Pages

Monday, December 7, 2009

உபுண்டு பழுதாகி போனால் மீண்டும் நிறுவ

உபுண்டு பழுதாகி போனால் மீண்டும் நிறுவ கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.

#sudo dpkg-reconfigure -phigh -a

மேற்கண்ட கட்டளை பழுதான நிரல்களையும் மீண்டும் நிறுவ பயன்படும்.

அல்லது ஏதேனும் சிறிய அளவில் பழுதானால் அதற்கு கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

#sudo apt-get install -f

இது மிக எளிய கட்டளை ஆனால் இந்த கட்டளை தெரியவில்லை என்றால் மீண்டும் உபுண்டுவை கணினியில் நிறுவும்படி ஆகிவிடும்.

Saturday, December 5, 2009

உபுண்டுவில் அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க

உபுண்டுவில் அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க photorec என்ற நிரல் பயன்படுகிறது. இதை நிறுவுவதற்கு

#sudo apt-get install photorec என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். இந்த நிரலை செயல்படுத்த டெர்மினலில்

#sudo photorec என்று தட்டச்சு செய்தால் நிரல் செயல்பட துவங்கும்.



1.வன்தட்டை தேர்ந்தெடுத்தல்

2.intel தேர்ந்தெடுக்கவேண்டும்.


3.அழிந்த கோப்பு உள்ள partitionஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.


4.கோப்பின் வகையை தேர்ந்தெடுக்கவேண்டும்.


இங்கு ext2/ext3 என்பது linux partitionகளை குறிக்கும். other என்பது மற்ற partition களை குறிக்கும்.


5.திரும்ப கிடைத்த கோப்புகளை சேமிக்க


இங்கு 'y' கொடுத்தால் மீட்டெடுக்கும் பணி ஆரம்பித்துவிடும்.


இந்த கோப்புகள் recup_dir.1 or recup_dire.2 என்றவாறு சேமித்துக் கொள்ளும்.folder ன்னுள் கோப்புகள் வேறு பெயர்களில் சேமிக்கப்படும். பின்னர் நாம் rename கொடுத்து கொள்ளவேண்டும்.

http://cgsecurity.org என்பது இதனுடைய வளைத்தளம் 80 வகையான கோப்பு வடிவங்களை மீட்டுகொடுக்கும்.Photorec

Friday, December 4, 2009

உபுண்டுவில் காலியாக உள்ள folder களை அழிக்க(empty folder)

உபுண்டுவில் காலியாக உள்ள folder களை அழிக்க கீழ்கண்ட நிரலை (script)ஐ ஒரு கோப்பில் செமித்து கொள்ளவேண்டும். உதாரணமாக script என்ற கோப்பில் செமித்துகொள்ளலாம்.
டெர்மினலில்

#sudo gedit script என்று தட்டச்சு செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பை விரித்து கீழ்கண்ட நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.

#!/bin/bash

clear

echo
if [ $# = 1 ]
then
touch My_Empty_Directories
echo > My_Empty_Directories
echo The directories below are empty : >> My_Empty_Directories
echo >> My_Empty_Directories
for name in `ls -p $1 | grep /`
do
ls -l $1$name | grep 'total 0'
if [ $? = 0 ]
then
ls -l $1$name | grep d
if [ $? = 1 ]
then
hide=`ls -al $1$name | grep . | wc -l`
if [ $hide != 4 ]
then
echo $1$name >> My_Empty_Directories
fi
fi
fi
done
line=`cat My_Empty_Directories | wc -l`
if [ $line = 3 ]
then
echo
echo No empty directorie has been found
echo
rm -rf My_Empty_Directories
else
cat My_Empty_Directories
echo 'Do you want to delete them (yes/no/edit):'
read answer
if [ $answer = yes ]
then
rm -rf `cat My_Empty_Directories`
rm -rf My_Empty_Directories
echo Successfully done
fi
if [ $answer = edit ]
then
nano My_Empty_Directories
rm -rf `cat My_Empty_Directories`
rm -rf My_Empty_Directories
echo Successfully done
else
rm -rf My_Empty_Directories
fi
fi
else
echo Usage : ./script PATH
fi
#END

மேற்கண்ட நிரலை script என்ற கோப்பில் செமித்து கொள்ளவேண்டும். இந்த நிரலை executable ஆக கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

#sudo chmod +x script பின்னர் மீண்டும் டெர்மினலில்

#sudo ./script PATH என்று தட்டச்சு செய்தால் காலியாக உள்ள folder களை அழித்துவிடும்.

