Pages

Showing posts with label vlc. Show all posts
Showing posts with label vlc. Show all posts

Saturday, November 19, 2011

உபுண்டுவில் application launcher உருவாக்குதல்

உபுண்டு 11.10ல் application launcher எப்படி உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம்.

முதலில் விஎல்சியின் launcher உருவாக்குவதைப்பற்றி பார்க்கலாம்.

இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get install --no-install-recommends gnome-panel


பின்னர் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

gnome-desktop-item-edit ~/Desktop/ --create-new

இதனை தட்டச்சு செய்தபின் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் Nameல் VLC என்று தட்டச்சு செய்தபின் commandல் vlc என்று தட்டச்சு செய்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


இப்போது மேசைமீது launcher உருவாகி இருப்பதை பார்க்கலாம்.

Friday, August 26, 2011

உபுண்டுவில் vlc உதவியுடன் வீடியோ wallpaper அமைக்க


உபுண்டுவில் vlcயின் உபயோகம் பல உள்ளது. இதில் ஒன்று ஒரு வீடியோ கோப்பினை wall paper ஆக மாற்றி அமைக்க முடியும். இதற்கு உதவும் கட்டளை cvlc என்பதாகும்.

டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

cvlc --video-wallpaper --no-audio /home/user name/Videos/video file

இதனை உபுண்டு துவங்கும் போதே ஆரம்பிக்க startup applicationல் சேர்த்துவிட வேண்டும்.

system->preferences->startupapplications செல்ல வேண்டும். இதில் add பொத்தானை அழுத்தினால் வரும் விண்டோவில் கட்டளைகளை அமைக்க வேண்டும்.


Name->Video Wallpaper
Command->cvlc --video-wallpaper --no-audio /home/user name/Videos/video file

இந்த கட்டளை கொடுத்தால் ஆடியோ கேட்க்காது. ஆடியோ வேண்டுமென்றால் மேற்கண்ட கட்டளை வரியிலிருந்து --no-audio என்பதனை நீக்கிவிட வேண்டும். இப்போது கணினியை மீளதுவங்க வீடியோ கோப்பு wall paper ஆக ஒட ஆரம்பிக்கும்.



Thursday, February 10, 2011

உபுண்டுவில் youtube வீடியோக்களை vlc/mplayerல் ஒட வைக்க

உபுண்டுவில் youtube.com ல் உள்ள வீடியோக்களை vlc/mplayerல் ஒடவைக்க முடியும். அதாவது flash நிறுவமலேயே youtube வீடியோக்களை பார்க்க இயலும்.

முதலில் டெர்மினலில் yt என்னும் பெயருடைய கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். பெயர் நம் விருப்படி கொடுத்துக்கொள்ளலாம்.

sudo gedit /usr/local/bin/yt

இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து செமித்துக்கொள்ள வேண்டும்.

#!/bin/bash

FLASH_TMP=`ls /tmp | grep Flash*`

if [[ $FLASH_TMP ]]; then
vlc /tmp/Flash*;
else
flashvids() { lsof -p `ps x | awk '/libflashplayer.so\ /{print $1}'` -n 2>/dev/null | perl -lne '@F = split(/ +/, $_, 9); print "/proc/$F[1]/fd/${\($F[3] =~ /(^\d+)/)[0]}" if $F[4] eq "REG" && $F[8] =~ /\(deleted\)$/'; }
vlc $(flashvids)
fi


பின்னர் இந்த ஸ்கிரிப்டை இயக்க நிலையில் வைக்க கீழ்கண்ட வரியை டெம்ரினலில் தட்டச்சு செய்ய வேண்டும். மேற்கண்ட ஸ்கிரிப்டில் vlc க்கு பதில் mplayer என்பதாகவும் இருந்தால் வீடியோக்கள் mplayerல் காணலாம்.

sudo chmod +x /usr/local/bin/yt

பின்னர் டாப் பேனலில் கிளிக் செய்து Add to panelல்->custom application launcher என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில்

Name->Flash
Command->/usr/local/bin/yt

என்பதாக தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும்.


இப்போது நெருப்பு நரியில் youtube.com ஐ திறந்து ஒரு வீடியோவை இயக்கவேண்டும். பின்னர் டாப் பேனலில் இருக்கும் ஐகானை கிளிக் செய்தால் youtube வீடியோக்கள் vlc/mplayerல் காண முடியும்.


மேலே உள்ள படம் வீடியோ flash playerல் ஒடியது. அதே வீடியோ vlcயில் ஒடும்போது கீழ்கண்டவாறு இருக்கும்.



