Pages

Friday, October 30, 2009

உபுண்டு 9.10 நிறுவுதல்

உபுண்டு 9.10 நிறுவுதலைப்பற்றி பார்க்கும் போது ஏற்கனவே 9.04 போன்றே உள்ளது. ஆனால் install ஆகும் போது வித்தியாசமாக உள்ளது. அதை கீழ்கண்ட படங்களைப்பார்த்து தெர்ந்துகொள்ளலாம்.




அனைத்து நிரல்களும் புதிய பதிப்புகளாகவே வந்துள்ளது. vlc,totem,gnome,gimp,office thunderbird,firefox போன்றவைகளும் புதிய பதிப்புகளாக உள்ளது.புதியதாக software center,ubuntu one போன்றவைகளும் உள்ளது.

Wednesday, October 28, 2009

உபுண்டு 9.10

நாளை (29.10.2009) அன்று வெளிவரும் உபுண்டு 9.10 சில படங்கள்

Email and chat

Chat->empathy இதில் yahoo,msn,gmail,etc போன்வற்றை உபயோகிக்கலம்.
Email-> evaluation


Internet browsing->firefox 3.5
இங்கு firefox 3.5 வேகமானது பாதுகாப்பனது.


Photo-F-spot


Music & videos

Office applications


Play games


Store,sync,share



Software centre


Accessibility

Monday, October 26, 2009

உபுண்டுவில் system speed up செய்வது எப்படி.

உபுண்டுவில் system speed up செய்ய preload என்னும் நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.



Applications->Accessories->Terminal சென்று

#sudo apt-get install preload என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதனுடைய conf கோப்பு /etc/preload.conf ஆகும். இதில் நாம் தேவையான மாற்றங்களை

#sudo gedit /etc/preload.conf என்று தட்டச்சு செய்து செய்யலாம்.

மாற்றங்களை செய்தபின் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்து preload மீண்டும் துவக்க வேண்டும்.

#sudo /etc/preload.conf restart
இந்த நிரல் பின்புலத்தில் இயங்க கூடியது.

Sunday, October 25, 2009

உபுன்டுவில் pdf கோப்புகளை பிரிக்க அல்லது ஒன்றாக இணைப்பதற்கு

உபுண்டுவில் pdf கோப்புகளில் உள்ள பக்கங்களை தனிதனியான கோப்புகளாக பிரிப்பதற்க்கும் அல்லது பல தனித்தனி கோப்புகளை ஒன்றாக இணைப்பதற்காகவும் இந்த நிரல் பயன்படுகிறது.

Applications->Add/removeல் சென்று அதன் செர்ச் பாக்ஸில் pdfsam என்று தட்டச்சு செய்து இந்த நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

Applications->Office->pdfsam என்று தொடங்கினால்
1.plugin->split
மேலேகண்ட விண்டோ விரியும் இதில் பல்வெறு நிலைகள் உள்ளன.

இதில் pdf கோப்பை Add கீ மூலம் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் இந்த pdf கோப்பில் உள்ள பக்கங்களை எவ்வாறு பிரிப்பது என்பதை தேர்வு செய்யவேண்டும்.இங்கு பக்கங்களை பிரிக்கும் போது 1,3,5... ஆகவோ அல்லது 2,4,6.. ஆகவோ பிரிக்கமுடியும் அல்லது size படியு பிரிக்க முடியும். பின்னர் எந்த folderல் சேமிக்க வேண்டுமோ அதை தெர்வு செய்ய வேண்டும். run என்பதை அழுத்தினால் கோப்பு பல பக்கங்களாக பிரியும்.

2.plugin->merge/Extract

மேலே கண்ட விண்டோவில் Add பட்டனை அழுத்தி எந்தெந்த pdf கோப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் எந்த folderல் சேமிக்க வேண்டுமோ அதை தெர்வு செய்து run கட்டளையிட்டால் தனித்தனியாக இருக்கும் pdf கோப்புகள் ஒன்றாக இணைந்துவிடும்.

Saturday, October 24, 2009

உபுண்டுவில் periodic check மாற்றுவது எப்படி? (fsck)

உபுண்டுவில் power on ஆகும்போதோ அல்லது restart ஆகும்போதோ periodic disk check தானாகவே ஒடும். அதை நிறுத்த esc கீயை அழுத்தினால் நின்றுவிடும். ஆனால் நிறுத்துவது நல்லது அல்ல. ஏனெனில் இது உபுண்டுவில் உள்ள பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

இதை 60 தடவை power on அல்லது restart ஆகும் போது என்று மாற்றிவைக்கலாம்.

