Pages

Wednesday, June 29, 2011

உபுண்டுவில் நெருப்பு நரி 5 மற்றும் தண்டர்பேர்ட் 5

உபுண்டுவில் அண்மையில் வெளிவந்த நெருப்பு நரி5 நிறுவுவதைப்பற்றிப்பார்க்கலாம். கடந்த 21.06.2011 அன்று வெளியிடப்பட்டது. இது PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable
sudo apt-get update
sudo apt-get upgrade


தண்டர்பேர்டு 5 நிறுவுவதைப்பற்றிப்பார்க்கலாம். இதனையும் PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:mozillateam/thunderbird-stable
sudo apt-get update
sudo apt-get upgrade


Sunday, June 12, 2011

உபுண்டுவில் மடிக்கணினியின் battery lifeனை அதிகப்படுத்துதல்

உபுண்டு மடிக்கணினியில் battery lifeனை அதிகப்படுத்த கணினியை laptop modeல் வைக்கவேண்டும்.

இதன் அமைப்பு கீழ்கண்ட கோப்பில் இருக்கிறது.

/proc/sys/vm/laptop_mode இந்த கோப்பில் 0 பூஜ்யம் என்று மட்டும் இருக்கும். இதனை 5 என்று மாற்ற வேண்டும். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வாறு தட்டச்சு செய்தால்


cat /proc/sys/vm/laptop_mode

மதிப்பு 0 என்று திரையில் வரும்.


இதனை 5 என்று மாற்ற டெர்மினலில் கீழ்கண்ட வாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo bash -c "echo 5 > /proc/sys/vm/laptop_mode"

இப்போது 0 என்று இருந்தது 5 என்று மாறி இருக்கும். gedit கொண்டு கோப்பினை திறந்தால் கோப்பில் ஏதுவும் சேமிக்க முடியாது.

Thursday, June 9, 2011

உபுண்டுவில் shutdown செய்யும்போது trash அடைவில் உள்ள கோப்புகளை அழித்தல்

உபுண்டுவில் நாம் கணினியை மூடும்போது trashல் உள்ள கோப்புகள் அப்படியே இருக்கும். trashனை திறந்து பின்னர் Empty trashனை அழுத்தினால் தான் நீங்கும். அப்படியில்லாமல் கணினியை மூடும்போதே trashல் உள்ள கோப்புகளை அழிக்க முடியும். முக்கியமான கோப்புகளை கவனக்குறைவாக அழிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். அழிக்கப்பட்ட கோப்புகள் கணினியில் home அடைவினுள் .local/share/Trash என்ற அடைவினுள் இருக்கும். இது ஒரு மறைக்கப்பட்ட அடைவாகும்.


முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட வேண்டும்.

#!/bin/sh
rm -rf /home/username/.local/share/Trash/*

இதனை நம் விருப்பம் போல் ஒரு பெயர் கொடுத்து சேமித்துகொள்ள வேண்டும். நான் இதற்கு refi.sh என்ற பெயர் கொடுத்துள்ளேன். இந்த கோப்பினை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo chmod +x refi.sh

பின்னர் கீழ்கண்ட கட்டளைகளை கொடுத்து இதனை கணினியை மூடும்போது செயல்படுமாறு செய்ய வேண்டும்.

sudo cp refi.sh /etc/init.d
sudo ln -s /etc/init.d/refi.sh /etc/rc0.d/K10refi.sh
sudo ln -s /etc/init.d/refi.sh /etc/rc6.d/K10refi.sh

இப்போது கணினியை shutdown செய்துவிட்டு மீண்டும் இயக்க trashல் உள்ள கோப்புகள் அழிந்துவிட்டு இருப்பதை பார்க்கலாம்.

நெருப்பு நரியின் cache கோப்புகளை கூட அழிக்க முடியும்.இதற்கு refi.sh கோப்பில்

rm -rf /home/username/.mozilla/firefox/xxxxxxx.default/Cache/*

என்ற வரியை சேர்த்துவிட வேண்டும். இதில் xxxxxxxxx.default என்பது நம்முடைய கணினியில் நெருப்பு நரியின் பல்வேறு அமைப்புகள் இருக்கும் அடைவாகும். இதனை profile.ini கோப்பிலும் குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம்.

Wednesday, June 8, 2011

உபுண்டுவில் thunderbird 5.0b1



உபுண்டுவில் mozilla வெளியிட்டு இருக்கும் thunderbird 5 beta 1 நிறுவுவதைப் பற்றிப்பார்க்கலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது beta version தான் இதனையே வைத்துக்கொள்ள விரும்பினால் PPAக்களை நம்முடைய software centreல் சேர்த்துக்கொள்ளலாம்.

sudo add-apt-repository ppa:mozillateam/thunderbird-next
sudo apt-get update && sudo apt-get install thunderbird



மேலும் இதனைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை சொடுக்கவும்.

Thunderbird 5 ஆனது வரப்போகும் உபுண்டு 11.10ன் defaultஆன email client ஆகும்.

Friday, June 3, 2011

உபுண்டுவில் boot னை சரி செய்ய ஒரு எளிய நிரல்


உபுண்டுவில் bootனை சரிசெய்ய ஒரு எளிய நிரல். உபுண்டு நிறுவியபிறகு ஏதெனும் ஒரு ஒஸ் இயங்காமல் போனலோ, boot loaderனை திரும்ப நிறுவ வேண்டியிருந்தாலோ மற்றும் original boot sector னை மீண்டும் கொண்டு வரலாம் இதற்கு clean-ubiquity நிரல் மூலம் boot sectorஐ ஒரு backup எடுத்து வைத்து கொண்டால் மட்டுமே முடியும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install boot-repair-ubuntu

நிரல் நிறுவப்பட்டபின் system->administration->boot repair செல்ல வேண்டும்.