் பரிசு. அந்த பையனின் os உபுண்டுதான். மொசில்லாவின் Brandon Stene இவர் பாதுகாப்பு அதிகாரி, இந்த பையனை ஒரு ஜீனியஸ் என்று புகழ்ந்திருக்கிறார்.

அது பற்றி CBS வெளியிட்டு உள்ள ஒரு வீடியோ.



அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் நெருப்பு நரி இது போன்ற பாதுகாப்பு குறைபாட்டை தவிர்க்கும் என்று நம்புவோம்.

Saturday, July 24, 2010

உபுண்டு நெருப்பு நரி address bar drop down list clear செய்ய

உபுண்டு நெருப்புநரி உலாவியில் முகவரி பெட்டியில் ஏதெனும் ஒரு இணைய முகவரி தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் அதன் தொடர்புடைய எல்ல இணைய முகவரிகளும் drop down list ஆக வரும்.



இதை வராமல் செய்வதற்கு முகவரி பெட்டியில் about:config என்று தட்டச்சு செய்து I'll be careful, I promise என்பதனை அழுத்தி வரும் விண்டோவில் browser.urlbar.maxRichResults என்பதனை தேடி அதன் மதிப்பை 12லிருந்து 0 ஆக மாற்ற வேண்டும்.

மேற்கண்ட வரியில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் modify தேர்ந்தெடுக்க வேண்டும்.



இப்போது மீண்டும் நெருப்பு நரியை திறக்க drop down list வராது.

Tuesday, May 4, 2010

உபுண்டு 1004ல் நெருப்பு நரி மெதுவாக இயங்கினால்

உபுண்டு 10.04 புதியதாக நிறுவினாலோ அல்லது அப்டேட் செய்தாலோ நெருப்பு நரி மிக மெதுவாக இயங்க ஆரம்பித்தால் கீழ்கண்ட வழிமுறையை கையாண்டு சரிசெய்யலாம்.

நெருப்பு நரியின் address barல் about: config என்று தட்டச்சு செய்து அதன் சில அமைப்புகளை மாற்றுவதன் மூலம் வேகமாக செயல்பட வைக்க முடியும்.



- network.http.proxy.pipelining > True

- network.dns.disableIPv6 > True

- network.http.pipelining > True

இதன் மூன்று மதிப்புகளும். false என்று இருக்கும்.

- network.http.pipelining.maxrequests > 8 or 10

என்று மாற்ற வேண்டும்.இதன் மதிப்பு மிக குறைவாக இருக்கும்.



Sunday, March 14, 2010

உபுண்டு நெருப்பு நரியிலிருந்து விண்டோ நெருப்பு நரிக்கு

உபுண்டுவில் நெருப்பு நரி உபயோகிக்கும்போது இதே bookmarks, addons, போன்றவைகள் விண்டொ xp விலும் செயல்படுத்தலாம்.

நெருப்பு நரியில் profile என்பது நம்முடைய home அடை வினுள் இருக்கும். இதற்கு

places->home folder சென்று control+H அழுத்தினால் hidden ஆன கோப்புகள் மற்றும் அடைவுகள் தெரியும். அதில் நாம் .mozilla என்ற அடைவிற்கு செல்ல வேண்டும்.


மேலே குறிப்பிட்ட firefox என்ற அடைவை நாம் விண்டோ xp கணினியில் கீழ்கண்ட இடத்தில் காப்பி செய்தால் உபுண்டு நெருப்பு நரியிலிருக்கும் அதே bookmark,addon போன்றவைகள் விண்டோ எக்ஸ்பி நெருப்பு நரியிலும் வந்துவிடும். இந்த அடைவை உபுண்டுவிலிருந்தே செயல்படுத்தமுடியும்.

விண்டோ எக்ஸ்பியில்

c:\Documents and Settings\username\Application Data\Mozilla\ என்ற அடைவினுள் காப்பி செய்ய வேண்டும். ஏற்கனவே இங்கு ஒரு firefox அடைவு இருக்கும். அதை வேறு பெயர் கொடுத்துவிடவேண்டும்.


