Pages

Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Thursday, February 10, 2011

உபுண்டுவில் youtube வீடியோக்களை vlc/mplayerல் ஒட வைக்க

உபுண்டுவில் youtube.com ல் உள்ள வீடியோக்களை vlc/mplayerல் ஒடவைக்க முடியும். அதாவது flash நிறுவமலேயே youtube வீடியோக்களை பார்க்க இயலும்.

முதலில் டெர்மினலில் yt என்னும் பெயருடைய கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். பெயர் நம் விருப்படி கொடுத்துக்கொள்ளலாம்.

sudo gedit /usr/local/bin/yt

இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து செமித்துக்கொள்ள வேண்டும்.

#!/bin/bash

FLASH_TMP=`ls /tmp | grep Flash*`

if [[ $FLASH_TMP ]]; then
vlc /tmp/Flash*;
else
flashvids() { lsof -p `ps x | awk '/libflashplayer.so\ /{print $1}'` -n 2>/dev/null | perl -lne '@F = split(/ +/, $_, 9); print "/proc/$F[1]/fd/${\($F[3] =~ /(^\d+)/)[0]}" if $F[4] eq "REG" && $F[8] =~ /\(deleted\)$/'; }
vlc $(flashvids)
fi


பின்னர் இந்த ஸ்கிரிப்டை இயக்க நிலையில் வைக்க கீழ்கண்ட வரியை டெம்ரினலில் தட்டச்சு செய்ய வேண்டும். மேற்கண்ட ஸ்கிரிப்டில் vlc க்கு பதில் mplayer என்பதாகவும் இருந்தால் வீடியோக்கள் mplayerல் காணலாம்.

sudo chmod +x /usr/local/bin/yt

பின்னர் டாப் பேனலில் கிளிக் செய்து Add to panelல்->custom application launcher என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில்

Name->Flash
Command->/usr/local/bin/yt

என்பதாக தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும்.


இப்போது நெருப்பு நரியில் youtube.com ஐ திறந்து ஒரு வீடியோவை இயக்கவேண்டும். பின்னர் டாப் பேனலில் இருக்கும் ஐகானை கிளிக் செய்தால் youtube வீடியோக்கள் vlc/mplayerல் காண முடியும்.


மேலே உள்ள படம் வீடியோ flash playerல் ஒடியது. அதே வீடியோ vlcயில் ஒடும்போது கீழ்கண்டவாறு இருக்கும்.



இப்போது இரண்டு வீடியோக்களும் ஒடும். Flashல் ஒடுவதை நிறுத்திவிடலாம்.

Sunday, June 13, 2010

உபுண்டுவிலிருந்து youtubeற்கு படங்களை ஏற்றுவதற்கு

உபுண்டுவில் desktop record செய்யும் போது ogv வடிவில் தான் பதிவாகும். ஆனால் இந்த படத்தை youtubeல் ஏற்றமுடிவதில்லை. எனவே avi ஆக மாற்றி தரவேற்றலாம்.

Desktopபை record செய்து முடித்தவுடன் ogv வடிவில் பதிவாகிவிடும். இதை avi ஆக மாற்ற டெர்மினலில் கீழ்கண்ட கட்டளை கொடுக்க வேண்டும்.

mencoder ram.ogv -o ram.avi -oac mp3lame -lameopts fast:preset=standard -ovc lavc -lavcopts vcodec=mpeg4:vbitrate=4000

இதில் ram.ogv என்று பதிவாகி உள்ளது. இதை ram.avi என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




கீழே youtubeல் தரவேற்றப்பட்ட வீடியோ

Friday, May 7, 2010

உபுண்டு 1004ல் minitube

உபுண்டு 1004ல் flash player நிறுவாமல் youtube வீடியோக்களை பார்க்க ஒரு நிரல் தான் Minitube 1.0. இதை தரவிறக்கி நம்முடைய கணினியில் நிறுவிக்கொண்டால் youtube வீடியோக்களை சிரமம் இல்லாமல் பார்க்கலாம்.

நிறுவியவுடன் Applications->sound & video->Minitube தேர்ந்தெடுக்க வேண்டும்.



இதன் search boxல் ஏதேனும் ஒரு வார்த்தையை கொடுத்து அது சம்பந்தமான வீடியோக்களை தேட செய்யலாம்.


இதிலிருந்து நேரடியாக வீடியோக்களை தரவிறக்க முடியாது. இதில் நுழைந்தவுடன் அதன் video->open the youtube page சென்றால் அதிலிருந்து தரவிறக்கிகொள்ளலாம்.