Pages

Showing posts with label printing. Show all posts
Showing posts with label printing. Show all posts

Sunday, September 18, 2011

உபுண்டுவில் இரண்டு கணினி ஒரு அச்சு இயந்திரம்.

உபுண்டுவில் இரண்டு கணினி ஒரு அச்சு இயந்திரம் எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம்.

என்னிடம் ஒரு மேசை கணினி, ஒரு HP 530 மடிக்கணினி wifi வசதி உள்ளது மற்றும் ஒரு HP Desktop F4288 ஆகிய மூன்றையும் ஒரு wifi வசதியுள்ள bsnl modem உதவியுடன் இணைக்கலாம்.

முதலில் மடிக்கணினியையும் அச்சு இயந்திரத்தையும் இணைத்தேன். அச்சு இயந்திரத்திற்கு உபுண்டுவிலேயே டிரைவர் உள்ளதால் தானாகவே இணைந்து கொண்டது.இதனை system->printing சென்றால் காணலாம்.


பின்னர் system->printing->server->settings செல்ல வேண்டும். இதில் show printers shared by other systems, publish shared printers connected to this system, allow printing from the internet, allow remote administration போன்றவைகளில் டிக் செய்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


இந்த கணினியின் ip முகவரி network manager iconஇல் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் connection information ல் தெரிந்து கொள்ளலாம்.



இப்போது இந்த அச்சு இயந்திரத்தில் test pageனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.



இப்போது சற்று தொலைவில் உள்ள மேசை கணினியினை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.

இதிலும் system->printing->server->settingsனை முன்னர் குறிப்பிட்டது போலவே அமைத்துகொண்டாலே அச்சு இயந்திரம் இணைந்துவிடும்.


அப்படியில்லை என்றால் add பொத்தானை அழுத்தி வரும் விண்டோவில் internet printing protocol என்பதனை தேர்ந்தெடுத்து வலது புறம் உள்ள விண்டோவில்

host என்பதில் 192.168.1.3:631/printers/Deskjet-F4200-series என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இதில் அச்சு இயந்திரம் எந்த கணினியுடன் இணைந்திருக்கிறதோ அதன் ip முகவரியினை கீழ்கண்டவாறு தர வேண்டும்.

பின்னர் forward பொத்தானை அழுத்த அச்சு இயந்திரம் தயாரகிவிடும். இரண்டு கணினியிலும் அச்சு இயந்திரத்தின் டிரைவர்கள் இருக்க வேண்டும்.


இப்போது மேசைக்கணினியிலும் அச்சு இயந்திரம் செயல்படுவதைப்பார்க்கலாம்.

Wednesday, April 13, 2011

உபுண்டுவில் Epson printer drivers

உபுண்டுவின் அடுத்த புதிய பதிப்பான 11.04ல் epson printerகள் கணினியுடன் இணைக்கப்பட்டவுடன் தானாகவே driverகளை தேடி நிறுவிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த driverகள் கிடைக்கும் சுட்டிகள்

1.http://avasys.jp/eng/service/

2.http://www.openprinting.org




உபுண்டுவில் மற்ற பதிப்புக்களிலும் இந்த driver கோப்பினை தரவிறக்கி பயன்படுத்தலாம். மேலும் 268 Epson model inkjet printerகளை 11.04லிருந்து கணினியுடன் அச்சு இயந்திரத்தை இணைத்தவுடன் தானாகவே driverகளை தேடி நிறுவிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

Saturday, May 15, 2010

உபுண்டுவில் LBP2900 canon அச்சு இயந்திரம்

உபுண்டுவில் canon LBP 2900 அச்சு இயந்திரத்தை நிறுவுவதைப்பற்றி பார்ப்போம்.

முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து driver கோப்புகளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். இது tar கோப்பாக இருக்கும். தரவிறக்கி கணினியில் விரித்துக்கொள்ளவேண்டும்.



பின்னர் டெர்மினலில் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு கட்டளையாக கொடுக்க வேண்டும்.

sudo /etc/init.d/cups restart

sudo /usr/sbin/ccpdadmin -p LBP2900 -o /dev/usb/lp0

ls /usr/share/cups/model/ |grep CNCUPS

/usr/sbin/lpadmin -p LBP2900 -m CNCUPSLBP2900CAPTK.ppd -v ccp:/var/ccpd/fifo0 -E

இப்போது system->administration->printing சென்றால் lbp2900 அச்சு இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.



