Pages

Sunday, May 30, 2010

உபுண்டுவில் gpg key தானாக தரவிறக்கம் செய்ய

உபுண்டுவில் PPA மூலம் சில repository க்களை நாம் software sourceல் சேர்த்திருப்போம். ஆனால் update செய்யும் போது கீ இல்லை என்று பிழைசெய்தி காட்டும். இதை தவிர்க்க இப்போது deb வந்துள்ளது.

10.04 ன் கீக்கானது

launchpad-getkeys_0.1~lucid3_all.deb

9.10 ன் கீக்கானது

launchpad-getkeys_0.1~karmic_all.deb

மேற்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் போதும்.


இந்த நிரலை செயல்படுத்த டெர்மினலில்

sudo launchpad-getkeys என்று தட்டச்சு செய்ய வேண்டும்.




இப்போது System->administration->software source->authentication சென்றால்


இதில் நாம் சேர்த்த repository க்களுக்கு தேவையான கீ இருப்பதை காணலாம்.

Thursday, May 27, 2010

உபுண்டுவில் k3b burning application

உபுண்டுவில் சிடி எழுதுவதற்கு நான் பயன்படுத்துவது brasero தான். ஆனால் 1004ல் சிடி காப்பி செய்கையில் சில கோப்புகளை காணவில்லை என்று விண்டோ வந்தது.


என்னவென்று பார்த்தால் toc2cue மற்றும் cdrdao என்று இரு கோப்புகளையும் நிருவ சொல்லியது. இதில் toc2cue என்ற கோப்பு மட்டும் உபுண்டுவில் இல்லை. இந்த கோப்பு லினக்ஸ் மின்டிலும் இல்லை. எனவே k3b நிறுவிப்பார்க்கலாம் என்று நிறுவினேன். இது ubuntu software centre ல் இருக்கிறது.


நிறுவியப்பின் Applications->Sound & video->k3b சென்றால் வந்துவிடும்.



இதன் தோற்றமே விலை கொடுத்து வாங்கும் மென்பொருளைப்போல் இருக்கிறது.ஆனால் இது open source software. இது இலவசமாக கிடைக்கிறது. மேலும் அதை விட சிறப்பாக இயங்குகிறது.

ஒரு சிடியில் இருப்பதை காப்பி செய்து அதை image கோப்பாக மாற்றி வேறோரு சிடியில் எழுதியது.




இந்த நிரல் விரைவாக காப்பி செய்து எழுதிவிட்டது.

Wednesday, May 26, 2010

உபுண்டுவில் UCC (ubuntu control centre)

உபுண்டுவில் ucc (ubuntu control centre) எனப்படுவது உபுண்டுவில் உள்ள control centreஐ போல் இல்லாமல் வேறு பல நிரல்களையும் கொண்டுள்ளது. அதாவது hardware info,font manager போன்று பல நிரல்களை உடையது.

இந்த நிரலை நிறுவ முதலில் font manager நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் ucc தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

இந்த நிரலை இயக்குவதற்கு

Applications->Systems Tools->ucc செல்ல வேண்டும்.


Software management


Hardware


Networks and Internet



System


Local disks




Personal settings


Tuesday, May 25, 2010

உபுண்டுவில் desktop wallpaper slideshow

உபுண்டுவில் டெக்ஸ்டாபில் wallpaper slideshow வரவழைக்க முடியும். இதற்கு ஒரு சிறிய ஸ்கிரிப்டை தரவிறக்கி இயக்கினால் போதும்.

சுட்டி

தரவிறக்கினால் சுருக்கப்பட்ட கோப்பு கிடைக்கும். அதை விரித்து நம் மேசை மீது வைத்து கூட இயக்கலாம். கோப்பின் மீது இடது சொடுக்கினால்



run அழுத்தியவுடன்


ஸ்கிரிப்டை இயக்கியவுடன் மேலே கண்ட விண்டோ வரும். இதில் படங்கள் அடங்கிய அடைவை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் picture duration நேரத்தை நொடி,நிமிடம்,மணி போன்று நம் வசதிக்கு எற்றவாறு வைத்துக்கொள்ளலாம். ok அழுத்தினால் ஸ்கிரிப்ட் இயங்க தொடங்கும்.





Monday, May 24, 2010

உபுண்டுவில் linuxmint mainmenu

உபுண்டுவில் linuxmint வின் main menu வை நிறுவ முடியும். இதற்கு software sourceல் கீழ்கண்ட PPA வை சேர்த்துவிட வேண்டும்.

Linux mint என்பது உபுண்டுவை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு இயங்குதளமாகும்.

டெர்மினலில்

sudo add-apt-repository ppa:webupd8team/mintmenu && sudo apt-get update என்று தட்டச்சு செய்யவேண்டும். கணினி update ஆகிவிடும்.