இப்போது விண்டொவினுள் நுழைந்து நெருப்பு நரியை திறந்தால் உபுண்டு நெருப்பு நரியில் இருக்கும் அத்தனை bookmark, addonகளு இருக்கும். ஒருசில addon லினக்ஸில் மட்டுமே வேலை செய்யும் அதற்குண்டான addon மட்டும் நாம் நிறுவிக்கொள்ளவேண்டும்.

Friday, March 5, 2010

உபுண்டு நெருப்பு நரியில் இரண்டு இணைய தளங்கள் திறக்க

உபுண்டுவில் நெருப்பு நரி ஆரம்பிக்கும்போது இரண்டு டேப்களில் இரண்டு இணையதளங்கள் திறக்க வைக்க முடியும்.

Edit->preferenece->general தேர்ந்தெடுக்க வேண்டும்.

when firefox starts->Show my home page செலக்ட் செய்யவேண்டும். பின்னர் home pageல்

http://ubuntuintamil.blogspot.com/ | http://yahoo.co.in என்றவாறு நமக்கு தேவையான இரண்டு இணைய தளங்களின் பெயர்களை தட்டச்சு செய்யவேண்டும்.



பின்னர் close பொத்தனை அழுத்தி மூடிவிடவேண்டும். இப்போது மீண்டும் நெருப்பு நரி திறக்க இரண்டு டேப்களில் இரண்டு இணையதளங்கள் திறந்திருப்பதை பார்க்கலாம்.

Thursday, March 4, 2010

உபுண்டுவில் ubuntuzilla repository

உபுண்டுவில் ubuntuzilla என்ற நிரல் நெருப்பு நரி மற்றும் தண்டர்பேர்ட் ஆகிய மிக முக்கியமான நிரல்களை மேம்படுத்துவதற்கு உள்ள நிரல் ஆகும்.

இந்த நிரலை நாம் software sourceல் repository ஐ சேர்த்துக்கொள்ளலாம். டெர்மினலில்

echo -e "\ndeb http://downloads.sourceforge.net/project/ubuntuzilla/mozilla/apt all main" | sudo tee -a /etc/apt/sources.list > /dev/null

என்று ஒரே வரியில் தட்டச்சு செய்து சேர்த்துகொள்ளலாம். பின்னர் authenticated key சேர்க்க டெர்மினலில்

sudo apt-key adv --recv-keys --keyserver keyserver.ubuntu.com C1289A29 என்று தட்டச்சு செய்து சேர்த்துகொள்ள வேண்டும்.

பின்னர் டெர்மினலில்

sudo apt-get update

sudo apt-get install firefox-mozilla-build என்று தட்டச்சு செய்து நெருப்பு நரியை மேம்படுத்திக்கொள்ளலாம்.





பின்னர் தண்டர்பேர்டை மேம்படுத்த டெர்மினலில்

sudo apt-get install thunderbird-mozilla-build என்று தட்டச்சு செய்ய வேண்டும்.



ஏற்கனவே பல மேம்படுத்துதல் வழிமுறைகள் இருந்தாலும் இது மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.

Tuesday, February 16, 2010

உபுண்டு நெருப்பு நரியில் flash video வேலை செய்ய வைக்க

உபுண்டுவில் சில நாட்களுக்கு முன் நெருப்பு நரியில் flash video சரிவர வேலை செய்யவில்லை. எத்தனையோ plugin நிறுவிப்ப்பார்த்தும் பலனில்லை. இறுதியாக கீழ்கண்ட கட்டளை கைகொடுத்தது.

முதலில் கணினியில் உள்ள எல்லா flash player களையும் நீக்கிவிட்டேன். அதாவது டெர்மினலில்

sudo apt-get remove swfdecmozilla mozilla-plugin-gnash adobe-flashplugin flashplugin-nonfree

என்று கட்டளை கொடுத்தேன். பின்னர் மீண்டும் டெர்மினலில்

sudo apt-get install flashplugin-nonfree

என்று கட்டளை கொடுத்து மீண்டும் நெருப்பு நரியை துவங்கினேன். இப்போது flash video வேலை செய்ய துவங்கியது.