இங்கு PATH என்பது directoryஐ குறிக்கும். எடுத்துகாட்டாக

# sudo ./script /home/username/Desktop/xxx என்று உள்ளீட்டால் காலியாக உள்ள folder அழிந்துவிடும். இங்கு xxx என்பது காலியாக உள்ள folder ன் பெயரை குறிக்கும்.

உபுண்டுவில் நம்முடைய IP முகவரியை மறைத்து இணைய உலாவல்

உபுண்டுவில் நம்முடைய IP முகவரி, மற்றும் நம்மை பற்றிய தகவல்களை மறைத்துக்கொண்டு நெருப்பு நரியில் உலாவ முடியும். இதற்கு உதவுவது Tor என்ற நிரல். இதை நிறுவுவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

முதல் படி

முதலில் நம்முடைய software source திறந்து அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

deb http://deb.torproject.org/torproject.org lucid main

உபுண்டு நிறுவியது 10.10 ஆக இருந்தாலும் lucid என்றுதான் இருக்க வேண்டும்.

பின்னர் authentication சாவிக்கு கீழ்கண்ட வரியை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

gpg --keyserver keys.gnupg.net --recv 886DDD89
gpg --export A3C4F0F979CAA22CDBA8F512EE8CBC9E886DDD89 | sudo apt-key add -

மேற்கண்ட வரிகளை சேர்த்தப்பின் டெர்மினலில்

sudo apt-get update
sudo apt-get install tor tor-geoipdb என்று தட்டச்சு செய்து நிரல்களை நிறுவிக்கொள்ளவேண்டும்.

மேலும் வேறுவேறு வெர்ஷன்கள் நிறுவி இருந்தால் இந்த சுட்டியை பார்க்கவும்.

இரண்டாம் படி

இந்த நிரல்களை நிறுவியப்பின் /etc/polipo/ என்ற அடைவு உருவாகி இருக்கும். அதில் config என்ற கோப்பு உருவாகி இருக்கும். இந்த கோப்பினை திறந்து அதில் உள்ளதை அழித்துவிடவும், பின்னர் இந்த சுட்டிக்கு சென்று அதில் உள்ளதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும். பின்னர் சேமித்து வெளியேறிவிடவேண்டும்.

மீண்டும் இந்த polipo அடைவினை இயக்க டெர்மினலில்

sudo /etc/init.d/polipo restart என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இந்த polipo என்பது software centerல் உள்ளது. கோப்போ அல்லது அடைவோ இல்லையேன்றால் இதை நிறுவிக்கொள்ளவேண்டும்.

மூன்றாம் படி

Tor and polipo ஆகிய இரண்டு நிரலகளை நிருவியப்பின் இந்த நெருப்பு நரி addon நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் நெருப்பு நரியை மீண்டும் துவங்க tor button செயல்பட துவங்கும்.



tor disabled என்பதன் மீது இரட்டை கிளிக் செய்ய அனானிமஸக உலாவ முடியும்.


இப்போது நாம் நிறுவியது செயல்படுகிறத என்பதை பார்க்க இந்த சுட்டியை பார்க்கவும்.

Tor செயல்படும் முன் இந்த இணையதளத்தில் இப்படி இருக்கும்.

Tor செயல்பட்டுகொண்டிருக்கும்போது இந்த இணையதளத்தில் இப்படி காட்டும்.




இப்போது நம்முடைய IP முகவரி எப்படி மாறியிருக்கிறது என்று பார்க்கலாம். இந்த சுட்டிக்கு சென்றால் காணலாம்.

Tor செயல்படும் முன்





Tor செயல்பாட்டில் வைத்திருக்கும் போது


இந்த tor plugin நெருப்பு நரியின் வலது கீழ் மூலையில் உள்ளதால் எளிதில் Enable/disable செய்துகொள்ளலாம்.

இந்த Tor செயல்பாட்டில் இருக்கும்போது இணைய இணைப்பின் வேகம் குறைந்துவிடுகிறது.

