Pages

Showing posts with label shortcut. Show all posts
Showing posts with label shortcut. Show all posts

Tuesday, August 2, 2011

உபுண்டுவில் இரண்டு சொடுக்கில் shutdown செய்ய

உபுண்டுவை shutdown செய்யும் போது கீழ்கண்டவாறு திரை வரும்.



அப்படியில்லாமல் இரண்டு சொடுக்கில் shutdown செய்ய டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type bool --set /apps/indicator-session/suppress_logout_restart_shutdown true

இப்போது shutdown பொத்தானை அழுத்தினால் உடனடியாக shutdown ஆகும்.

மீண்டும் shutdown message வருவதற்க்கு கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type bool --set /apps/indicator-session/suppress_logout_restart_shutdown false

இரண்டாவது முறைப்படி gconf-editor சென்று apps->indicater-session இடது புறம் உள்ள விண்டோவில் suppress_logout_restart_shutdown என்பதற்கு நேராக டிக் செய்திட வேண்டும்.

Saturday, June 5, 2010

உபுண்டுவில் URL shortcut

உபுண்டுவில் url shorcut ஐ மேசைமீது கொண்டுவர முடியும். இதற்கு நெருப்பு நரியின் ஒரு add on உதவுகிறது.

Deskcut இந்த add onஐ நிறுவிக்கொண்டால் short cutஐ மேசைமீது வைத்துக்கொள்ளமுடியும்.



இந்த add onஐ நிறுவியவுடன் நெருப்பு நரியை restart செய்யவேண்டும். இப்போது நெருப்பு நரியை திறந்து அதன் முகவரி பெட்டியில் url ஐ தட்டச்சு செய்து அதை முழுவதும் தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து மேசைமீது விடவேண்டும். இப்போது நாம் விரும்பிய url மேசைமீது ஒரு சிறிய icon ஆக வந்துவிடும்.

Thursday, February 18, 2010

உபுண்டுவில் aliases

உபுண்டுவில் alises என்பது நாமே உருவாக்கும் கட்டளைகள் ஆகும். அதாவது பல கட்டளை வாக்கியங்களை சுருக்கி ஒரே ஒரு வார்த்தையில் தருவது.

உதாரணமாக நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் கட்டளைகள்

sudo apt-get update
sudo apt-get upgrade என்ற கட்டளைகளை உபயோகிப்போம். அல்லது

sudo apt-get update && sudo apt-get upgrade என்றவாறு உபயோகிப்போம். அப்படியில்லாமல் வேறு மாதிரி பயன்படுத்தலாம்.

home அடைவினுள் இருக்கும் கோப்பான bashrc என்ற கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்ப்பதன் மூலம் சுருக்கி தரமுடியும். இதை காண home அடைவினுள் சென்று contrl+H பொத்தான்களை அழுத்தவேண்டும். கோப்பின் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் கோப்பு திறந்து கொள்ளும்.

bashrc என்ற கோப்பில் (homeஅடைவினுள் இருப்பது) கடைசியில்

alias upgrade='sudo apt-get update && sudo apt-get upgrade' என்ற வரிகளை சேர்த்து பின்னர் சேமிக்கவேண்டும்.

டெர்மினலில்

upgrade என்று மட்டும் தட்டச்சு செய்தால் மேலே சொன்ன இரண்டு கட்டளைகளும் செயல்படுவதை பார்க்கலாம்.


இது போல் பல கட்டளைகளை செயல்படுத்தலாம். உதாரணமாக

alias killfx='kill -9 $(pidof firefox)'
alias gotocd='cd /media/cdrom0' ஆகிய இரண்டு கட்டளைகள்

முதல் கட்டளை நெருப்பு நரியை மூடிவிடும்.நெருப்பு நரி திடீரென்று நின்று போனால் இதை உபயொக்கிலாம்.

இரண்டாவது கட்டளை cdயில் உள்ள கோப்புகளை காணலாம்.