#sudo tune2fs -c 60 /dev/hd2 என்று கட்டளையிட்டால் 60 முறை கணினி பவர் ஆன் அல்லது ரிஸ்டர்ட் ஆகும்போதோ periodic checkவரும். இங்கு hd2 என்பது கணினியில் உபுண்டுவு நிறுவப்பட்டுள்ள வன்தட்டு ஆகும்.

இதையே 10 நாள்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு மாதத்திறுகு ஒருமுறையோ என்று கூட மாற்றி அமைக்கலாம்.

#sudo tun2fs -c 10d /dev/hd2 என்று கட்டளையிட வேண்டும். இங்கு d என்பது நாட்களை குறிக்கும்.

இதையே சற்று graphical ஆகவும் செய்யலாம்.இதற்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து autofsck_3.2.1_all.deb என்ற நிரலை தரவிறக்கி நிறுவிக் கொள்ளவேண்டும்.

நிறுவியபின்

System->Administration->Periodic Disk checking தேர்வு செய்தால் கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதில் பல option கொடுக்கப்பட்டுள்ளது.
1.Disable/enable audible prompt இது beep சப்த்தை கட்டுபடுதுகிறது.

2.Check frequency of checks இது எத்தனை முறை check செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.


இங்கு ok அழுத்தினால்

மேலே கண்ட படத்தில் உள்ள 35 என்ற எண்ணை நாம் மாற்றிக்கொள்ளலாம்.



3.Check on shutdown or reboot இது shutdown செய்யும்போதோ அல்லது restart ஆகும்போதோ கணினி check செய்ய முடியும்.


4.Arranges checks now இந்த option வன்தட்டுக்களை ஒழுங்குபடுத்தி check செய்ய உதவுகிறது.
5.More information/Help மேலும் உதவிகள் தேவைப்பட்டால் இந்த option உதவும்.

Thursday, October 22, 2009

உபுண்டுவில் send to option கொண்டு வருதல்

விண்டோஸில் கோப்பின் மீது ரைல் கிளிக் செய்தால் send to என்ற ஒரு option வரும். அதே போல் ஒரு optionஐ உபுண்டுவிலும் கொண்டு வரலாம். கீழ்கண்ட நிரலை காப்பி செய்து sendto என்ற ஒரு கோப்பில் சேமித்து கொள்ளவும்.
பின்னர் home folderல் உள்ள /.gnome2/nautlius-scripts/ என்ற folderல் இடவும். பின்னர் டெர்மினலில்
#cd ~/.gnome2/nautlus-scripts/
#sudo chmod 777 sendto
என்று கட்டளையிட்டால் script தயாராகிவிடும். பின்னர் desktop ல் ஏதோ ஒரு கோப்பின் மீது கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் sendto option வரும்.


மேலே உள்ள படத்தில் send asல் உள்ள ஒரு option தான். எந்தெந்த ட்ரைவ் mount ஆகி உள்ளதோ அந்த ட்ரைவ்களில் தான் கோப்பினை சேமிக்க முடியும்.

கீழே உள்ள compression optionல் கோப்பினை zip, tar.gz,tar,bz2 ஆகவோ சுருக்க முடியும்.

மேலே கண்ட optionல் கோப்புகளை cd/dvdயில் சேமிக்க முடியும்.

மேலே உள்ள optionல் நாம் விரும்பும் folderஐ சுருக்கி நாம் தேர்வு செய்துள்ள email client (thu nderbird or evolution)வழியாக email அனுப்பலாம்.தனியான ஒரு கோப்பினை அனுப்ப இயலாது.

நிரல்
http://www.gnome-look.org/content/show.php/send-to-media?content=107342
என்ற சுட்டியில் உள்ளது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.

#! /bin/bash
#
# Copyright 2009 hemanth
#
# This program is free software; you can redistribute it and/or modify
# it under the terms of the GNU General Public License as published by
# the Free Software Foundation; either version 2 of the License, or
# (at your option) any later version.
#
# This program is distributed in the hope that it will be useful,
# but WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of
# MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE. See the
# GNU General Public License for more details.
#
# You should have received a copy of the GNU General Public License
# along with this program; if not, write to the Free Software
# Foundation, Inc., 51 Franklin Street, Fifth Floor, Boston,
# MA 02110-1301, USA.