Monday, February 15, 2010

உபுண்டு நெருப்பு நரியில் netcraft நீட்சி.

உபுண்டு நெருப்பு நரியில் இணைய உலாவும் போது பாதுகாப்பிற்கான நீட்சிதான் Netcraft tool bar.

இது
1.phising sites
2.bank fraud sites

போன்ற ஏமாற்று இணைய தளங்களை கண்டறிய பயன்படுகிறது. இது நெருப்பு நரியில் நீட்சியாகவே வருகிறது. இணைய தளங்களின் ip address, எந்த நாட்லிருந்து இணைய தளம் இயங்குகிறது என்பதையும், உரிமையாளர்களின் முகவரி உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும்.

மேற்கண்ட தகவல்கள் இல்லையேன்றால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.





மேலே உள்ள படம் google.inc லினக்ஸில் இயங்குவதை காட்டுகிறது.

Sunday, February 7, 2010

உபுண்டு நெருப்பு நரியில் ஒரு tips



உபுண்டுவில் நெருப்பு நரியின் ஒரு tips பற்றி பார்ப்பொம்.

விண்டோ நெருப்பு நரியில் அட்ரஸ் பாரில் இருக்கும் url முகவரியை இடது சொடுக்கினால் அனைத்து எழுத்துகளும்ம் தேர்ந்தெடுக்கப்பட்டு காப்பி பேஸ்ட் செய்வற்கு வசதியாக இருந்தது. ஆனால் லினக்ஸில் அது default ஆக அமையவில்லை.

எனவே கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் அமைத்துகொள்ளலாம்.

நெருப்பு நரியை திறந்து அதன் முகவரி பெட்டியில் about:config என்று தட்டச்சு செய்து அதன் filterல்

browser.urlbar.clickSelectall என்பதனை தட்டச்சு செய்து அதன் valueவை false லிருந்து true ஆக மாற்றவேண்டும். பின்னர் நெருப்பு நரியை மீளதுவங்க வேண்டும்.


இப்போது முகவரி முழுவது தேர்ந்தெடுக்கபடுவதை பார்க்கலாம்.

Saturday, February 6, 2010

உபுண்டு நெருப்பு நரியின் memory usage அளவை எப்படி குறைப்பது

உபுண்டு நெருப்பு நரியின் நினைவக உபயோகத்தின் அளவை குறைக்கலாம்.

1. edit->preferences->privacy யில் உள்ள remember download history க்கு முன் உள்ள டிக்கை எடுத்துவிட வேண்டும்.



2. about:config

அட்ரஸ் பாரில் about:config என்று தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் filter barல்

browser.cache.memory.enable சென்று false என்று இருப்பதை true ஆக மாற்றவேண்டும்.



பின்னர் வெற்று இடத்தில் இடது சொடுக்கினால் வரும் விண்டோவில்

என்று தட்டச்சு செய்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.

இதில் கீழ்கண்டவாறு நம்முடைய ரேம் மெமரிக்கு ஏற்றவாறு கொடுக்கவேண்டும்.

512 ரேம் மெமரி இருந்தால் 8192
1gb 16384
2gb 32768

ok கொடுத்து வெளியேறவேண்டும்.


இவ்வாறக செய்வதன் மூலம் நெருப்பு நரியின் memory usage அளைவை குறைக்க முடியும்.

Thursday, February 4, 2010

உபுண்டு நெருப்பு நரியில் save current window and tabs

உபுண்டு நெருப்பு நரியில் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் பக்கங்களையும் tabகளையும் மீண்டும் நெருப்பு நரி திறக்கும் போது அதே பக்கம் மீண்டும் திறக்க கீழ்கண்ட முறைகைளை பார்க்கலாம்.