இப்போது இரண்டு வீடியோக்களும் ஒடும். Flashல் ஒடுவதை நிறுத்திவிடலாம்.

Saturday, January 15, 2011

உபுண்டுவில் பல்வேறு வீடியோ கோப்புகள் default ஆக vlcயில் திறக்க

உபுண்டுவில் வீடியோ கோப்புகளை திறக்க கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்தால் totem movie player ல் தான் இயங்கும். இதை மாற்றி vlcயில் திறக்க வைக்க முடியும்.

இதற்கு கீழ்கண்ட இரண்டு கோப்புகள் உதவுகிறது.

1. /.local/share/applications/mimeapps.list இந்த கோப்பு home அடைவினுல் மறைக்கப்பட்ட கோப்பாகும். home அடைவிற்கு சென்று control+H பொத்தான்களை ஒருசேர அழுத்தினால் மறைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் அடைவுகள் தெரியும்.

2./usr/share/applications/defaults.list இந்த கோப்பில் தான் எந்த கோப்புகள் எந்த நிரல் மூலம் திறக்கும் என்ற செய்தி இருக்கும்.

இப்போது டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து வீடியோ கோப்புகள் திறக்கும் நிரல்களை பார்க்கலாம்.

cat /usr/share/applications/defaults.list | grep video




மேலே உள்ள படத்தில் காணப்படும் வரிகளை mimeapps.list கோப்பினுள் சேர்த்துவிட்டு totem என்பதனை vlc என்று மாற்றி விட்டால் போதும்.

இதற்கு முன் mimeapps.list என்னும் கோப்பினை ஒரு backup எடுத்து கொள்வது நல்லது.

cp ~/.local/share/applications/mimeapps.list ~/.local/share/applications/mimeapps.list.back

என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் backup உருவாகிவிடும்.

பின்னர் டெர்மினலில்

cat /usr/share/applications/defaults.list | grep video >> /.local/share/applications/mimeapps.list

என்று தட்டச்சு செய்தால் mimeapps.list னுள் வீடியோ சம்பந்தப்பட்ட வரிகள் சேர்ந்துவிடும். இந்த கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்து திறந்து அதில் search->replace சென்று

search for ->totem
replace with -> vlc என்று தட்டச்சு செய்து replace பொத்தானை அழுத்தினால் totem என்பதற்கு பதில் vlc என்று மாறிவிடும்.


பின்னர் சேமித்து வெளியேற வேண்டும்.

இப்போது வீடியோ கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்தால் totemக்கும் பதில் vlc யில் கோப்புகள் ஒடதுவங்கும்.

இதே போல் ஆடியோ கோப்புகளையு செயல்படுத்த முடியும்.

உபுண்டு preferred applicationsல் vlc

உபுண்டு system->preferences->preferred applicatioன்->multimedia சென்றால் அதில் default ஆக rhythombox மற்றும் totoem ஆகிய இரண்டு மட்டும் இருக்கின்றன. அதில் vlc யை எப்படி கொண்டு வருவது பற்றி பார்ப்போம்.



இதற்கான கோப்பு

/usr/share/gnome-control-centre/default-apps/ என்ற அடைவினுள்தான் இருக்கும்.

எனவே இந்த அடைவினுள் vlc.xml என்ற கோப்பினை உருவாக்கி அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட்டால் போதும். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து ஒரு காலி கோப்பினை உருவாக்கி கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/share/gnome-control-centre/default-apps/vlc.xml



<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE default-apps SYSTEM "gnome-da-list.dtd">
<default-apps>
<media-players>
<media-player>
<name>VLC</name>
<executable>vlc</executable>
<command>vlc</command>
<icon-name>vlc</icon-name>
<run-in-terminal>false</run-in-terminal>
</media-player>
</media-players>
</default-apps>


மேற்கண்ட வரிகளை தட்டச்சு செய்து செமித்து வெளியேறவேண்டும்.

இப்போது System->preferences->prefered applications->multimedia சென்றால் vlc இருப்பதை பார்க்கலாம்.





Sunday, October 17, 2010

உபுண்டு vlcயின் இன்னொரு வடிவம்

உபுண்டுவில் விஎல்சியின் இன்னொரு வடிவத்தையும் காணலாம்.

டெர்மினலில் svlc என்று தட்டச்சு செய்யவேண்டும்.