sel=( /media/* );
drive=$( zenity --title="Send files" --list --checklist --column="#" --column="Drivers" $(for i in ${!sel[@]}; do echo "$i"; echo "${sel[$i]}"; done) )


if [ "$drive" = "" ]; then
exit;
fi

res=( $(echo "$drive|" | sed '/|/s// /gp;d') )

for i in ${!res[@]}; do
cp -r $NAUTILUS_SCRIPT_SELECTED_FILE_PATHS "${res[$i]}" | zenity --progress --auto-close ;
done

if [ $? -eq 0 ]; then
zenity --info --text="Info : $NAUTILUS_SCRIPT_SELECTED_FILE_PATHS is sent to $drive"
else
zenity --info --text="Error : $NAUTILUS_SCRIPT_SELECTED_FILE_PATHS is not sent to $drive"
fi

Monday, October 19, 2009

உபுண்டுவில் கோப்புகளை/folder/partitionகளில் உள்ள dataகளை அழிக்க உதவுவது shred

உபுண்டுவில் கோப்புகல்,போல்டர்கள்,பார்டீசியன்களில் உள்ளவற்றை அழிக்க. உதவும் ஒரு டூல் முதலில்

#sudo aptitude install nautilus-actions என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதன் வழிமுறை (syntax)

shred [option(s)] file(s)_or_devices(s)

இதனுடைய options
-f, –force – change permissions to allow writing if necessary
-n, –iterations=N – Overwrite N times instead of the default (25)
-s, –size=N – shred this many bytes (suffixes like K, M, G accepted)
-u, –remove – truncate and remove file after overwriting
-v, –verbose – show progress
-x, –exact – do not round file sizes up to the next full block
-z, –zero – add a final overwrite with zeros to hide shredding
-shred standard output
–help – display this help and exit
–version – output version information and exit

இதனை பயன்படுத்த
1.கோப்புகளை அழிக்க
# shred file, file1, file2
2.குறிப்பிட்ட partition ல் உள்ள dataக்களை அழிக்க
#shred /dev/hd5
3. floppyயில் உள்ளவற்றை அழிக்க
#shred --verbose /dev/fdo
கீழ்கண்ட படங்களைப்பார்த்து command களை அமைக்கவேண்டும்.
System->Preferences->Nautilus Action configuration செலக்ட் செய்தவுடன் கீழ்கண்ட விண்டோ விரியும்.
இதில் Add பொத்தனை அழுத்தினால்
விரியும் விண்டோவில் மேற்கண்ட படத்திலுள்ளது போல் நிரப்பவேண்டும்.பின்னர் profile1 அல்லது main என்று வரும் இடத்தில் செலக்ட் செய்து edit பொத்தனை அழுத்தினால்


படத்திலுள்ளது போல் நிரப்பவேண்டும்.இந்த நிரலை செயற்படுத்த எந்த கோப்பை அழிக்க வேண்டுமோ அதன் மேல் cursorஐ வைத்து இடது கிளிக் செய்தால் வரும் விண்டோவில் shred செலக்ட் செய்தால் கோப்போ அல்லது folder அழிந்துவிடும். இப்படி அழிந்த கோப்புகள் திரும்ப கிடைக்காது.


Sunday, October 18, 2009

உபுண்டுவில் text to speech

உபுண்டுவில் text to speech நிறுவ முதலில் espeak நிறுவி கொள்ளவேண்டும்.
System->Administration->Synaptic Package Manager சென்று அதன் search boxல் espeak என்று தட்டச்சு செய்து நிரலை தெர்வு செய்து பின் Apply பொத்தனை அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

பின்னர் டெர்மினலில்
#espeak "this is test" என்று தட்டச்சு செய்தால் நமக்கு தெளிவாக கேட்கும்.
#espeak என்று தட்டச்சு செய்தால் நாம் என்ன தட்டச்சு செய்கின்றோமோ அது கேட்க ஆரம்பிக்கும். மறக்கமால் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்து முடித்தவுடன் என்டர் கீ அழுத்தவேண்டும்.
#espeak --voices என்று தட்டச்சு செய்தால் எந்தெந்த மொழிகளில் நாம் கேட்கலாம் என்பது தெரியும்.
இதில் தமிழிலும் பேசும். அதற்க்காக
#espeak -vta "தமிழ் வாழ்க" என்று தட்டச்சு செய்தால் englishகாரன் குரல் கேட்கும்.
பல்வேறு குரல்களை கேட்க /etc/speech-dispatcher/speech.conf என்ற கோப்பில்
# currently supported: MALE1, MALE2, MALE3, FEMALE1, FEMALE2, FEMALE3,
# CHILD_MALE, CHILD_FEMALE

DefaultVoiceType "MALE1" என்ற இடத்தில் நமக்கு வேண்டிய குரலை தேர்வு செய்துகொள்ளலாம்.
பின்னர் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இருக்கும் எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு அவற்றை wav கோப்புக்களாக மாற்றிகோள்ளலாம்.
#espeak -f xxx.txt -w xxx.wav -vta என்று தட்டச்சு செய்தால் கோப்பு மாறி விடும்.mp3 கோப்புகளாக கூட மாற்றிகோள்ளலாம்
#espeak -v xxx.txt --stdout | lame - xxx.mp3 -vta ஆங்கிலத்தில் மட்டும் இது வேலை செய்கிறது.