Edit->preferences->Main விண்டோ திறக்கும்போது அதில் startup->when firefox starts என்பதில் இருக்கும் show my home page என்பற்கு பதில் show my windows and tabs from last times என்பதனை தேர்ந்தெடுத்தால் காணலாம்.

எதிர்பாரத விதமாக நெருப்பு நரியை மூடிவிட்டால் நமக்கு இது உதவும்.





Tuesday, February 2, 2010

உபுண்டுவில் நெருப்பு நரியை வேகப்படுதுதல்

உபுண்டுவில் நெருப்பு நரியை local dns கொண்டு வேகப்படுதுதலை பற்றி பார்ப்போம்.

ஏற்கனவே நெருப்பு நரி வேகமானதுதான். அதை இன்னும் வேகப்படுத்த இந்த பதிவு உதவும். முதலில் டெர்மினலில்

#sudo apt-get install dnsmasq என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

#sudo gedit /etc/dnsmasq.conf என்ற கோப்பினை திறந்து அதில் #listen-address= என்ற வரியை தேடிப்பிடித்து அதில் # நீக்கிவிட்டு

listen-address=127.0.0.1 என்று மாற்றம் செய்து செமித்து கொள்ளவேண்டும். பின்னர் அதே கோப்பில்
#resolv-file= என்பதனை
resolv-file=/etc/resolvconf/update.d/dnsmasq என்றவாறு மாற்றம் செய்து செமித்து கொள்ளவேண்டும்.

டெர்மினலில்
#sudo cp /etc/resolv.conf /etc/resolv.dnsmasq.conf என்று தட்டச்சு செய்து resolve.conf என்ற கோப்பினை resolv.dnsmasq.conf என்ற கோப்பிற்கு காப்பி செய்ய வேண்டும்.

டெர்மினலில்

#sudo gedit /etc/dhcp3/dhcclient.conf என்ற கோப்பினை திறந்து அதில் #prepand domain-name-servers 127.0.0.1: என்ற வரியில் '#' என்பதனை அழித்துவிடவும்.

#sudo gedit /etc/resolv.conf என்ற கோப்பினை திறந்து அதில் nameserver 127.0.0.1 என்பதனை சேர்த்துவிட்டு செமிக்கவும்.

இதன் பின் டெர்மினலில்
#sudo gedit /etc/ppp/peers/dsl-provider என்ற கோப்பினை திறக்கவும். இந்த கோப்பு இல்லையென்றால் அதாவது காலியாக இருந்தால்

#sudo gedit /etc/ppp/peers/provider என்ற கோப்பினை திறந்து அதில் userpeerdns என்பதன் முன் '#' சேர்த்துவிட்டு செமிக்கவும்.

இதை சோதிக்க டெர்மினலில்
#dig g.cn என்பதனை தட்டச்சு செய்து பார்க்கலாம்.


பின்னர் நெருப்பு நரி உலாவியை திறந்து அதில் edit->preferences->advanced-network என்பதனை தேர்வு செய்து அதில் manual proxy settingsல் no proxy for :localhost,127.0.01 ok பொத்தனை அழுத்த வேண்டும்.



இதை செயல்படுத்துபோது தனியாக குறிப்பு எடுத்து கொண்டு செயல்படுவது நல்லது.

Monday, February 1, 2010

உபுண்டு நெருப்பு நரி 3.6ல் personas

உபுண்டு நெருப்பு நரி 3.6ல் personas என்பது themeகளை குறிக்கும்.இதை add-on நிறுவிக்கொள்ளலாம்
இதை நிறுவியப்பின் நெருப்பு நரியின் tools மெனுவில் ஒரு add-on ஆக செர்ந்துகொள்ளும்.நாம் இதிலிருந்து பல தீம்களை நிறுவிக்கொள்ளலாம்.

