Thursday, January 26, 2012

உபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற்றும் சிடியில் எழுதுதலும்

உபுண்டுவில் டெர்மினலில் ஒரு iso கோப்பினை உருவாக்கி அதனை சிடியில் எழுதவிட முடியும். இதற்கு brasero போன்ற மென்பொருள்கள் தேவையில்லை.

இதற்கு தேவையான மென்பொருள்களை நிறுவ கீழ்கண்ட கட்டளையே போதுமானது.

sudo apt-get install genisoimage wodim

உபுண்டுவில் பல பதிப்புகளை மேலே கண்ட நிரல்கள் இயல்பாக நிறுவப்பட்டிருக்கும். இல்லையேன்றால் நிறுவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் நாம் விரும்பும் ஒரு அடைவினை தேர்ந்தெடுத்து அதனை சிடியில் எழுதலாம். இதற்கு டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

mkisofs -o some.iso /home/username/folder name

இப்போது some.iso என்ற கோப்பானது home அடைவினுள் உருவாகியிருக்கும். இதனை சிடியில் எழுத சிடி வன்பொருள் இருக்கிறதா என்று பார்க்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.

wodim --devices

கீழ்கண்டவாறு திரை தோன்றும்.



பின்னர் டெர்மினலில்

wodim -v -dao speed=8 dev='/dev/sg0' some.iso

என்று தட்டச்சு செய்தால் சிடியில் some.iso என்ற கோப்பானது எழுதப்பட்டுவிடும்.

Saturday, January 21, 2012

உபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு

உபுண்டுவில் libreoffice ன் புதியபதிப்பு 3.4.5வினை நிறுவுவதைப்பற்றிப் பார்க்கலாம். இதனை PPA மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்வதன் மூலம் நிறுவிக்கொள்ளமுடியும்.

sudo add-apt-repository ppa:libreoffice/ppa

sudo apt-get update

sudo apt-get upgrade


இதை பற்றிய அறிவிப்பினை காண இந்த சுட்டியை பார்க்கவும்.

Monday, January 16, 2012

உபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண

உபுண்டு டெர்மினலில் நமக்கு அருகில் இருக்கும் wifi இணைப்புகளை காண கீழ்கண்ட கட்டளையினை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

iwlist scan

உடனே கீழ்கண்ட திரை டெர்மினலில் தோன்றும்.


இதிலிருந்து wifi யின் தன்மைகளை வேகம் போன்ற தகவல்களை டெர்மினலில் அறிந்து கொள்ளலாம்.

Sunday, December 18, 2011

உபுண்டு மடிக்கணினியில் power buttonஐ அழுத்தி உடனடியாக நிறுத்த


உபுண்டு மடிக்கணினியினை power button அழுத்தி உடனடியாக நிறுத்த முடியும்.

உபுண்டு மடிக்கணினியில் power buttonஐ அழுத்தினால் திரையில் கீழ்கண்டவாறு வரும்.


அப்படியில்லாமல் கணினியை உடனடியாக நிறுத்த முடியும். இதற்கு முதலில் இதற்கான கோப்பினை காணலாம். கோப்பானது /etc/acpi/powerbtn.sh ல் இருக்கிறது. எனவே இந்த கோப்பினை ஒரு பேக்கப் எடுத்துகொள்ள வேண்டும். இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை கொடுக்க வேண்டும்.

sudo cp /etc/acpi/powerbtn.sh /etc/acpi/powerbtn.sh.back

இந்த கோப்பில் கீழ்கண்டவாறு இருக்கும்.



டெர்மினலில்

sudo gedit /etc/acpi/powerbtn.sh என கட்டளையிட்டு கோப்பில் கீழ்கண்டாவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.


இப்போது power buttonஐ அழுத்தினால் மடிக்கணினி உடனடியாக நின்றுவிடும்.

Saturday, November 26, 2011

உபுண்டுவில் pdf கோப்புகளை இணைக்க

உபுண்டுவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட pdf கோப்புகளை இணைக்க பயன்படும் டூல் pdftk என்பதாகும். இந்த நிரலை கீழ்கண்ட வரியினை டெர்மினலில் கட்டளையாக கொடுப்பதன் மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

sudo apt-get install pdftk

இந்த நிரலை கீழ்கண்ட வகைகளில் பயன்படுத்தலாம்.

1. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணைக்க

pdftk A=12.pdf B=13.pdf C=14.pdf [...] cat A B C output 15.pdf

இதில் ABC என்பது கோப்புகளை குறிக்கும்.இந்த கட்டளையானது கோப்புகளில் இருக்கும் எல்லா பக்கங்களையும் இணைக்கும். இதை கொடுக்காமலும் பயன்படுத்தலாம்.

pdftk 12.pdf 13.pdf 14.pdf [..] cat 15.pdf

2.கோப்புகளிலிருந்து தேவையான பக்கங்களை மட்டும் இணைக்க

pdftk A=12.pdf B=13.pdf C=14.pdf [...] cat A2-5 B2-5 C2-5 output 15.pdf

இதில் A2-5, B2-5 மற்றும் C2-5 என்பது கோப்புகளில் எந்தெந்த பக்கங்களை சேர்க்க வேண்டும் என்பதாகும்.

3. wild card பயன்படுத்துதல்

pdftk *.pdf cat output 15.pdf

Saturday, November 19, 2011

உபுண்டுவில் application launcher உருவாக்குதல்

உபுண்டு 11.10ல் application launcher எப்படி உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம்.

முதலில் விஎல்சியின் launcher உருவாக்குவதைப்பற்றி பார்க்கலாம்.

இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get install --no-install-recommends gnome-panel


பின்னர் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

gnome-desktop-item-edit ~/Desktop/ --create-new

இதனை தட்டச்சு செய்தபின் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் Nameல் VLC என்று தட்டச்சு செய்தபின் commandல் vlc என்று தட்டச்சு செய்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


இப்போது மேசைமீது launcher உருவாகி இருப்பதை பார்க்கலாம்.

Thursday, November 10, 2011

உபுண்டுவில் கணினி 3D ஆதரிக்கிறதா என்பதை காண

உபுண்டுவில் நம்முடைய கணினி 3D யினை ஆதரிக்கிறதா என்பதை காண உதவும் டூல் glxgears ஆகும்.

இதனை இயக்க முதலில் mesa-utils என்னும் நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get install mesa-utils

நிரலை நிறுவிய பிறகு டெர்மினலில் glxgears என்று தட்டச்சு செய்ய வேண்டும். இதன் வெளிப்பாடாக இடது மேல் முலையில் மூன்று கியர்கள் சுழல்வது போல் படம் வரும்.


10 முதல் 12 விநாடிகளுக்கு பிறகு திரையில் fps போன்ற தகவல்கள் வரும். fps என்பது frame per second ஆகும். இதன் மதிப்பு 1000க்கு மேல் இருந்தால் 3D acceleration மற்றும் graphics னை ஆதரிப்பதக கொள்ளலாம்.