Pages

Showing posts with label unmount. Show all posts
Showing posts with label unmount. Show all posts

Wednesday, February 24, 2010

உபுண்டுவில் external hard disk unmount ஆகாமல் இருந்தால்

உபுண்டுவில் நாம் extra hard disk பயன்படுத்திவிட்டு பின்னர் அதை unmount செய்ய முயற்சிகையில்

unmount :/media/disk device is busy என்று ஒரு பிழை செய்தி வரும். இதை தவிர்ப்பதற்கு கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்.

1. டெர்மினலில் #pwd என்று கட்டளையிட்டு நாம் எந்த அடைவினுள் இருக்கிறொம் என்று தெர்ந்துகொள்ளவேண்டும்.

பின்னர் வேறு ஒரு அடைவிற்கு சென்று

cd
unount /media/disk என்று கட்டளை கொடுத்தால் unmout ஆகிவிடும்.

2.எந்த கோப்பவது external hard diskஐ உபயோகப்படுத்திகொண்டு இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். இதற்கு டெர்மினலில்

lsof | grep "/media/disk" என்று கட்டளையிட்டால் தெரிந்துவிடும். பின்னர் எல்லா நிரல்களையும் மூடிவிட்டு unmount செய்யலாம். இதற்கு டெர்மினலில்

#kill -9 2693
#unmount /media/disk என்று கொடுத்தால் unmount ஆகிவிடும்.

3.கணினியானது external hard diskஐ பயன்படுத்திகொண்டு இருந்தால் அதாவது process நடந்துகொண்டு இருந்தால் டெர்மினலில்

#fuser -m /media/disk
#ps -e | grep 2693
#kill -9 2693
#unmount -l /media/disk என்று கட்டளை கொடுத்தால் unmount ஆகிவிடும். அல்லது

#fuser -k /media/disk
#unmount /media/disk என்றும் கட்டளை தரலாம்.