மேலும் இடது புற கீழ்பக்கமாக ஒரு சிறு icon தென்படும் அதை சொடுக்கியும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


மேலும் tools->add-on->theme சென்றால் பலவிதமான themeகள் நாம் நிறுவியது இருக்கும். அதை தேர்ந்தெடுத்து use them என்ற பொத்தனை அழுத்தினால் தீம் தேர்வு செய்யப்பட்டுவிடும்.


சில தீம்களின் படங்களை காணலாம்.







இதுபோல் நிறைய தீம்கள் காணப்படுகிறது. நிறுவி பயன்படுத்தலாம். நம்முடைய சொந்த தீம்களை கூட நாம் உருவாக்க முடியும். அதற்கு லாகின் செய்ய சொல்வார்கள்.

மீண்டும் defaultக்கே செல்லவேண்டும் என்றால் அதிலேயே default அமைத்து இருக்கிறார்கள் அதை பயன்படுத்தி பழைய தீம் கொண்டு வரலாம்.

உபுண்டுவில் நெருப்பு நரி 3.6 நிறுவுதல்



உபுண்டுவில் நெருப்பு நரி 3.6 நிறுவுதலை பற்றி பார்ப்போம். சில சமயம் நிறுவும்போது shredder என்று வந்து விடுகிறது. நான் பலமுறை நிறுவியிருக்கிறேன். ஆனால் இந்த முறை சரியான முறையில் நிறுவிவிட்டேன்.

முதலில் டெர்மினலில்

#sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable

என்று தட்டச்சு செய்தால் software sourceல் சென்று சேர்ந்துவிடும். பின்னர் மீண்டும் டெர்மினலில்

#sudo apt-get update என்று தட்டச்சு செய்தால் நெருப்பு நரி 3.6 மேம்பாடு செய்யவா என்று update managerல் கேட்டு நிற்கும். install updates என்ற பொத்தனை அழுத்த நிறுவ ஆரம்பிக்கும்.


நிறுவியவுடன் top panelல் நெருப்பு நரியின் icon இல்லாமல் வேறு ஒரு icon இருக்கும். அதை நீக்கிவிட்டு பின்னர் Applications->Internet->Firefox wer browser என்பதனை கர்சரை அதன் மீது வைத்து அப்படியே இழுத்து கொண்டுபோய் பேனலில் விட்டால் போதும் icon வந்துவிடும். shredder என்று எதுவும் இல்லாமல் இயல்பாகவே உள்ளது. இதை நிறுவியவுடன் ad block plus காணாமல் போய்விட்டது. மீண்டும் ad block நிறுவியவுடன் முன் போலவே வேலை செய்கிறது.

Sunday, January 31, 2010

உபுண்டு firefox tips

உபுண்டுவில் firefox tips

1. ஏதேனும் ஒரு கோப்பை தரவிறக்கி முடித்தவுடன் தோன்றும் popup விண்டோவை தவிர்க்க

அட்ரஸ் பாரில் about:config என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் search Boxல்

browser.download.manager.showAlertOnComplete என்பதன் valueவை true விலிருந்து false ஆக மாற்றவேண்டும்.



2.படம் திறக்கும் போது படமானது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில் திறக்க

browser.enable_automatic_image_resizing என்பதன் valueவை trueவிலிருந்து false ஆக மாற்றவேண்டும்.



3. நெருப்பு நரியின் உலாவியின் பின்புல நிறத்தை மாற்ற இதில் இரண்டு முறைகள் உள்ளன.

Edit->preferences->content-colour தேர்ந்தெடுக்கவேண்டும்.



இரண்டாவது முறையாக address barல் about:config தட்டச்சு செய்து

browser.display.background_color என்பதன் Value வை மாற்றவேண்டும்.


மேற்கண்ட படத்தில் #FFFFFF என்பது default மதிப்பு ஆகும். இதை கீழ்கண்ட மதிப்புகள் கொடுத்து மாற்றலாம். ஒவ்வொரு மதிப்பும் தனிதனியான நிறத்தை குறிக்கும்.

#000000 - black
#FFFFFF - white (which is the default)
#000080 - navy
#800080 - purple