மேலே கண்ட விண்டோவில் அம்பு குறி காட்டப்பட்டுள்ள் இடத்தில் கர்சரை வைத்து இடது சொடுக்க வரும் playlist விண்டோவில் பாடல்களை சேர்த்துக்கொள்ளலாம்.


மேலே உள்ள விண்டோவில் அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள '+' குறியை அழுத்தினால் பாடல்கள்/வீடியோ சேர்த்துக்கொள்ளலாம்.


Play பொத்தானை அழுத்தினால் மீடியா கோப்புகள் இயங்க தொடங்கும்.

Monday, September 13, 2010

உபுண்டு vlcயில் யூடியுப் படங்கள்

உபுண்டு vlcயில் youtube படங்களை காண முடியும். vlcயின் பல பயன்களில் இதுவும் ஒன்று.

முதலில்

Applications->Sound&video->VLC media player திறந்து கொள்ளவேண்டும். அதில்

Media->Advanced Open file->network சென்று அதில் யூடியுப் இணைய முகவரியை கொடுத்து play பொத்தானை அழுத்தினால் படங்கள் தெரியும்.



இதில் தெரியும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இணைய இணைப்பு சரியாக இருந்தால் வீடியோ நன்றாக வருகிறது.

Friday, September 10, 2010

உபுண்டுவில் terminalல் vlc உதவியுடன் பாடல்/வீடியோ கேட்க/பார்க்க

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் டெர்மினலில் பாடல் மற்றும் வீடியோ கேட்க பார்க்க முடியும். தற்போது வெளிவந்துள்ள 1.1.4 ன் உதவியுடன் இதனை செயல்படுத்த முடியும்.

முதலில் டெர்மினலில்

nvlc /media/entertainment/Aadhavan/*.mp3 என்று கட்டளை கொடுக்க வேண்டும். இதில் entertainment என்ற பார்டிஷீயனில் பாடல் மற்றும் வீடியோ சேமித்து இருக்கிறேன். *.mp3 என்பது பல பாடல்களை தேர்வு செய்வதற்கு பயன்படுகிறது.



இந்த கட்டளையை பயன்படுத்தி வீடியோ பார்க்க முடியும்.

nvlc /media/entertainment/ice3/ice3.avi

என்று டெர்மினலில் கட்டளை கொடுத்தால் ice3.avi என்ற வீடியோவை பார்க்க முடியும்.




இங்கு entertainment என்ற partition mount ஆகி இருக்க வேண்டும்.

nvlcல் playlist, media library போன்றவைகளையும் இயக்க முடியும்.

Thursday, August 19, 2010

உபுண்டுவில் விஎல்சி 1.1.3 நிறுவுவது எப்படி



உபுண்டுவில் vlc 1.1.3 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. இதை நிறுவுவதற்கு முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:n-muench/vlc
sudo apt-get update
sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc

என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.இதில் பலவித errors சரிசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இதுபற்றி தகவல் தெரிய இந்த சுட்டியை சொடுக்கக்வும்.

Thursday, June 24, 2010

உபுண்டுவில் புதிய பதிப்பான vlc 1.1.0

உபுண்டுவில் விஎல்சியின் புதியபதிப்பான 1.1.0 எவ்வாறு நிறுவுவது என்பதை பற்றிப் பார்ப்போம். முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:c-korn/vlc && sudo apt-get update
sudo apt-get install vlc mozilla-plugin-vlc

என்று தட்டச்சு செய்து விஎல்சியின் ppa ஐ software sourceல் சேர்ந்து விஎல்சி நிறுவப்பட்டுவிடும்.






வெப் காமிரா இணைத்தால்


Saturday, June 12, 2010

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் internet radio record செய்ய

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் இணையத்தில் கேட்கும் பல்வேறு ரேடியோக்களை கணினியில் சேமித்துக்கொள்ளமுடியும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit recordint.sh என்ற ஒரு காலியான கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/sh

vlc --run-time=10800 http://www.live365.com/play/319909? --sout "#duplicate{dst=std{access=file,mux=raw,dst=/home//mfn.mp3}" vlc://quit ;

பின்னர் சேமித்து வேளியேறவேண்டும்.

மீண்டும் டெர்மினலில் இந்த ஸ்கிரிப்டை இயங்குநிலையில் வைக்க

sudo chmod +x recordint.sh என்று தட்டச்சு செய்யவேண்டும்.

sudo ./recordint.sh என்று தட்டச்சு செய்தவுடன் வானொளி இயங்க தொடங்கும். இது mfn.mp3 என்ற கோப்பில் பதிவாகும்.



