Pages

Thursday, December 17, 2009

உபுண்டு 9.10 default மற்றும் கால அளவை மாற்ற

உபுண்டு 9.10ல் grub2 defaultஆக அமைந்துள்ளது. இதில் தேவையான மாற்றம் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

முந்தைய பதிப்பில் உள்ளது போல் நேரிடையாக மாற்றம் செய்ய இயலாது. அதாவது
/boot/grub ல் சென்று மாற்றம் செய்ய முடியாது. 9.10ல் /boot/grub ல் இதன் கோப்பு
/boot/grub/grub.cfg என்று அமைந்திருக்கும். இது read only கோப்பாகும். இதில் திருத்தம் செய்தால் எதுவும் பதிவாகாது.

இதனால் இதன் இன்னொரு கோப்பான

/etc/default/grub என்ற ஒரு கோப்பில்தான் மாற்றங்கள் செய்யமுடியும்.


மேலே உள்ள படத்தில் கோப்பின் உள்ளடக்கம் உள்ளது. இதில் மாற்றங்கள் செய்துகொள்ளமுடியும்.

GRUB DEFAULT இதில் நமக்கு வேண்டிய osஐ முதலில் தொடங்கலாம்.
GRUB_TIMEOUTல் os தொடங்கும் நேரத்தை வினாடியில் அமைக்கலாம்.
எல்லா மாற்றங்களையும் செய்தபின் கோப்பினை செமித்துவிடவும்.

பின்னர் டெர்மினலில்

#sudo update-grub2 என்று தட்டச்சு செய்தால் grub2ல் default மற்றும் கால அளவு மாறியிருக்கும்.

Wednesday, December 16, 2009

உபுண்டுவில் கணினி முழுவதற்குமான pulse audio equilizer

உபுண்டுவில் கணினி முழுவதற்குமான pulse audio equilizer நிறுவமுடியும்.

. இது gui மூலம் உபயோகிக்க கூடியது.
.15 bands equilizer
.1x to 4x வரை volume உயர்த்தகூடிய
.நம்முடைய விருப்பதிற்கேற்ப அமைத்துகொள்ளலாம். பின்னர் அதை சேமித்துக்கொள்ளலாம்.
.இது .deb installer (vlcன் equilizerஐ போன்றே உள்ளது). எனவே இதை உபயொகிக்க எளிது.


இதை நிறுவுவதற்கு pulse audio equilizer என்ற சுட்டியிலிருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.

Applications->Sound & video->PulseAudio Equilizer ஐ தேர்ந்தேடுக்கவேண்டும்.
இந்த நிரல் vlcயில் வேலை செய்யாது.vlcயில் உள்ளிருப்பாகவே equilizer இருக்கிறது.
சிறிய மற்றும் எளிய நிரல்.

Monday, December 14, 2009

உபுண்டுவில் வேகமான dns ஐ காண

உபுண்டுவில் வேகமான dnsஐ காண இந்தசுட்டியிலிருந்து namebench என்ற நிரலை தரவிறக்கி பயன்படுத்தலாம்.

இந்த நிரல் desktopல் தரவிறக்கி பின்னர் சுருக்கப்பட்ட அந்த கோப்பை விரிவாக்கம் செய்தபின் உபயோகிக்கலாம்.
arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ cd name*
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/namebench-1.0.5$ dir
ChangeLog.txt COPYING libnamebench namebench.py setup.py third_party
cocoa data namebench.cfg README.txt templates tools
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/namebench-1.0.5$ ./namebench.py






நிரலை ஆரம்பித்தவுடன்


பின்னர் நமக்கு தேவையான அதே நேரம் வேகமான இணையத்தில் உலாவ dns கிடைக்கும்.


வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் readme.txtல் காணலாம்.

Sunday, December 13, 2009

உபுண்டுவில் rootkit ஸ்கேன் செய்ய

உபுண்டுவில் ரூட்கிட், பேக்டோர் போன்றவற்றை மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துகொள்ள கீழ்கண்ட நிரலை நாம் நிறுவிக்கொள்ளவேண்டும்.

#sudo apt-get install rkhunter என்று தட்டச்சு செய்தால் நிரல்நிறுவப்பட்டுவிடும்.