மீண்டும் டெர்மினலில்

sudo apt-get install mintmenu என்று தட்டச்சு செய்தால் linuxmint menu நிறுவப்பட்டுவிடும்.

இதனை top panelல் கொண்டுவர டாப் பேனலில் வலது சொடுக்க வரும் விண்டோவில் add to panelல் mint menuவை தேர்ந்தெடுக்க வேண்டும்.





Menu icon மீது கர்சர் வைத்து இடது சொடுக்க மெனு வந்துவிடும்.



இதிலிருந்தே அனைத்து நிரல்களையும் இயக்கலாம்.

Sunday, May 23, 2010

உபுண்டுவில் skype repository

உபுண்டுவில் skype நிறுவ http://skype.com சென்று தரவிறக்கிதான் நிறுவிக்கொள்வோம். ஆனால் skype repository வந்துள்ளது. இதை நம்முடைய source.listல் சேர்த்துவிட்டால் கணினி update ஆகும்போது தானாகவே update ஆகிவிடும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/apt/sources.list என்று தட்டச்சு செய்து கோப்பு திறந்தவுடன் அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்

deb http://download.skype.com/linux/repos/debian/ stable non-free

பின்னர் சேமித்து வேளியேறவேண்டும்.

இதனுடைய கீயை சேர்க்க கீழ்கண்ட வரியை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.

sudo apt-key adv --keyserver pgp.mit.edu --recv-keys 0xd66b746e

இப்போது கீ சேர்ந்துவிடும்.

sudo apt-get update

sudo apt-get install skype என்று தட்டச்சு செய்தால் ஸ்கைப் நிறுவப்பட்டுவிடும்.

System->Administration->Software sources->Other software சென்று பார்த்தால்



இதனுடைய authentication key


உபுண்டுவில் loggin செய்தவர்கள் பெயர் தேதி நேரத்துடன் காண



உபுண்டுவில் உபயோகிப்பாளர்களின் பெயர் மற்றும் நம்முடைய பெயர், கணினியில் நுழைந்த தேதி நேரத்துடன் காண ஒரு ஸ்கிரிப்ட்

முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை உருவாக்க

sudo gedit logg.sh என்று தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் கீழ்கண்ட வரிகளை அதில் சேர்த்து செமித்து வேளியேற வேண்டும்.

#!/bin/bash
# Write a shell script called hello which output the following:
# + Your username
# + The time and date
# + Who is logged on
# + also output a line of asterices (*******) after each section

# function to display a line of asterices
function line(){
echo "*************************************************"
}

echo "Your username : $(echo $USER)"
line # call function

echo "Current date and time : $(date)"
line

echo "Currently logged on users:"
who
line

டெர்மினலில்

sudo chmod +x logg.sh

ஸ்கிரிப்டை இயக்க டெர்மினலில்

./logged.sh என்று தட்டச்சு செய்தால் அதன் அவுட்புட் கீழ்கண்டவாறு இருக்கும்

Friday, May 21, 2010

உபுண்டுவில் deb கோப்பில் உள்ளவற்றை காண

உபுண்டுவில் deb கோப்புகள் என்பது விண்டோஸில் exe கோப்புகளை போன்றது. நிரல்களை நிறுவ இந்த வகையான கோப்புகளை சொடுக்க வேண்டும்.

deb வகை கோப்புகளின் உள்ளே இருக்கும் கோப்புகளை காண கீழ்கண்ட கட்டளையை முதலில் கொடுக்க வேண்டும்.

sudo apt-get update && sudo apt-get apt-file


பின்னர் டெர்மினலில்

sudo apt-file update என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

நிரல் நிறுவப்பட்டவுடன் டெர்மினலில்

sudo apt-file list wget என்று கட்டளை கொடுத்தால்


என்று வரும்.

sudo apt-file list vlc என்று தட்டச்சு செய்தால்


இப்போது deb கோப்பின் உள்ளவற்றை காண

sudo dpkg-deb -c cndr*.deb என்று கொடுக்க வேண்டும். இதில் cndrvcups-capt_2.00-2_i386.deb என்ற கோப்பின் உள்ளதை காண இந்த கட்டளை கொடுக்கப்பட்டது.

Thursday, May 20, 2010

உபுண்டுவில் offline installer

உபுண்டுவை நிறுவும் போது அதில் பல வீடியோ கோடக்குகள் இருப்பதில்லை. அதாவது mp3,vob,avi போன்ற கோப்புகளை கையாள முடிவதில்லை. ogg மற்றும் ogv வடிவங்களையே ஆதரித்து வரும்.