தேதி நேரம் தெரிந்து கொள்ள டெர்மினலில்
#date "+The time sponsered by ram is %H hours %M minutes and %S seconds" | espeak என்று தட்டச்சு செய்தால் குரல் கேட்கும்.
pdf கோப்புகளை கூட கேட்க முடியும். அதற்கு pdf கோப்புகளை text கோப்புகளாக மாற்றிகோள்ள வேண்டும்.
#pdftotext xxx.pdf xxx.txt என்று தட்டச்சு செய்தால் கோப்பு மாறிவிடும். பின்னர் wav ஆகவோ அல்லது mp3 கோப்புகளாகவோ மாற்றி கோள்ளலாம்.

Saturday, October 17, 2009

உபுண்டு 9.10


வரும் அக்டோபர் 29ம் தேதி வெளிவரும் உபுண்டு 9.10 க்கான free CDக்கு இப்போதே ஆர்டர் செய்யலாம். அதற்கான இணையதள முகவரி.

http://shipit.ubuntu.com

உபுண்டுவில் bsnl, tatadocomo சிம் கார்டை பயன்படுத்துதல்

உபுண்டுவில் bsnl, tatadocomo சிம் கார்டை பயன்படுத்தி நெட்டில் இணையதளங்களை பார்வையிடுதல் பற்றி பார்ப்போம். முதலில் இரண்டு சிம் கார்டுகளையும் gprs activate செய்யவேண்டும். பின்னர் கணினியுடன் இணைக்கவும். இணைத்தவுடன் தோன்றும் விண்டோவை தவிர்த்துவிடவேண்டும். பின்னர் top panelல் உள்ள networkmanager ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் mobile broadband என்பதனை தேர்வு செய்யவேண்டும்.
பின்னர் add பொத்தனை அழுத்தினால் கீழ்வரும் விண்டோ வரும்.



இதில் கீழ்கண்ட விவரங்களை தட்டச்சு செய்து பின்னர் available to all users தேர்வு செய்யவேண்டும்.
bsnlலுக்கானது
1.connection name -> bsnl
2.number =>*99#
3.user name-> செல்போன் நம்பர்
4.password->செல்போன் நம்பர்
5. APN -> portalsouth.cellone.in
வேறு எதையும் நிரப்ப வேண்டாம்.

tatadocomoக்கானது

1.connection name -> tatadocomo
2.number =>*99#
3.user name-> தேவையில்லை
4.password->தேவையில்லை
5. APN -> TATA.DOCOMO.DIVE.IN
வேறு எதையும் நிரப்ப வேண்டாம்.

பின்னர் firefox உலாவியில் செய்ய வேண்டிய settings

firefox உலாவியில்
Edit->Preferences->Advanced->Networks->Settings தேர்வு செய்து பின் வரும் settings செய்யவேண்டும்.
For Bsnl
Manual proxy settings தேர்வு செய்து பின்னர்
HTTP proxy serverஇல் 10.31.54.2 portல் 9401 என தட்டச்சு செய்யவேண்டும்.

for Tatadocomo
Manual proxy settings
HTTP proxy server->10.124.94.7 port->8080 என தட்டச்சு செய்து ok கொடுத்து வெளியேற வேண்டும்.பின்னர் உலாவியில் இணைய பக்கங்களை பார்வையிடலாம்.

Friday, October 16, 2009

உபுண்டுவில் நம்முடைய கணினியைப் பற்றி தெர்ந்துகொள்ள

உபுண்டுவில் நம்முடைய கணினியைப்பற்றி தெரிந்துக்கொள்ள cpu-G என்ற நிரலை http://www.gtk-apps.org/content/show.php/CPU-G?content=113796&PHPSESSID=d5059fc0f6c754ba6ae0865da95e0cf5 யிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.processor,ram,motherboard,osன் பதிப்பு ஆகியவகளையும் தெரிந்துகொள்ளலாம்.
Applications->System Tools->CPU-G