Pages

Showing posts with label fonts. Show all posts
Showing posts with label fonts. Show all posts

Saturday, April 10, 2010

உபுண்டுவில் font management

புண்டுவில் எழுத்துருக்களை கையாள ஒரு நிரல் தான் font management. இதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதில் பலவித வசதிகள் தரப்பட்டுள்ளன.

1.எழுத்துருக்களை திரையில் காணலாம்.
2.activate/deactivate செய்யலாம்.
3.இரண்டு எழுத்துருக்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
4.எளிதில் நிறுவ/நீக்க முடியும்.
5.இதில் கணினியில் எழுத்துருக்களை மாற்றும் வசதி

applications->graphics->font manager தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் 6 வரை எண்கள் உள்ளன. அதில் உள்ள வசதிகளை பார்ப்போம்.

1. preferences. இதில் எழுத்துரு அடைவை சேர்க்கலாம்.



2.appearance preference. இது கணினியின் system->preference-appearance செல்கிறது.


3.export collection. இது tar, போன்ற backup எடுக்கலாம்.


4.எழுத்துருக்களை நிறுவ/நீக்க




5.character map




6.எழுத்துருவை பெரியதாக்க/சிறியதாக்கி திரையில் காண

இதன் icon top panelல் இருப்பதை காணலாம்.

எழுத்துருக்களை கையாள்வதற்கு ஒரு சிறந்த நிரல் ஆகும்.

Saturday, January 23, 2010

உபுண்டுவில் எழுத்துருக்களை நிறுவுவதற்கு

உபுண்டுவில் எழுத்துருக்களை நிறுவுவதற்கான வழிமுறைகள்

விண்டோவினுடைய எழுத்துருக்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

விண்டோவில் எழுத்துரு கோப்புகள் விண்டோவில் fonts என்ற அடைவினுள் இருக்கும். உபுண்டுவில் இருந்தபடியே அந்த அடைவை அணுகி உபுண்டு desktop காப்பி செய்யவேண்டும். அதாவது அடைவின் பெயர் wfonts என்பதாக இருக்கட்டும். உதாரணத்திற்க்காக அவரவர்கள் விருப்பபடி பெயர் வைத்துக் கொள்ளலாம்.

தினமலர், தினதந்தி,தினமணி போன்ற நாளிதழ்களை படிப்பதற்க்கு அந்தெந்த நாளிதழ்களின் வலைத்தளத்திலே எழுத்துரு தரவிறக்க சொல்லி இருப்பார்கள் அதையும் தரவிரக்கி இந்த எழுத்து அனைத்தையும் ஏதேனும் ஒரு அடைவினுள் அதாவது tfonts என்பதாக desktopல் இருக்கட்டும்.

இப்போது இரண்டு அடைவு இருக்கும். பின்னர் டெர்மினலில்

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$

பின்னர்

sudo mv wfonts /usr/share/fonts/truetype/ என்று தட்டச்சு செய்தால் கடவுச் சொல் கேட்கும். அதை அளித்தால் wfonts என்ற அடைவானது /use/share/fonts/truetype/ என்ற உபுண்டுவினுடைய அடைவிற்குள் சென்றுவிடும். இதே போல் tfonts என்ற அடைவையும் செய்யவேண்டும்.

மீண்டும் டெர்மினலுக்கு வந்து

#sudo fc-cache -f -v /usr/share/fonts/truetype/ என்று தட்டச்சு செய்தால் போதும். எழுத்துருக்கள் நிறுவப்பட்டுவிடும். open office போன்றவற்றிலும் வந்துவிடும். ஏதேனும் ஒரு தமிழ் எழுத்துருவை நிறுவ வேண்டியிருந்தாலும் இதே முறையை பின்பற்றலாம். ஒரு எழுத்துரு இருந்தால் அடைவு தேவையில்லை. அப்படியே mv கட்டளை கொடுத்து சேர்த்துக்கொள்ளலாம். இதற்கான கட்டளை

#sudo mv xxx.ttf /usr/share/fonts/truetype/tfonts/ என்று கட்டளை கொடுத்தால் எழுத்துரு அடைவினுள் சென்றுவிடும். இதன் பின் fc-cache கட்டளை கொடுக்கவேண்டும்.