இதில் record செய்வதற்கு சிகப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.


இதில் mfn.mp3 என்பது இணைய ரேடியோவிலிருந்து நேரடியாக பதிவிறக்கம் ஆனது. இதில் உள்ள இன்னொரு கோப்பு விஎல்சி மூலம் record செய்யப்பட்டது.

நேரடியாக கணினியின் speakerல் கேட்பதற்கு கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

vlc --run-time=10800 http://www.live365.com/play/319909?


இப்போது speakerல் கேட்க முடியும்.

Sunday, February 14, 2010

உபுண்டு vlcயில் வீடியோ recording

உபுண்டுவில் ஏதாவது திரைப்படமோ அல்லது நிகழ்ச்சிகளோ ஒடிக்கொண்டிருக்கும்போது நமக்கு தேவையான இடத்தை மட்டும் தனியாக record செய்து பார்க்க முடியும்.

இதற்கான வழிகள் வழக்கமான vlcயிலேயே உள்ளது. vlc திறந்தவுடன் view->advanced control தேர்ந்தெடுத்தவுடன் record பட்டன் தெரிய ஆரம்பிக்கும். இது defaultஆக மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்.


இதை அழுத்தினால் record செய்ய ஆரம்பிக்கும். தேவையான பகுதி முடிந்தவுடன் மீண்டும் அழுத்தினால் record செய்வது நின்றுவிடும்.

நம்முடைய webcam மூலமாகவும் record செய்ய முடியும். இதற்கு

media->open capture device சென்று play பொத்தனை அழுத்தவேண்டும்.


இதில் record செய்யப்பட்ட வீடியோ avi formatல் இருக்கிறது. home அடைவினுள் செமிக்கப்படுகிறது. ஆனால் totemஇல் இந்த வீடியோவை ஒட விட்டால் பிழை செய்தி வருகிறது. vlcல் மட்டும் வேலை செய்கிறது. sound capture இல்லை.

Thursday, January 14, 2010

உபுண்டு vlc யில் logoவுடன் வீடியோ பார்ப்பதற்கு

உபுண்டு vlc யில் வீடியோ கோப்பு ஒடிக்கொண்டிருக்கும் போது நம்முடைய விருப்பம் போல் ஒரு சிறிய logo படத்தை திரையில் வரவழைக்கலாம்.

ஏதேனும் ஒரு அடைவினுள் ஒரு வீடியோ கோப்பையும் ஒரு சிறிய png வடிவ கோப்பையும் செமித்து கொள்ளவேண்டும்.

என்னுடைய கணினியில் desktopல் ice என்ற ஒரு அடைவை ஏற்படுத்தி அதில் ஒரு வீடியோ கோப்பையும் , png வடிவ logo கோப்பும் இருக்கிறது.

பின்னர் டெர்மினலில்

cd Desktop/ice என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/ice$

பின்னர் டெர்மினலில்

vlc --sub-filter logo --logo-file ubuntu.png ice3.avi என்று தட்டச்சு செய்தால் வீடியோ கோப்பு ஒட துவங்கும்.




நம்முடைய logoவுடன் வீடியோ கோப்பு ஒடுவதை பார்க்கலாம்.

Sunday, January 10, 2010

உபுண்டுவில் vlcயில் iso image கோப்பை இயக்குதல்

உபுண்டுவில் vlc

vlc மிகவும் அற்புதமான ஒரு media player ஆகும். அது பல கோப்பின் format களை ஆதரிக்கிறது.

ஒரு வீடியோ கோப்பின் .iso image கோப்பைகூட அது ஆதரிக்கிறது.

Applications->Sound & Video->VLC media player தேர்ந்தெடுத்து பின்னர் கோப்பை தேர்வு செய்யவேண்டும்.


மேற்கண்ட படத்தில் Media->Open file ல் கோப்பினை தேர்வு செய்யவேண்டும்.

iso image கோப்பினை சிடியில் எழுதாமலே vlcயில் play செய்யமுடியும்.



Tuesday, November 17, 2009

உபுண்டு 9.10க்கு மேம்படுத்தும் போது விஎல்சி சரிசெய்ய

உபுண்டு 9.10 மேம்படுத்தும் போது vlc சிலசமயங்களில் சரிவர வேலை செய்யாது. அப்போது கீழ்கண்ட சில வழிமுறைகளை கையாண்டு சரிசெய்யலாம்.

வழிமுறை 1.

டேர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட்டால் சரிசெய்யலாம்.

