Pages

Sunday, April 4, 2010

உபுண்டுவில் சில கட்டளைகளும் அதன் வெளிப்பாடுகளும்

உபுண்டுவில் சில கட்டளைகளையும் அதன் வெளிப்பாடுகளை பற்றி பார்ப்போம்.

1.os/system information

uname -a



2.ubuntu version

head -n l /etc/issue



3.hostname

hostname


4.list of pci devices

lspci -tv


5.list of usb devices

lsusb -tv



6.loaded kernel mode

lsmod


7.variables

env


8.memory usage

free -m

உபுண்டுவில் gnome colour chooser

உபுண்டுவில் gnome colour chooser என்பது உபுண்டு மேசையில் நம் விருப்பம் போல் foreground & background of panels,menu போன்றவற்றின் நிறங்களை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo apt-get install gnome-color-chooser என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இதை செயற்படுத்த

system->preference->gnome color chooser செல்ல வேண்டும்.



இந்த நிறம் அமைப்பதற்கு முன்னால் இருந்த மேசை


நிறம் அமைத்ததற்குபின்



இதன் அமைப்பு


இதில் மேலும் பல வண்ணங்கள் அளித்து மேசையை அழகுபடுத்தலாம்.

உபுண்டுவில் sound mute

உபுண்டுவில் சிலசமயங்களில் restart/reboot ஆனால் ஒலி சரிவர வேலை செய்யாமல் muteல் போய்விடும். அதை சரி செய்வதை பார்க்கலாம்.


ஒலியின் icon ஆனாது default ஆக top panel இருக்கும்.

1. முதலில் டெர்மினலில்

sudo alsactl store என்று தட்டச்சு செய்துவிடவும். இதை மீண்டும் செயல்படுத்துவதற்கு டெர்மினலில்

sudo gedit /etc/init.d/alsa-utils என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து அதில் exit 0 என்ற வரிக்கும் மேல் sudo alsactl restore என்று தட்டச்சு செய்து சேமித்து வெளியேறவேண்டும். பின்னர் டெர்மினலில்

sudo chmod +x /etc/rc.local என்று தட்டச்சு செய்துவிடவேண்டும்.

2.alsa mixer

டெர்மினலில்

sudo alsamixer என்று கட்டளையிட்டால் ஒலியின் அமைப்புகள் ஒரு விண்டோவில் வரும்.



இதில் m என்ற எழுத்தை அழுத்தினால் mute/unmute ஆகும். வலது/இடது -> கர்சரை அழுத்தினால் பக்கவாட்டில் நகர்ந்து அடுத்த அமைப்புக்கு செல்லும். இதில் 00 என்று இருந்தால் unmute அது இல்லாமல் MM என்று இருந்தால் mute ஆகி இருக்கிறது என்று கொள்ளலாம்.

இதில் master, headphone,pcm,fron,front mic போன்ற இன்னும் பல அமைப்புகளையும் அமைத்திடலாம்.

உபுண்டுவில் இயல்பாக இருக்கும் sound versionஐ வைத்துக்கொள்ளலாம். upgrade செய்தால் சரிவர வேலை செய்வது இல்லை.

Saturday, April 3, 2010

உபுண்டுவில் desktop gnome gdesklets

புண்டு desktop இல் பல்வேறு deskletsகளை அமைக்கலாம். gdesklets என்பது google gadgets போன்றது. நேரம்,அலாரம்,நினைவுட்டல், மற்றும் பல gadgets அமைக்கலாம். இதை கணினியில் நிறுவுவதற்கு synaptic package managerஇல் வழி இருக்கிறது.

synaptic package managerஐ திறந்து அதில் searchல் gdesklets என்று தட்டச்சு செய்து எண்டர் பொத்தானை அழுத்தினால் இரண்டு நிரல்கள் காணப்படும்.


நிரல்களை தேர்வு செய்து நிறுவிக்கொள்ளலாம்.பின்னர் applications->accessories->gdesklets தேர்ந்தெடுத்தால் இதன் icon top panelல் தோன்றும்.



இதில் பல்வேறு gadgets உள்ளது. நேரம், அலாரம்,நினைவுட்டல்,காலண்டர்,cpu memory, ram memory மற்றும் பலவகையான gadgets கள் உள்ளன. தேர்ந்தெடுத்தவுடன் அப்படியே இழுத்து மேசையின் மீது நாம் விரும்பும் இடத்தில் வைக்கலாம்.

மேசையின் மீது இருக்கும் gadget ன் மீது இடது சொடுக்க வரும் விண்டோவில் பல optionகள் இருக்கும்.அதில் நமக்கு தேவைப்பட்டால் நீக்கிவிடலாம் அல்லது விருப்பமான இடத்திற்கு மாற்றம் செய்யலாம். configure செய்யலாம் gadgetன் நிறத்தை மாற்றலாம்.