பிற்சேர்க்கை: இந்த பதிவு எழுத நண்பர் சுடுதண்ணி அவர்களின் பதிவான http://suduthanni.blogspot.com/2010/12/3.html காரணமாக அமைந்தது. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, December 2, 2009

உபுண்டுவில் clonezilla

உபுண்டுவில் clonezilla என்பது ஒரு டிரைவை backup எடுக்கும் ஒரு நிரலாகும். windows உள்ள 'C' drive அப்படியே இமேஜ் கோப்பாக மாற்றி பின்னர் restore செய்திடும் ஒரு நிரலாகும். norton ghost மற்றும் symentic ghost க்கு மாற்றாகும். இது கட்டற்ற மென்பொருளாகும்.'கிளோன்சில்லா' இந்த சுட்டியிலிருந்து iso கோப்பை தரவிரக்கி cdயில் எழுதி பின்னர் கணினி cd/dvdromல் இட்டு கணினியை restart செய்யவேண்டும்.

1. settings
2. மொழியை தேர்ந்தெடுத்தல்




3.clonezilla start


4.இப்போது device to image அல்லது device to device என்று தேர்ந்தெடுக்கவேண்டும்.


5.image கோப்பை செமிக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்.

6.ஆரம்ப உபயோகிப்பவரா அல்லது நன்கு தேர்ச்சி பெற்றவரா

7.create/restore option தேர்ந்தெடுக்கவேண்டும்.

8.image கோப்பிற்க்கு நம் விருப்பம் போல் பெயரிடுதல்

9.எந்த வட்டை காப்பி செய்யவேண்டுமோ அதை தேர்ந்தேடுக்கவேண்டும்.


10.இப்போது இமேஜ் கோப்பு create ஆகிவிடும்
இதன் தளமுகவரி 'clonezilla'

Tuesday, December 1, 2009

உபுண்டு 10.04 timeline

உபுண்டு 10.04ன் timeline

December 10th, 2009 – Alpha 1 release
January 14th, 2010 – Alpha 2 release
February 25th, 2010 – Alpha 3 release
March 18th, 2010 – Beta1 release
April 8th, 2010 – Beta2 release
April 22nd, 2010 – Release Candidate
April 29th, 2010 – Final release of Ubuntu 10.04 LTS

உபுண்டுவில் சி மற்றுல் சி++ compiler

உபுண்டுவில் C மற்றும் C++ compiler பற்றி பார்ப்போம்.
உதாரணத்திற்கு ஒரு எளிமையான நிரலை பார்ப்போம்.

1. C compiler

கீழ்கண்ட நிரலை test.c என்ற கோப்பில் செமித்துக் கொள்ளவேண்டும்.

#sudo gedit test.c என்று டெர்மினலில் கட்டளையிட்டு கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துகோள்ளவேன்டும்.

#include stdio.h இங்கு stdio.h '<>' குறிக்கு இடையே வரவேண்டும்.

int main()
{
printf("Hello, ubuntuintamil.blogspot.com\n");
return 0;
}

பின்னர் டெர்மினலில்

#cc -o ubuntu test.c என்று தட்டச்சு செய்தால் excutable கோப்பு உருவாகிவிடும். பின்னர் நிரலை இயக்க இங்கு test.c என்பது நிரல் அடங்கிய கோப்பாகும். ubuntu என்பது executable கோப்பாகும். டெர்மினலில்

#./ubuntu தட்டச்சுர் செய்தால் Hello, ubuntuintamil.blogspot.com என்று டெர்மினலில் தெரியும்.

2. C++ compiler

கீழ்கண்ட நிரலை first.cpp என்ற கோப்பில் செமிக்கவேண்டும்.

#sudo gedit first.cpp என்று டெர்மினலில் தட்டச்சு செய்து செமிக்கவேண்டும்.
#include iostraem இங்கு iostream '<>' குறிக்கு இடையே வரவேண்டும்.

int main()
{
std::cout << "Hello, ubuntuintamil.blogspot.com!" << std::endl;
return 0;
}

இதனை இயக்க டெர்மினலில்

g++ first.cpp -o test என்று கட்டளையிட வேண்டும். பின்னர் நிரலை இயக்க

#./test என்று கட்டளையிட வேண்டும்.

இதன் வெளிப்பாடு

Hello, ubuntuintamil.blogspot.com