பின்னர் இதை கணினி ஆரம்பிக்கும் போதே ஆரம்பிக்க

sudo /etc/init.d/ccpd start

sudo update-rc.d ccpd defaults 20

இப்போது அச்சு இயந்திரம் தயாரகிவிடும்.

Saturday, February 27, 2010

உபுண்டுவில் printer queue வை clear செய்ய

உபுண்டுவில் printer queueவை clear செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பார்க்கலாம்.

ஒரு கோப்பினை அச்சு எடுப்பதற்கான கட்டளையை கொடுத்துவிட்டு பின்னர் அதை clear செய்ய இதை பயன்படுத்தலாம்.

முதலில் டெர்மினலில் lpq என்று தட்டச்சு செய்தால்.


arulmozhi@arulmozhi-desktop:~$ lpq
Deskjet-F4200-series is not ready
Rank Owner Job File(s) Total Size
1st arulmoz 3 leave 55296 bytes
arulmozhi@arulmozhi-desktop:~$

என்று வரும் இந்த queueவை clear செய்ய டெர்மினலில்

cancel -u user name கொடுத்தால் clear ஆகிவிடும்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cancel -u arulmozhi
arulmozhi@arulmozhi-desktop:~$


மீண்டும் டெர்மினலில் lpq என்று தட்டச்சு செய்தால் அனைத்தும் clear ஆகி இருப்பதை காணலாம்.

அனைத்து பயனர்களின் printer queueவை clear செய்ய டெரினலில்

cancel -a என்று தட்டச்சு செய்யவேண்டும்.

Monday, February 8, 2010

உபுண்டுவில் நெருப்பு நரி மூலம் அச்சு இயந்திரம் நிறுவுதல்

உபுண்டுவில் அச்சு இயந்திரத்தை நெருப்பு நரியில் நிறுவுவதை பார்ப்போம். பொதுவாக hp அச்சு இயந்திரங்கள் நிறுவுவதற்கு software centerல் hplip என்ற நிரலை நிறுவுவோம். பின்னர் system->administration->printing மூலம் நிறுவுவோம். அப்படியில்லமல் நெருப்பு நரி மூலம் அச்சு இயந்திரம் நிறுவலாம். நான் என்னுடைய பணிக்காக hp f4288 என்று ஒரு அச்சு இயந்திரத்தை நிறுவியிருக்கிறேன்.

இதற்கு முதலில் hplip நிறுவப்பட்டு இருக்க வேண்டும். இது applications->ubuntu software center ல் இருக்கிறது. பின்னர் உலாவியை திறந்து அதன் அட்ரஸ் பாரில் localhost:631 என்று தட்டச்சு செய்யவேண்டும்.முதலவதாக அச்சு இயந்திரத்தை கணினியுடன் இணைக்க வேண்டும். அதை onlineல் இருக்க செய்யவேண்டும்.


பின்னர் cups for administrators என்பதன் கீழ் அமைந்துள்ள add printers and classes என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் add printer ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் உபுண்டுவி லாகின் பெயரையும் கடவு சொல்லையும் தட்டச்சு செய்யவேண்டும்.

இதில் அச்சு இயந்திரத்தின் வரிசை எண்ணுடன் HP Deskjet F4200 series USB CN96Q580GY05BR HPLIP (HP Deskjet F4200 series) என்பதனை டிக் செய்து continue பொத்தனை அழுத்தவேண்டும்.

இதிலும் continue பொத்தனை அழுத்தவேண்டும்.

பின்னர் add printer என்ற பொத்தனை அழுத்தவேண்டும்.


இதில் பேப்பரின் அளவு போன்றவற்றை அமைக்கலாம். set default option அழுத்தவேண்டும்.


அவ்வளவுதான் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டுவிட்டது. பின்னர் system->administration->printing சென்றால் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.


ஒருசில அச்சு இயந்திரத்திற்கான driver கள் உள்ளிணைப்பாகவே அமைந்துள்ளது. எனவே அச்சு இயந்திரம் நிறுவுவதில் அதிகம் சிரமம் இருக்காது.