இதனை update செய்ய

#sudo rkhunter --update என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இந்த நிரலை இயக்குவதற்கு முன்பாக properties கோப்பினை உருவாக்க

#sudo rkhunter --propupd --pkgmgr dpkg என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

பின்னர் நிரலை இயக்கிப்பார்த்தால்.

#sudo rkhunter --check --pkgmgr dpkg




இது அனைத்து போர்ட்களையும் சோதனை செய்கிறது.மேலே உள்ள படத்தில் உள்ள சில warning களை பற்றி கவலைப்படவேண்டாம். இதனை தவிர்க்க ஒரு யுஸ்பி யில் நிரலை நிறுவி இயக்கிப்பார்க்கலாம்.

உபுண்டுவில் மெம்படுத்தலுக்கு பிறகு பழைய kernelகளை நீக்க

உபுண்டுவில் மெம்படுத்தலுக்கு பிறகு புதிய கெர்னலுடன் பயைய கெர்னலும் செர்ந்து இருக்கும். அதன் headers, image என்று தேவையில்லாமல் கணினியிலேயே இருக்கும். இவற்றை நீக்குவதற்கு கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்தால் அவை யாவும் நீக்கப்பட்டுவிடும்.


#dpkg -l 'linux-*' | sed '/^ii/!d;/'"$(uname -r | sed "s/\(.*\)-\([^0-9]\+\)/\1/")"'/d;s/^[^ ]* [^ ]* \([^ ]*\).*/\1/;/[0-9]/!d' | xargs sudo apt-get -y purge

சற்று பெரியாதாக இருந்தாலும் நன்றாக வேலை செய்கிறது.

Saturday, December 12, 2009

உபுண்டு 9.10ல் grub2 மீண்டும் நிறுவுவதல்

உபுண்டு 9.10ல் grub2 தான் default ஆக இருக்கிறது. இது ஏதாவது காரணத்திற்காக அழிந்துவிட்டால் அல்லது விண்டொஸ் மீண்டும் நிறுவப்பட்டால் கீழ்கண்டவாறு நிறுவிக்கொள்ளலாம்.

முதலில் உபுண்டு live cdஐ டிரவில் இட்டு கணினியை துவங்கவேண்டும். பின்னர் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.


பின்னர் எந்த வன்தட்டில் லினக்ஸ் நிருவப்பட்டுயிருக்கிறதோ அதை தெர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில். இந்த partitionஐ mount செய்யவேண்டும்.இங்கு sd8 என்பது linux நிறுவப்பட்ட வன்தட்டு ஆகும்.

#sudo mkdir /media/sda8
#sudo mount /dev/sda8 /media/sda8 பின்னர் டெர்மினலில்

#sudo grub-install --root-directory=/media/sda8 /dev/sda என்று தட்டச்சு செய்யவேண்டும். இங்கு sda என்றுதான் குறிப்பிடவேண்டும். வேறு எந்த எண்ணையும் குறிப்பிட கூடாது.

பின்னர் கணினியை மீளதுவங்கி டெர்மினலில் (live cd இல்லாமல்)

#sudo update-grub என்று தட்டச்சு செய்தால் grub2 மீண்டும் நிறுவப்பட்டுவிடும்.

Thursday, December 10, 2009

உபுண்டு 9.10ல் new document

உபுன்டு desktopல் மவுஸ் வலது பக்கம் சொடுக்கினால் 'Create New document' என்று வரும் ஆனால் default ஆக No templates installed ஆகதான் வரும். ஆனால் அதில் template வரவழைப்பதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ரலாம்.


இப்போது Applications->Office->Open Office.org word processor என்று ஒரு வெற்று கோப்பை திறந்து வைத்து கொண்டும் அதில் File->Save as ல் கோப்பின் பெயராக New Open office word document என்று தட்டச்சு செய்து home அடைவினுள் இருக்கும் templates என்ற அடைவில் செமிக்க வேன்டும்.

மேற்கண்ட முறைப்படி calc, presentation என்று நமக்கு வேண்டியவற்றை மேலே குறிப்பிட்ட அடைவினுள் சேமிக்க நமக்கு desktop ல் இருந்தபடியே ஒரு வேற்று கோப்பினை உருவாக்கி நாம் நம்முடைய வேலையை தொடரலாம்.