Pages

Showing posts with label panel. Show all posts
Showing posts with label panel. Show all posts

Thursday, September 2, 2010

உபுண்டுவில் panel restore/save செய்தல்

உபுண்டுவில் panelஐ restore/save செய்வதற்கான ஒரு சிறிய ஸ்கிரிப்ட்

PanelRestore.sh

மேற்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கியவுடன் கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்ய வரும் விண்டோவில் run பொத்தானை அழுத்த ஸ்கிரிப்ட் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

run பொத்தானை அழுத்தியவுடன்




இதில் இருக்கும் மூன்று ஆப்ஷனில் முதலில் save panel settings தேர்ந்தெடுத்து ok அழுத்தியவுடன்



கோப்பின் பெயரை கொடுத்து ok அழுத்தயவுடன் கோப்பு செமிக்கப்பட்டுவிடும்.


பேனல் ஏதாவது ஒரு காரணத்தால் சிதைந்து போனால் restore ஆப்ஷன் தேர்ந்தெடுத்து restore செய்து கொள்ளலாம்.

Tuesday, June 22, 2010

உபுண்டுவில் panelல் உள்ள கடிகாரத்தின் வடிவை மாற்ற



உபுண்டுவில் panelல் உள்ள கடிகாரத்தை அமைப்பை மாற்றலாம்.


இப்படி இருக்கும் கடிகாரம் கீழ்கண்டவாறு மாற்றலாம்.



முதலில் Alt+F2 என்று தட்டச்சு செய்து வரும் விண்டோவில் gconf-editorஐ திறந்துகொள்ளவேண்டும்.


இதில் Apps > Panel > Applets > Clock_Screen* > Prefs சென்று அதில் formatல் வலது சொடுக்கி வரும் விண்டோவில் edit keyஐ தேர்ந்தெடுத்து custom என்று தட்டச்சு செய்யவும்.

பின்னர் custom_formatல் வலது சொடுக்கி வரும்விண்டோவில் edit keyஐ தேர்ந்தெடுத்து அதில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். இப்போது ok கொடுத்து வெளியேறவும்.


clock panel


இப்போது top panel ல் மாறி இருக்கும். அவ்வாறு மாறவில்லை என்றால் டெர்மினலில்

killall gnome-panel என்று தட்டச்சு செய்தால் மாறிவிடும்.