Pages

Thursday, January 8, 2009

உபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற

உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி?

தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்சு செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் இப்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. SCIM உள்ளீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு இப்பக்கமானது எழுதப் பட்டுள்ளது.

language-pack-ta & language-pack-ta-base ஆகிய பொதிகள் தமிழ் மொழிக்குத் தேவையான அடிப்படைப் பொதிகள். இவற்றை நிறுவிக் கொள்ளவும். முனையத்திலிருந்து,

$ sudo apt-get install language-pack-ta language-pack-ta-base

என்று ஆணையிட்டால் இவ்விரு பொதிகளும் நிறுவப்பட்டுவிடும். இம்முறையில் பொதிகளை நிறுவ இணைய இணைப்பு (Internet Connectivity) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக உபுண்டு இயங்குதளத்தை நிறுவும் போதே SCIM உள்ளீட்டு முறை செயலியானதும் இயல்பாகவே நிறுவப் பட்டு இருக்கும். இதனை சரிபார்க்க முனையத்தில் (Terminal),

$ whereis scim

என்ற கட்டளையைக் கொடுக்கவும். அது SCIM நிறுவப்பட்டிருக்கும் அடைவின் (folder) பாதைகளைக் காட்டும்.SCIM நிறுவப்பட்டதை உறுதிசெய்துக் கொண்ட பின்னர் தமிழ் மொழிுக்கான SCIM பொதியினை நிறுவ வேண்டும்.

தமிழ் மொழிக்கான SCIM பொதியினை நிறுவ

இதனை தாங்கள் பல விதங்களில் மேற்கொள்ளலாம், இங்கே Synaptic Package Manager மூலமாக கையாளப்படும் வழி முறையை மட்டும் பார்க்கலாம். இம்முறையில் பொதிகளை நிறுவ இணைய இணைப்பு (Internet Connectivity) பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழிக்கான உள்ளீட்டு வசதிகளை SCIM-ல் பெற்றுக் கொள்ள இரண்டு அடிப்படை பொதிகளை நிறுவ வேண்டும்.

1) scim-tables-additional 2) scim-modules-table

இவற்றை நிறுவினால் தமிழோடு ஏனைய பாரதீய மொழிகளுக்கான உள்ளீட்டு வசதிகளும் கிடைக்கப் பெறும்.

SCIMன் அடிப்படை செயலி நிறுவப் பட்டதை உறுதி செய்துக் கொண்ட பின்னர்,

System ---> Administration ---> Synaptic Package Manager ஐத் தேர்வு செய்யவும்.

நுழைவுச் சொல் (Password) கொடுக்க வேண்டியிருக்கும். இதுவும் தங்களின் பயனர் சொல்லிற்கான(User Name) நுழைவுச் சொல்லும் ஒன்றே.

"Search" படவுருவை (icon) சொடுக்கவும்(Click). Search எனும் பட்டியுடன் சிறு சாளரமொன்று முன் தோன்றும். அப்பட்டியில் "scim" என பதிவுச் செய்து "Ok"வை தேர்வு செய்யவும்.

அனைத்து விதமான SCIM பொதிகளும் திரட்டப்பட்டு வரிசையாக பட்டியலிடப்படும். அவற்றிலிருந்து நமக்குத் தேவையான scim-tables-additional மற்றும் scim-modules-table பொதிகளை மட்டும் தேர்வு செய்யவும்.

இங்ஙனம் தேர்வு செய்த பின்னர் "Apply" என தெரியும் படவுருவை சொடுக்கவும். scim-tables-additional மற்றும் scim-modules-table ஆகிய இரண்டு பொதிகளும் நிறுவப் பட்டுவிடும்.

SCIM தானாகத் துவக்கப்பட

ஒவ்வொருமுறை தாங்கள் இயங்குதளத்தை துவக்கும் போதும் தானாகவே SCIM துவங்கப் பட்டிருப்பது நல்லது. இதற்கு /etc/X11/XSession.d எனும் அடைவினுள் 75custom-scim_init எனும் கோப்பினை உருவாக்க வேண்டும்.

அதற்கு முனையத்தில்,

$ cd /etc/X11/Xsession.d

$ sudo gedit 75custom-scim_init

இக் கோப்பினுள் கீழ்காணும் மூன்று வரிகளை பதிவு செய்து சேமிக்கவும்.

export XMODIFIERS="@im=SCIM"

export GTK_IM_MODULE="scim"

export XIM_PROGRAM="scim -d"

SCIM முறையில் தமிழில் உள்ளீடு செய்யும் திறன் தங்களின் கணினிக்கு கிடைத்துவிட்டது. தற்போதைய அமர்விலிருந்து வெளியேறி மீண்டும் ஒரு புதிய அமர்வினை துவக்கவும்.

SCIM ன் இயக்கத்தைப் பரிசோதிக்க

SCIM துவக்கப் பட்டதற்கான அடையாளமாக அதன் படவுரு பலகையின்(Panel) வலது புறத்தில் தெரியும். தமிழ் உள்ளீடு செவ்வனே இயங்குவதை பரிசோதிக்க,

Applications ---> Accesories ---> Text Editor ஐ துவக்கவும்.

பலகையின் வலது புறத்திலுள்ள SCIM படவுருவை சொடுக்கினால் மொழிகளின் பட்டியல் காட்டப்படும். அதிலிருந்து தமிழில் தாங்கள் விரும்பும் உள்ளீட்டு முறையினை தேரிவு செய்துக் கொள்ளவும். இயல்பாக ஓசையொத்த (Phonetic) உள்ளீட்டு முறையும் Inscript உள்ளீட்டு முறையும் கிடைக்கும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற Ctrl + Space விசைகளை அழுத்தவும். மீண்டும் தமிழுக்குத் தாவ அதே Ctrl + Space விசைகளை அழுத்தவும். இங்ஙனம் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

GNOME செயலிகள் அனைத்திலும் இதே முறையினைப் பயன்படுத்தி தங்களால் தமிழில் உள்ளீடு செய்ய இயலவேண்டும்.


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.

நன்றி உபுண்டு தமிழ் குழுமம்