Pages

Friday, January 1, 2010

உபுண்டுவில் C நிரலை நேரிடையாக இயக்க

உபுண்டுவில் C நிரலை நேரிடையாக இயக்க முடியும். இதற்கு டெர்மினலில்

#sudo apt-get install tcc என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில்

#sudo gedit example.c என்ற கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த கோப்பு desktopல் இருக்கட்டும். பின்னர் நமக்கு தேவையான அடைவினுள் சேர்த்து கொள்ளலாம்.

#!/usr/bin/tcc -run
#include

int main ()
{
printf ("Hello, world!\n");
return 0;
}

என்று சேர்த்து சேமித்து கொள்ளவேண்டும். பின்னர் நிரலை executable ஆக்க

#sudo chmod +x example.c என்று டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

பின்னர் டெர்மினலில்.

#./example.c என்று தட்டச்சு செய்தால் நிரல் இயங்க தொடங்கும்.








உபுண்டுவில் tarbal, bzip,rar,gunzip போன்றவற்றை பயப்படுத்துதல்

உபுண்டுவில் கோப்புகளையோ அல்லது ஒரு அடைவையோ எப்படி சுருக்குவதுப்பற்றி பார்க்கலாம்.

1.tarball

இதில் கோப்புகளை சுருக்க

#tar -cvf archieve.tar file1 ஒரு கோப்பை சுருக்க

#tar -cvf archieve.tar file1 file2 dir1 இதில் பலகோப்புகளையும் ஒரு அடைவையும் சுருக்க.

#tar -tf archieve.tar இதில் சுருக்கப்பட்ட கோப்பினுள் உள்ளவற்றை காண

#tar -xvf archieve.tar இது சுருக்கப்பட்ட கோப்பை விரிக்க

#tar -xvf archieve.tar -C /tmp சுருக்கப்பட்ட கோப்புகளை ஏதெனும் ஒரு குறிப்பிட்ட அடைவினுள் விரிக்க.

#tar -cvfj archieve.tar.bz2 dir1 bzip2வில் சுருக்க

#tar -xvfj archieve.tar.bz2 bzip2ல் சுருக்கப்பட்ட கோப்பினை விரிக்க

#tar -cvfz archieve.tar.gz gzipல் சுருக்க

#tar -xvfz archieve.tar.gz gzipல் சுருக்கப்பட்ட கோப்பினை விரிக்க.

2.bzip2

#bzip2 file1 இதில் சுருக்கப்பட்ட கோப்பு file1.bz2 என்று இருக்கும்.

#bunzip2 file1.bz2 இது சுருக்கப்பட்ட கோப்பினை விரிக்கும்.

3.rar

#rar a file1.rar file1 file2 dir1 இது கோப்புகளை சுருக்குவதற்கு

#rar x file1.rar அல்லது unrar x file1.rar இது கோப்புகளை விரிப்பற்கு

4.gzip

#gzip file1 ஒரு கோப்பினை சுருக்குவதற்கு

#gzip -9 file1 அதிக பட்சம் கோப்பினை சுருக்குவதற்கு
இதில் கோப்புகள் file1.gz என்ற வடிவில் இருக்கும்.

#gunzip file1.gz இது கோப்புகளை விரிவாக்க

5.zip

#zip file1.zip file1 ஒரு கோப்பினை சுருக்க

#zip file1.zip file1 file2 dir1 பல கோப்புகளை சுருக்க

#unzip file1.zip இது கோப்பினை விரிவாக்கம் செய்ய.

Thursday, December 31, 2009

உபுண்டுவில் command lineல் இருந்தபடியே twitterல் post செய்ய

உபுண்டுவிலிருந்தபடியே twitterல் post செய்ய கீழ்கண்டவழிமுறைகளில் செய்யலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

#sudo apt-get install curl பின்னர்

/bin அடைவினுள் twitter.sh என்ற கோப்பினை உருவாக்க வேண்டும்.

#sudo gedit /bin/twitter.sh

இதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துகொள்ளவேண்டும்.

#!/bin/bash
curl -u USER:PASSWORD -d status="$*" http://twitter.com/statuses/update.xml > /dev/null
echo "Message sent!"

இதில் user மற்றும் password என்ற இடத்தில் உபயோகிப்பாளரின் user name மற்றும் password கொடுக்கவேண்டும்.


பின்னர்

#sudo chmod 755 /bin/twitter.sh என்று கட்டளையிட்டு twitter.sh என்ற கோப்பினை executable கோப்பாக மாற்றவேண்டும்.

பின்னர் டெர்மினலில்

#twitter.sh hello இங்கு helloவிற்கு பதில் ஏதெனும் message டைப் செய்யலாம்.

இப்போது twitterல்

Tuesday, December 29, 2009

உபுண்டுவில் repositoryக்களை டெர்மினலில் நீக்க

உபுண்டுவில் repositoryக்களை டெர்மினலில் நீக்கும் வழிகளை பார்ப்போம்.

முதலில் இந்த கட்டளை செயல்பட .deb நிரல் ஒன்றை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில் பின்வரும் கட்டளையை இட்டால் repository நீக்கப்பட்டுவிடும்.

#sudo ppa-purge ppa: repository-name subdirectory





Friday, December 25, 2009

உபுண்டுவில் usb mount ஆகாமல் இருப்பதை சரி செய்ய

உபுண்டுவில் usb mount ஆகாமல் இருப்பதற்கு அல்லது usb detect செய்யாமல் போவதற்கான சில தீர்வுகள்.

