Pages

Showing posts with label internet. Show all posts
Showing posts with label internet. Show all posts

Saturday, March 6, 2010

உபுன்டுவில் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு இணைய இணைப்பை துண்டிக்க

உபுண்டுவில் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு இணைய இணைப்பு இல்லாமல் செய்ய முடியும்.

டெர்மினலில்

sudo gedit /edit/network/interface என்ற கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து சேமித்துகொள்ளவேண்டும்.

pre-up iptables -A OUTPUT -p tcp -m owner --uid-owner username -j DROP


இதையே டெர்மினலில்

sudo iptables -A OUTPUT -p tcp -m owner --uid-owner username -j DROP

என்று தட்டச்சு செய்து கொள்ளலாம்.

இங்கு username என்பது பயனாளரின் பெயரினை குறிக்கும்.

Sunday, November 1, 2009

உபுண்டுவில் network-manager இல்லாமல் இணைய உலாவுதல்

உபுண்டுவில் network-manager இல்லாமல் இணைய உலாவுதல்
ஏதோ ஒரு சில காரணங்களால் network-manager crash ஆகிவிட்டிருந்தால் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றி இணைய உலாவலாம், முதலில்

#sudo apt-get remove networ-manager-gnome network-manager என்று தட்டச்சு செய்து முழுவதுமாக network-manager நிரலை கணினியிலிருந்து நீக்கிவிடவேண்டும். பின்னர்

#ifconfig என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு டெர்மினலில் தெரியும்.

அவ்வாறு இல்லையெனில் கீழ்கண்ட முறைபடி அமைத்து கொண்டால் இணையம் வேலை செய்யும்.
முதலில் /etc/resolve.conf என்ற கோப்பை திறந்து கொள்ளவேண்டும்.

#sudo gedit /etc/resolve.conf

1.for Static IP

கீழ்கண்டவாறு தட்டசுசு கோப்பினை செமித்து கோள்ள வேண்டும்.

auto lo
iface lo inet loopback

auto eth0
iface eth0 inet static
address 192.168.1.10
netmask 255.255.255.0
gateway 192.168.0.1

பின்னர் domai name server (DNS) தட்டச்சு செய்யவேண்டும்.
nameserver 208.67.222.222
nameserver 208.67.220.220

2.for DHCP ஆக இருந்தால்

auto lo
iface lo inet loopback

auto eth0
iface eth0 inet dhcp என்று தட்டச்சு செய்து சேமித்து கொள்ளவேண்டும்.

3.for pppoe connection ஆக இருந்தால்
auto lo
iface lo inet loopback

auto eth0
iface eth0 inet manual

auto dsl-provider
iface dsl-provider inet ppp
pre-up /sbin/ifconfig eth0 up # line maintained by pppoeconf
provider dsl-provider

என்று தட்டச்சு செய்து சேமித்து கொள்ளவேண்டும்.

பின்னர்
#pppeoconf என்று டெர்மினலில் தட்டச்சு செய்து எல்லாவற்றிக்கும் ok கொடுத்துவிடவேண்டும். பின்னர் user name and password கொடுத்து ok கொடுக்கவேண்டும்.

டெர்மினலில்
#sudo /etc/init.d/networking restart என்று தட்டச்சு செய்து network ஐ மீண்டும் துவக்க வேண்டும். இப்போது இணையம் வேலை செய்யும்.

Saturday, October 17, 2009

உபுண்டுவில் bsnl, tatadocomo சிம் கார்டை பயன்படுத்துதல்

உபுண்டுவில் bsnl, tatadocomo சிம் கார்டை பயன்படுத்தி நெட்டில் இணையதளங்களை பார்வையிடுதல் பற்றி பார்ப்போம். முதலில் இரண்டு சிம் கார்டுகளையும் gprs activate செய்யவேண்டும். பின்னர் கணினியுடன் இணைக்கவும். இணைத்தவுடன் தோன்றும் விண்டோவை தவிர்த்துவிடவேண்டும். பின்னர் top panelல் உள்ள networkmanager ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் mobile broadband என்பதனை தேர்வு செய்யவேண்டும்.
பின்னர் add பொத்தனை அழுத்தினால் கீழ்வரும் விண்டோ வரும்.



இதில் கீழ்கண்ட விவரங்களை தட்டச்சு செய்து பின்னர் available to all users தேர்வு செய்யவேண்டும்.
bsnlலுக்கானது
1.connection name -> bsnl
2.number =>*99#
3.user name-> செல்போன் நம்பர்
4.password->செல்போன் நம்பர்
5. APN -> portalsouth.cellone.in
வேறு எதையும் நிரப்ப வேண்டாம்.

tatadocomoக்கானது

1.connection name -> tatadocomo
2.number =>*99#
3.user name-> தேவையில்லை
4.password->தேவையில்லை
5. APN -> TATA.DOCOMO.DIVE.IN
வேறு எதையும் நிரப்ப வேண்டாம்.

பின்னர் firefox உலாவியில் செய்ய வேண்டிய settings

firefox உலாவியில்
Edit->Preferences->Advanced->Networks->Settings தேர்வு செய்து பின் வரும் settings செய்யவேண்டும்.
For Bsnl
Manual proxy settings தேர்வு செய்து பின்னர்
HTTP proxy serverஇல் 10.31.54.2 portல் 9401 என தட்டச்சு செய்யவேண்டும்.

for Tatadocomo
Manual proxy settings
HTTP proxy server->10.124.94.7 port->8080 என தட்டச்சு செய்து ok கொடுத்து வெளியேற வேண்டும்.பின்னர் உலாவியில் இணைய பக்கங்களை பார்வையிடலாம்.