Sunday, November 29, 2009

உபுண்டுவில் புகைப்படங்களை பெரிதாக அச்சு எடுத்தல்

உபுண்டுவில் நம்முடைய புகைப்படங்களை அளவில் பெரியதாக அச்சுஎடுக்க முடியும். இதற்கு உதவுவது தான் PosteRazor என்ற நிரல் பயன்படுகிறது. இதை நிறுவுவதற்கு

Applications->Ubuntu software center சென்று PosteRazor தெர்ந்தெடுத்து நிறுவிகொள்ளவேண்டும்.
பின்னர்

Applications->Graphics->PosteRazor



மேலே உள்ள படத்தில் settings தெர்வு செய்து படங்களின் அளவுகளை தெர்வு செய்யலாம்.

இதில் நமக்கு வேண்டிய அளவுகளை தெர்ந்தேடுத்துக் கொள்ளலாம்.

input image தெர்வு செய்து அச்சுஎடுக்கும் படத்தினை தெர்வு செய்யவேண்டும்.



next அழுத்தினால் அடுத்த விண்டொ விரியும்.

இங்குதான் நமக்கு வேண்டிய அளவுகளை நாம் தரவேண்டும்.

paper formatன் கீழ் இரண்டு option இருக்கும். இதில் standardல் landscap அல்லது portrait தெர்ந்தேடுக்கவேண்டும்.

custom ல் நீளம், அகலம் நாமே நமக்கு தேவையான அளவுகளை கொடுக்கலாம்.




மேலே உள்ள விண்டொவில் படம் பலபிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். image sizeன் கீழ் absolute size, size in pages, size percentல் நமக்கு வேண்டிய அளவுகளை கொடுத்து கொள்ளலாம். பின்னர் next அழுத்தினால்.



மேலே உள்ள படத்தில் save the posterன் கீழ் இருக்கும் பகுதியில் அழுத்தினால் கோப்பு செமிக்கப்படும்.

pdf வடிவில் கோப்பு செமிக்கப்படும். பின்னர் adobe pdf அல்லது document viewverல் கோப்பை திறந்து நாம் அச்சு எடுத்துகொள்ளலாம். பல பக்கங்களை உடைய கோப்பாக இருக்கும். அச்சுஎடுத்து பின்னர் சேர்த்து கொள்ளலாம்.

Monday, October 12, 2009

உபுண்டுவில் photo printer

நேற்று Add/Removeல் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட ஒரு நிரல்தான் Gnome Photo Printer.பலவகையில் உபயோகமாகயிருக்கும்.

Applications->Add/Remove->Gnome Photo Printer என்று search boxல் தேடி நிரலை தேர்ந்தெடுத்து apply செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

Applications->Graphics->Gnome Photo Printer இப்போது நிரல் வேலை செய்யதொடங்கும்.

இந்த பகுதியில் +Add அழுத்தினால் படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் பலவித layoutகளையும் custom size வைத்துக்கொள்ளலாம்.
அளவுகளை சரிசெய்ய உதவுகிறது.

இதில் printerகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த பகுதியில் paper size, margin, போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது. print previewயும் பார்த்துக்கொள்ளலாம். பின்னர் print செய்துக்கொள்ளலாம்.ஒரே பக்கத்தில் பல படங்களையும் அச்சு எடுத்துக்கொள்ளலாம்.

Sunday, October 11, 2009

உபுண்டுவில் HP printer

உபுண்டுவில் printer வேலை செய்வதைப்பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும் HP printerகள் நன்றாக வேலை செய்கிறது. இதற்கு Applications-Add/Removeல் HP Toolbox நிறுவிக்கொள்ளவேண்டும். நேற்றுதான் இந்த வகை printer ஒன்று HP deskjet F4288 என்ற பேசிக் மாடல் பிரின்டர் வாங்கினேன். இந்த பிரின்டர் உபுண்டுவில் நன்றாக வேலை செய்கிறது. இதில் scanம் நன்றாக இருக்கிறது. Applications->Graphics->Xsane Image Scanning program உதவியாக இருந்தது.


பொருத்தி பார்த்ததில் கச்சிதமாக வேலை செய்ய ஆரம்பித்தது.printer test page கொடுத்தவுடன் அழகாக output வந்தது.
மேலே கண்ட படம் அதே பிரின்டரில் ஸ்கேன் செய்யப்பட்டது.