Pages

Showing posts with label libreoffice. Show all posts
Showing posts with label libreoffice. Show all posts

Saturday, January 21, 2012

உபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு

உபுண்டுவில் libreoffice ன் புதியபதிப்பு 3.4.5வினை நிறுவுவதைப்பற்றிப் பார்க்கலாம். இதனை PPA மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்வதன் மூலம் நிறுவிக்கொள்ளமுடியும்.

sudo add-apt-repository ppa:libreoffice/ppa

sudo apt-get update

sudo apt-get upgrade


இதை பற்றிய அறிவிப்பினை காண இந்த சுட்டியை பார்க்கவும்.

Sunday, March 20, 2011

உபுண்டு libreofficeல் spalash screen

உபுண்டு libreoffice spalash screen ஐ வேறு புதிய வடிவில் மாற்றம் செய்ய முடியும்.




மேற்கண்டவாறு படங்கள் வருவதற்கு இந்த சுட்டியிலிருந்து tar.gz கோப்பினை தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

மேசைமீது தரவிறக்கி விரித்துகொள்ள வேண்டும். இதில் about.png மற்றும் intro.png என்ற இரண்டு கோப்புகள் இருக்கும். இந்த இரண்டு கோப்புகளையும் /usr/lib/libreoffice/program/ என்ற அடைவினுள் காப்பி செய்துவிடவேண்டும்.

sudo cp *.png /usr/lib/libreoffice/program/

ஏற்கனவே இந்த அடைவினுள் இருந்த about.png மற்றும் intro.png ஆகிய கோப்புகளை backup காப்பி எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo cp /usr/lib/libreoffice/program/about.png /usr/lib/libreoffice/program/about.png.back
sudo cp /usr/lib/libreoffice/program/intro.png /usr/lib/libreoffice/program/intro.png.back


இதன் பின்னர் /etc/libreoffice/sofficerc என்ற கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

sudo gedit /etc/libreoffice/sofficerc

இந்த கோப்பினையும் ஒரு backup காப்பி எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo cp /etc/libreoffice/sofficerc /etc/libreoffice/sofficerc.back

இதில் இருந்தவற்றை அழித்துவிட்டு கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு சேமித்து வெளியேறவேண்டும்.

[Bootstrap]
HideEula=1
Logo=1
NativeProgress=true
ProgressBarColor=78,158,1
ProgressFrameColor=45,45,45
ProgressPosition=60,277
ProgressSize=320,6


இப்போது libreoffice சென்றால் மேற்கண்டவாறு spalash screen இருக்கும்.

Sunday, February 27, 2011

உபுண்டுவில் libreoffice 3.3.1



உபுண்டுவில் libreoffice ன் புதிய பதிப்பு 3.3.1 வெளி வந்துவிட்டது. இதனை எப்படி நிறுவுவது என்பது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி.

சுட்டி1

சுட்டி2

தற்சமயம் புதிய பதிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே நிறுவியவர்கள் update செய்துகொள்ளலாம். புதியதாக நிறுவ விரும்புவர்கள் ppa மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

Wednesday, January 26, 2011

உபுண்டுவில் libreoffice 3.3.0 stable version



உபுண்டுவில் libreoffice 3.3.0 stable version இப்போது வெளிவந்துள்ளது. இதனை PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம். இதை பற்றி ஏற்கனவெ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.


இது பற்றி மேலும் அறிய கீழ்கண்ட சுட்டிகளை பார்க்கவும்.

தரவிறக்கி நிறுவிக்கொள்ள
சுட்டி 1

இது பற்றிய அறிவிப்பை காண
சுட்டி 2



Monday, January 3, 2011

உபுன்டுவில் libreoffice ஐ PPA வழியாக நிறுவ

உபுண்டுவில் libreoffice நிறுவுவதற்க்கு தரவிறக்கம் செய்துதான் நிறுவவேண்டியிருந்தது. இப்போது இதற்கேன PPA வந்துள்ளது. டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்தால் software sourceல் சேர்ந்துவிடும்.

sudo add-apt-repository ppa:libreoffice/ppa

sudo apt-get update

sudo apt-get install libreoffice

என்று தட்டச்சு செய்தால் libreoffice நிறுவப்பட்டுவிடும்.

Saturday, October 2, 2010

உபுண்டுவில் libreoffice

உபுண்டுவில் openofficeக்கு பதில் வந்திருப்பது தான் libreoffice. இதன் செயல்படுகள் அனைத்தும் openoffice போலவே இருக்கிறது. Open officeஐ oracle நிறுவனம் வாங்கிவிட்டதால் நாம் libreofficeக்கு மாற வேண்டியதாகிவிட்டது. இந்த நிரலை உருவாக்கியவர்கள் openoffice உருவாக்கியவர்களே. மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்கவும்.


உபுண்டுவும் libre officeக்கு மாற போவதாக செய்திகள் வந்திருக்கின்றன். முதலில் இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.

டெர்மினலில் கோப்பினை தரவிறக்கிகொள்ளலாம்.

cd Desktop

wget http://download.documentfoundation.org/libreoffice/testing/LO_3.3.0-beta1_Linux_x86_install-deb_en-US.tar.gz

இந்த கோப்பினை நம்முடைய மேசையின் மீதே வைத்துக்கொள்ளலாம்.பின்னர் இதை விரிவாக்கினால் en-US என்ற அடைவினுள் இருப்பதை பார்க்கலாம்.

sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/*.deb என்று கட்டளையிட்டால் libreoffice நிறுவப்பட்டுவிடும்.

பின்னர் கீழ்கண்டவாறு கட்டளையிட்டு இந்த நிரல்களை Applications->Officeல் வரவழைக்கலாம்.

sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/desktop-integration/libreoffice3.3-debian-menus_3.3-9526_all.deb

இப்போது மேனுவில் வந்துவிடும்.




இந்த நிரலின் சிறு ஐகான் மேலே உள்ள பேனலில் இருப்பதை காணலாம்.


1.Libreoffice 3.3 Writter




2.LibreOffice 3.3 Calc


3.LibreOffice 3.3 base


Libreoffice ன் வரவை Richard Stallman வரவேற்றிருக்கிறார். Canonical,Redhat,Google,Novell போன்ற லினக்ஸ் நிறுவனங்களும் வரவேற்றுள்ளன.

Libreoffice உடன் openoffice செர்த்து இயக்கலாம். அல்லது open office நீக்கிவிட்டும் இயக்கலாம்.