Pages

Monday, October 17, 2011

உபுண்டு 11.10

உபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்கலாம்.

இதனை என்னுடைய மடிக்கணினியில் நிறுவியவுடன் முதலில் தமிழ் தட்டச்சு எப்படி என்பது பற்றித்தான் யோசித்தேன். Scim முறை இதில் சரிப்பட்டு வரவில்லை. 11.04ல் கூட சரியாக வரவில்லை.

இதற்கேன எனக்கு உதவியது மு.மயுரன் என்பவர் எழுதிய பதிவுதான். இதை பயன்படுத்தி தமிழில் ஒலிப்பியல் முறையில் தட்டச்சு செய்ய முடிந்தது. அவர் ibus என்ற முறையில் தமிழ் தட்டச்சு பற்றி எழுதியிருந்தார். அதுவே எனக்கு உதவியது. இதோ அதற்கான சுட்டி. அவருக்கு என் நன்றிகள் .

இதன் மேசை கீழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.


இந்த பதிப்பில் libre office புதிய பதிப்பை சேர்த்திருக்கிறார்கள்.


நெருப்பு நரி 7.0.1 புதிய பதிப்புடன் வந்திருக்கிறது.



Evalaution mailக்கு பதிலாக thunderbirdனை சேர்த்திருக்கிறார்கள்.


விஎல்சி போன்றவைகூட புதிய பதிப்பில் இருக்கிறது.


இதனுடைய software center புதிய வடிவில் இருக்கிறது.

Rhythamboxற்க்கு பதில் Banshee சேர்த்திருக்கிறார்கள்.

shutdown பொத்தானில் system update,printers,system settings,display போன்றவற்றை சேர்த்திருக்கிறார்கள்.

மேலும் இதில் உள்ள நிறுவப்பட்ட நிரல்களை காண மேலே இடது மூலையில் சொடுக்க கீழ்கண்ட வாறு திரை வரும். அதில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.



எனவே இந்த பதிப்பு அனவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

5 comments:

aalunga said...

உபுண்டு 11.10 இன்னும் பிரம்மாண்டமாக உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை. விண்டோஸில் இயங்கும் மென்பொருட்களுக்கு இணையான திறமூல மென்பொருட்களும் உண்டு.
இதுவே, உபுண்டு மேம்மேலும் செழிக்க வழிவகை செய்கிறது!

சேக்காளி said...

பயனுள்ள பதிவு.சந்தேகங்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

HariV is not a aruvujeevi said...

எப்போதும் போல nice intro ! அசத்திவிட்டிர்கள்! நன்றி எப்போதும் போல .........

Unknown said...

kile நன்றாக வேலை செய்கிறதா என தெரிவிக்கவும். 11.04 upgrade செய்வது எப்படி என்றும் தெரியப்படுத்தவும். நன்றி.

Pakka techie said...

கலாசிக் இருந்து உபுண்டு, நம்மை தள்ளுவது வருத்தமே. அதனால் மின்ட் அதன் இடத்தை பிடித்து இருக்கிறது. distrowatch.com