#sudo apt-get install libavcodec52

வழிமுறை 2.

ubuntu-restricted-extras நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இல்லையேனில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று டேர்மினலில் தட்டச்சு செய்து நிறுவி கொள்ளவேண்டும்.

வழிமுறை 3.

mediubunt resipo வை செயலிழக்க செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்
#sudo apt-get remove --purge ffmpeg gstreamer0.10-ffmpeg gstreamer0.10-fluendo-mp3 gstreamer0.10-plugins-ugly liba52-0.7.4 libavcodec52 libavformat52 libavutil49 libdvdnav4 libdvdread4 libgsm1 libid3tag0 libmad0 libmpeg2-4 libpostproc51 libschroedinger-1.0-0 libsidplay1 libswscale0 libtwolame0 ubuntu-restricted-extras libavcodec52 libavformat52 libswscale0 libvlc2 libvlccore2 vlc vlc-data vlc-nox vlc-plugin-pulse
என்று தட்டச்சு செய்து எல்லவகையான codeக்களையும் அழித்துவிடவும்.

பின்னர் டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-desktop நிறுவி கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நிரல் அழிக்கப்பட்டுஇருக்கும்.

பின்னர் கணினியை மீளதுவக்கி டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 4.

mediubuntu repo வை செயலிழக்க செய்யவேண்டும்.
#sudo apt-get --purge remove libx264-67 என்று தட்டச்சு செய்து குறிப்பிட்ட கோப்பை அழித்து மீண்டும் அதே கோப்பை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 5

பின்வரும் கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
#sudo apt-get remove smplayer
#sudo apt-get remove mplayer
#sudo apt-get remove libx264-67 –purge
#sudo apt-get install libx264-67
#sudo apt-get install smplayer
#sudo apt-get install mplayer
#sudo apt-get install vlc

மேற்கண்ட முறைகளினால் விஎல்சி வேலை செய்ய துவங்கும்.

Thursday, November 12, 2009

உபுண்டு 9.10 vlc with imagination slideshow

உபுண்டு 9.10 vlc பலவித effectக்கள் நாம் பார்க்கலாம். இந்த வீடியோவில் முதலில் வரும் slideshow எவ்வாறு settings அமைத்திருப்பதை காட்டும். அதை தொடர்ந்து வரும் slide, settings எவ்வாறு அமைத்திருக்கிறோமோ அதை சார்ந்து வருவது. இந்த settings செய்ய
Applications->sound & video->VLC mediaplayer சென்று tools->Effects & filters தேர்வு செய்தால் நாம் விருபியவாறு அமைத்துகொள்ளலாம்.

imagination என்ற நிரல் ubuntu software centerல் உள்ளது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.

Sunday, November 8, 2009

உபுண்டு vlc ல் vcd

vlc முந்தைய பதிப்புகளில் vcd பிரச்னை இருந்தது. ஆனால் 1.0.3 ல் vcd நன்றாக வேலை செய்கிறது. டெர்மினலில்
#use/bin/vlc vcd:// என்று டைப் செய்தால் vcd வேலை செய்கிறது.


இதை vlc ஐ திறந்தும் செய்யலாம்.
Applications->Sound & Video->VLC media player vlc->Media->Open disc

இதில் svcd/vcd ஐ தேர்ந்தெடுத்து play பொத்தானை அழுத்தினால் vcd நன்றாக ஒட ஆரம்பித்தது.

Wednesday, July 8, 2009

VLC 1.0.0 வெளி வந்துவிட்டது. இதை உபுண்டுவில் நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்

டெர்மினலுக்கு சென்று கீழ்கண்டவாறு டைப் செய்யவேண்டும்
1.Ubuntu Janty
sudo sh -c "echo 'deb http://ppa.launchpad.net/c-korn/vlc/ubuntu jaunty main' >> /etc/apt/sources.list"

2.8.10
sudo sh -c "echo 'deb http://ppa.launchpad.net/c-korn/vlc/ubuntu intrepid main' >> /etc/apt/sources.list"

3.8.04
sudo sh -c "echo 'deb http://ppa.launchpad.net/c-korn/vlc/ubuntu hardy main' >> /etc/apt/sources.list"

கீயை பெற
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 7613768D என்று டெர்மினலில் டைப் செய்யவேண்டும்

பின்னர் டெர்மினலில்
sudo apt-get update && sudo apt-get install vlc vlc-plugin-esd mozilla-plugin-vlc என்று டைப் செய்தால் VLC install
ஆகிவிடும்