Pages

Showing posts with label download. Show all posts
Showing posts with label download. Show all posts

Tuesday, June 1, 2010

உபுண்டுவில் multige download manager

உபுண்டுவில் கோப்புகளை இணையத்தில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்ய பயன்படுக் நிரல்தான் multiget. இது ubuntu software centreல் இருக்கிறது.

எனவே Applications->ubuntu software centre சென்று அதன் search boxல் multiget என்று தட்டச்சு செய்தால் நிரல் வந்துவிடும். பின்னர் நாம் நிறுவிக்கொள்ளலாம்.


நிரலை இயக்க applications->internet->multiget தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் add பொத்தானை அழுத்தி நமக்கு வேண்டிய தரவிறக்கம் செய்யவேண்டிய முகவரியை சேர்த்துக்கொள்ளலாம்.


இதில் ok அழுத்தினால் கோப்பு தரவிறக்க ஆரம்பிக்கும்.


இதில் option சென்று நமக்கு தேவையான அமைப்புகளை வைத்துக்கொள்ளலாம்.

Tuesday, March 16, 2010

உபுண்டுவில் uget download manager

உபுண்டுவில் uget download manager என்பது கோப்புகளை இணையத்திலிருந்து தரவிறக்க உதவும் ஒரு மென்பொருளாகும்.

இது ஒரு கட்டட்ற்ற மென்பொருள் ஆகும். இதனை நிறுவ getdeb.netன் repositoryஐ இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிகொள்ளவேண்டும். அதற்கு டெர்மினலில்

sudo dpkg -i getdeb-repository_0.1-1~getdeb1_all.deb என்று கட்டளையிட வேண்டும்.பின்னர் uget என்ற சுட்டிக்கு செல்ல வேண்டும்.


மேற்கண்ட படத்தில் install now என்ற பொத்தனை அழுத்தினால் நிரல் நிறுவ ஆரம்பிக்கும்.



இதில் ok அழுத்தியவுடன் நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர்

applications->internet->uget என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் icon top panelல் இருக்கும்.



இதை கிளிக் செய்தவுடன்


இந்த நிரலின் சிறப்பு என்னவென்றால் தரவிறக்க வேண்டிய சுட்டியை காப்பி செய்ததும் இந்த நிரல் வேலை செய்ய துவங்கும்.


ok அழுத்தியவுடன் தரவிறக்க ஆரம்பிக்கும். top panel இருக்கும் icon ல் இடது சொடுக்கினால் வரும் optionல் newfrom clipboard என்ற optionல் இருந்து புதிய தரவிறக்க வேண்டிய கோப்பினை தேர்ந்தெடுக்கலாம்.

Monday, January 25, 2010

உபுண்டுவில் பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்க

உபுண்டுவில் பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்க wget என்ற கட்டளை பயப்படுகிறது. இதை பயன்படுத்த முதலில் டெர்மினலில் ஏதேனும் பெயரில் ஒரு கோப்பினை உருவாக்கி அதில் நாம் தரவிறக்கம் செய்யப்பொகும் கோப்புகளின் url கொடுக்கவேண்டும்.

#sudo gedit file_name இந்த கோப்பில் தரவிறக்கப்பட வேண்டிய கோப்புகளின் url இருக்கும்.

http://sourceforge.net/projects/peazip/files/PeaZip%20for%20Linux%2C%20GTK2/2.9/peazip-2.9.LINUX.GTK2-1.i586.rpm/download
http://sourceforge.net/projects/parchive/files/gpar2/0.3/gpar2_0.3-1_i386.deb/download
http://sourceforge.net/projects/areca/files/areca-stable/areca-6.0.7/areca_6.0.7-ubuntu-gtk-32.deb/download

மேற்கண்டவாறு கோப்பு இருக்கும். பின்னர் டெர்மினலில் கீழ்கண்டவாறு கட்டளையிட வேண்டும்.

#wget -i pic என்று தட்டச்சு செய்யவேண்டும்.


நமக்கு நேரம் மிச்சம் ஆவதுடன் விரைவாகவும் தரவிறக்கவும் முடியும்.