ஆனால் இதையெல்லாம் சரிசெய்யும் விதமாக offline installer என்ற package வந்துள்ளது. அதை தரவிறக்கி கொண்டால் போதும். மீண்டும் உபுண்டு நிறுவ அவசியம் ஏற்பட்டால் இணைய இணைப்பு இல்லாமல் நிறுவிக்கொள்ளலாம்.

அதே போல் பலர் விரும்பும் விஎல்சியும் offline installer ஆக கிடைக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட 130 எம்பி கொள்ளளவு ஆகிறது.

ubuntu-restricted-extras தரவிறக்க சுட்டி

இன்னோரு சுட்டி

vlc offline தரவிறக்க சுட்டி

இன்னோரு சுட்டி





இந்த தொகுப்பை தரவிறக்கி என்னுடைய அலுவலக கணினியில் நிறுவிக்கொண்டேன். நன்றாக வேலை செய்கிறது. இதில் install.sh என்ற கோப்பினை கர்ஸர் வைத்து வலது சொடுக்கினால் போதும். தானாகவே நிறுவிக்கொண்டு விடும்.

Wednesday, May 19, 2010

உபுண்டுவில் மொத்தமாக mp3 to ogg வடிவங்களாக மாற்ற

உபுண்டுவில் இலவசமாக பாடல்கள் கேட்பதற்கு ogg வடிவங்களையே ஆதரிக்கிறது. ஆனால் mp3 வடிவங்களே கிடைக்கிறது. இப்படி கிடைக்கும் பாடல்களை ogg வடிவங்களில் மாற்றுவதற்கு ஒரு ஸ்கிரிப்ட் உதவுகிறது.

முதலில் இந்த ஸ்கிரிப்டை இயக்குவதற்கு கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

sudo apt-get install zenity ffmpeg என்று தட்டச்சு செய்து zenity மற்றும் ffmpeg என்ற இரு நிரல்களையும் நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில் ஸ்கிரிப்டை தரவிறக்க

wget http://raymii.org/cms/content/downloads/easyconverter.sh

sudo chmod +x easyconverter.sh

./easyconverter.sh

என்று ஒவ்வொரு கட்டளையாக கொடுக்க வேண்டும்.



கட்டளை இயங்க ஆரம்பித்ததும் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.


இதில் ok பொத்தானை அழுத்தியதும்.




இங்கு எந்த வடிவத்தை மாற்ற விரும்புகிறோமொ அதை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.



இங்கு எந்த அடைவினுள் இருக்கும் பாடல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து ok அழுத்தவேண்டும்.




இதில் எந்த வடிவமாக மாற்ற விரும்புகிறோமொ அதை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.



இங்கு தரத்தை தேர்ந்தெடுத்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


நாம் தேர்ந்தெடுத்தது சரி என்றால் lets rock baby பொத்தானை அழுத்த பாடல்கள் மாற துவங்கிவிடும்.



வடிவம் மாற்றப்பட்டு முடிந்தவுடன்


yes, open it பொத்தனை அழுத்தியவுடன் அடைவினை பார்க்கலாம்


எந்த வடிவத்திலிருந்தும் எந்த வடிவத்திற்கும் மாற்றக்கொள்ளலாம். (mp3,ogg,flac,amr)

Monday, May 17, 2010

உபுண்டுவில் tomboy with ubuntuone

உபுண்டுவில் tomboy notes களை ubuntu one வழியாக பகிர்ந்துகொள்ளமுடியும். இதற்கு முதலில் Applications->accessories->tomboy notes தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும். இதில் நமக்கு வேண்டிய குறிப்புகளை எழுதிவிடலாம்.



பின்னர் top panelல் உள்ள tomboy icon மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் preference தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் synchronisationஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.



மேலே உள்ள படத்தில் உள்ளவாறு அமைப்புகளை அமைத்துவிட்டு connect to server அழுத்த வேண்டும்.இதில் automatically synn in background every க்கு முன்னால் டிக் செய்தால் நாம் எவ்வளவு நிமிடம் கொடுக்கிறோமொ அந்த நிமிடத்திற்கு ஒரு முறை குறிப்புகள் இணையத்தில் update ஆகிகொண்டு இருக்கும்.


இங்கு பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுக்க வேண்டும்.



இங்கு add this computer ஐ அழுத்த நமது கணினி இணைந்துவிடும்.


பின்னர் top panelல் உள்ள tomboy notesன் ஐகான் மீது வலது சொடுக்க வரும் விண்டோவில் preference தேர்ந்தெடுக்க வேண்டும்.


இங்கு save பொத்தானை அழுத்த



yes பொத்தானை அழுத்த நோட்ஸ்கள் இணையத்தில் சேர்ந்துவிடும்.



இப்போது இணையத்தில்


இங்கு நாம் எழுதிய குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம்.