Friday, April 2, 2010

உபுண்டுவில் windows xp யின் கடவுச்சொல்லை மாற்ற

புண்டுவில் windows xp யின் கடவுச்சொல் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம்.இந்த கடவுச்சொல் மாற்ற பயன்படும் விண்டோவின் அடைவு

c:\WINDOWS\system32\config என்ற அடைவினுள் இருக்கும் SAM என்ற கோப்பில்தான் நாம் செயல்படுத்தப்போகிறோம்.

உபுண்டு நிறுவி இருந்தாலோ அல்லது livecd ஆக உபயொக்கிலாம். முதலில்

டெர்மினலில் கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get install chntpw என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.


முதலில் விண்டோஸ் நிறுவியிள்ள partionஐ mount செய்துக்கொள்ளவேண்டும். இதற்கு place சென்று குறிப்பிட்ட partionஐ கிளிக் செய்து கடவுசொல் கொடுத்து mount செய்ய வேண்டும்.

பின்னர் டெர்மினலில்

cd /media/system/WINDOWS/system32/config என்று தட்டச்சு செய்துகொள்ள வேண்டும்.
இப்போது டெர்மினலில் மேலே கண்ட படத்தில் வருவது போல் இருக்கும்.

இதில் system என்பது விண்டோஸ் partionக்கும் நாமே பெயர் கொடுத்துக்கொள்ளலாம். உபுண்டுவில் சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் வேறுபாடு உண்டும். அதனால் கட்டளை கொடுக்கும் முன் nautilus சென்று அதன் பெயர்களை குறித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது டெர்மினலில்

chntpw SAM என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.




இதன் கடைசியில் பல்வேறு optionகள் இருக்கும் அதை பயன்படுத்தி விண்டோஸின் கடவுச்சொல்லை மாற்றலாம்.


இது ஒட்டுமொத்தமாக கடவுச்சொல்லை மாற்றிவிடும். ஒரு குறிப்பிட்ட பயனளாருக்கான கடவுச்சொல்லை மாற்ற டெர்மினலில்

chntpw -u username SAM என்று தட்டச்சு செய்யவேண்டும். இங்கு username அவரவர் பெயரினை குறிக்கும்.

இது சொந்த உபயோகத்திற்கு மட்டும் அடுத்தவர் கணினியின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு அல்ல. எனவே கணினியின் bios கடவுச்சொல் அவசியமாகிறது.

உபுண்டுவில் ogg converter

உபுண்டுவில் ogg converter என்பது இசை கோப்புகளை ogg வடிவில் மாற்றப்பயன்படும் ஒரு எளிய நிரல் ஆகும். mp3 வடிவ இசை கோப்புகள் காப்புரிமை பெற்றவை. ஆனால் ogg வடிவ கோப்புகள் open source வகையை சேர்ந்தவை. இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனவே நம் கணியில் mp3 வடிவ கோப்புகளை ogg வடிவில் மாற்றி பயப்படுத்தலாம்.

இந்த நிரல் ubuntu software centerல் உள்ளது.


இந்த நிரலை நிறுவியவுடன் applications->sound & video->ogg convert செல்ல வேண்டும்.





source ன் கீழ் எந்த கோப்புனை வடிவம் மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கலாம்.


destination கீழ் file nameல் நமக்கு விருப்பமான பெயரை கொடுத்துக்கொள்ளலாம். பின்னர் convert பொத்தானை அழுத்த கோப்பு மாறிவிடும்.


இந்த ogg வடிவ கோப்புனை உபுண்டுவில் உள்ள totem,rythambox,vlc என அனைத்திலும் இயக்கி இசையை கேட்கலாம்.

Thursday, April 1, 2010

உபுண்டு rythambox playerல் add to play queue

உபுண்டு rythamboxல் இசை கோப்புகளை இயக்க music->import file (or) import folder என்று சேர்ப்போம். அப்படியில்லாமல் இசை கோப்புகளை தேர்ந்தெடுத்து nautilus script மூலம் சேர்த்துக்கொள்ளலாம்.

முதலில் டெர்மினலில்

sudo apt-get install python-nautilus
wget http://seemanta.net/code/Nautilus_plugin/add-to-rhythmbox.py
mkdir ~/.nautilus/python-extensions
mv add-to-rhythmbox.py ~/.nautilus/python-extensions/

என்ற கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக தட்டச்சு செய்து கொள்ளவேண்டும். பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.

இப்போது applications->Sound & video->rythambox music player தேர்ந்தெடுத்து playerஐ துவக்கி கொள்ளவேண்டும்.


பின்னர் இசை கோப்புகள் இருக்கும் அடைவை திறந்து அதில் இசை கோப்புகளை தேர்ந்தெடுத்துகொள்ளவேண்டும்.




கோப்புகளை தேர்ந்தெடுத்த பின்னர் இடது சொடுக்கினால் வரும் optionனில் add to rythambox play queue சொடுக்கினால் கோப்புகள் rythamboxல் சேர்ந்துவிடும்.





இதில் mp3 கோப்புகளையும் சேர்க்கலாம். அதன் extension '.mp3' என்று இருக்க வேண்டும். '.MP3 என்றோ அல்லது .Mp3 என்றோ இருக்க கூடாது.