நீங்கள் உபுண்டு 9.04 பயன்படுத்துபவராக இருந்தால். டெர்மினலில்

#sudo gedit /boot/grub/menu.lst என்று தட்டச்சு செய்தால் menu.lst கோப்பு திறக்கும். அதில்

#defoptions=quiet splash என்ற வரிகளை தேடி அந்த வரிகளுக்கு பதிலாக கீழ்கண்டவாறு அமைத்துகொள்ளவேண்டும்.

# defoptions=quiet splash acpi=force irqpoll

பின்னர் டெர்மினலில்

#sudo update-grub என்று தட்டச்சு செய்தால் grub menu.lst ல் நாம் சரிசெய்த வரிகள் சேர்ந்துவிடும்.

நீங்கள் உபுண்டு 9.10 பயன்படுத்துபவர்களாக இருந்தால் டெர்மினலில்

#sudo gedit /etc/default/grub என்று தட்டச்சு செய்தால் grub என்ற கோப்பு திறக்கும். அதில்

GRUB_CMDLINE_LINUX=”” என்ற வரியை கீழ்கண்டவாறு மாற்றிகோள்ளவேண்டும்.

GRUB_CMDLINE_LINUX="acpi=force irqpoll" என்றவாறு மாற்றி பின்னர் டெர்மினலில்

#sudo update-grub2 என்று கட்டளையிட்டால் grub update ஆகிவிடும்.


Monday, December 21, 2009

உபுண்டுவில் மால்வேர்

உபுண்டுவில் மால்வேர் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் gnome-look.org என்ற வலைதளத்திலிருந்து இறக்கப்பட்ட waterfall என்னும் screensaver கோப்பில் மறைந்துள்ளது. எனவே இந்த தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மேலும் பல கோப்பில் இந்த மால்வேர் இருப்பதாக தெரிகிறது.எனவே இந்த தளத்திலிருந்து கோப்பினை பதிவிறக்கி உபயோகப்படுத்தி இருந்தால்.கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்வும்.
#sudo rm -f /usr/bin/Auto.bash /usr/bin/run.bash /etc/profile.d/gnome.sh index.php run.bash && sudo dpkg -r app5552

மேலும் உதவி தேவைப்பட்டால் இந்த சுட்டியை பார்க்கவும்.

Friday, December 18, 2009

உபுண்டு 9.10 grub2வில் விண்டோ மற்றும் os களை சேர்த்தல்

உபுண்டு 9.10 grub2வில் விண்டோ மற்றும் வேறு சில osகளை நாம் manualஆக சேர்க்கலாம்.
இதற்கு நேரிடையாக /boot/grub.cfgல் சேர்க்க முடியாது. /etc/grub.d/ என்ற அடைவினுள் இருக்கும் 40_custom என்ற கோப்பில் தான் சேர்க்க முடியும். டெர்மினலில்

#sudo gedit /etc/grub.d/40_custom என்று தட்டச்சு செய்தால் கோப்பு திறக்கும்.

அதில் கீழ்கண்ட வரிகளை சேர்க்க வேண்டும்.

விண்டொஸை சேர்க்க
menuentry "Microsoft Windows XP Professional (on /dev/sda1)" {
insmod ntfs
set root=(hd0,1)
search --no-floppy --fs-uuid --set 3a387ed7387e921d
drivemap -s (hd0) ${root}
chainloader +1
}

வேறு ஏதேனும் osக்களையும் சேர்க்கலாம். நான் mandriva 2010 சேர்த்துள்ளேன்.

menuentry "Mandriva2010 (on /dev/sda3)" {
insmod ext2
set root=(hd0,3)
search --no-floppy --fs-uuid --set c9d1ca16-914d-458d-afbb-6835d04a7ea6
linux /boot/vmlinuz BOOT_IMAGE=linux-nonfb root=UUID=c9d1ca16-914d-458d-afbb-6835d04a7ea6 resume=UUID=3529d991-6e4e-4b3c-8f99-3a5f4dcecd64
initrd (hd0,3)/boot/initrd.img
}

இங்கு uuid=xxx என்பது அந்தெந்த கணினி வன்தட்டின் குறியீடு ஆகும். அதனால் இங்கு தரப்பட்டவை என்னுடைய கணினியுடைதாகும்.

விண்டொஸ் ஏற்கனேவெ நிறுவியிருந்தால் மீண்டும் சேர்க்க தேவையில்லை. தானாகவே சேர்ந்துகொள்ளும். வேறு லினக்ஸ் நிறுவியிருந்தால் நாம் சேர்த்துக்கொள்ளலாம். இங்கு hdo,3 என்பது லினக்ஸ் நிறுவிய வன்தட்டை குறிக்கும்.

முக்கியமாக /etc/grub.d/40_custom என்ற கோப்பினை மாற்றங்கள் செய்யுமுன் backup எடுத்துகொள்வது நல்லது.

/etc/grub.d/ என்ற அடைவினுள் பல கோப்புக்கள் இருக்கும்.

1.00_header
2.05_debian_theme இந்த கோப்பினுள் நம் விருப்பம் போல் text colour,theme அமைத்துக்கொள்ளலாம்.
3.10_linux இந்த கோப்பு linux kernalகளை கண்டறிய பயன்படுகிறது.
4.20_memtest86+ memory test செய்வதற்கு
5.30_os_prober லினக்ஸ் மற்றும் மற்ற osக்களை ஏணைய partitionகளி இருப்பதையும் menuவில் சேர்க்க
5.40_custom நமக்கு தேவையான osகளை சேர்க்க.

மேற்கண கோப்புகளில் 40_custom கோப்பில் தான் ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடியும்.
மாற்றங்கள் செய்தபின் கோப்பினை செமித்து வெளியேறவும். பின்னர் டெர்மினலில்

#sudo update-grub2 என்று தட்டச்சு செய்தால் /boot/grub.cfg கோப்பினுள் சேர்ந்துவிடும்.