Pages

Sunday, March 18, 2012

உபுண்டுவில் sector 32 Flexnet problem -grub

உபுண்டுவுடன் விண்டோஸ் நிறுவியிருந்தால் தோன்றும் பிழை இது. அதாவது விண்டோஸில் ஏதேனும் வைரஸ் பதிப்பு இருந்தால் இது மாதிரியான பிழை செய்தி வரும். கணினியானது மீண்டும் மீண்டும் மீளத்துவங்கும். grub மேனுவினுள் செல்லாது. சிடி மூலம் grub மீண்டும் நிறுவினால் Sector 32 being in use by FlexNet என்ற செய்தி தோன்றும். அதாவது sector 32 வில் வேறு ஏதுவும் பதிவாகாது.

இதனை எவ்வாறு சரி செய்வது பற்றிப்பார்க்கலாம்.

1. முதல் வழி
முதலில் 1லிருந்து 63 sector வரையுள்ள தகவல்களை கீழ்கண்ட கட்டளையின் மூலம் ஒரு backup எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo dd if=/dev/sda of=~/first_63_sectors bs=512 count=63

பின்னர் 1 லிருந்து 62 வரையிலான sector களின் பதிவுகளை அழிக்க பின்வரும் கட்டளை கொடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த sector களில் grubனை மீண்டும் நிறுவவும் flexnet தகவல்களை அழிக்கவும் முடியும்.

sudo dd if=/dev/zero of=/dev/sda bs=512 count=62 seek=1

இப்போது லைவ் சிடி மூலம் grub நிறுவிக்கொள்ளலாம். அந்தந்த பதிப்பு சிடியை பயன்படுத்த வேண்டும்.

அல்லது sector 32 வில் உள்ள flexnet தகவல்களை மட்டும் அழிக்க கீழ்கண்ட கட்டளை கொடுக்க வேண்டும்.

sudo dd if=/dev/zero of=/dev/sda bs=512 count=1 seek=32

இங்கு 32 என்பது sector 32 என்பதாகும். 1லிருந்து 62 வரையிலான எந்த sectorல் flexnet பிழை இருக்கிறதோ அந்த sector என்ணை கொடுக்க வேண்டும்.

குறிப்பு: இந்த வழி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டும்.

2.இரண்டாவது வழி

இதனை PPA மூலமும் செயல்படுத்த முடியும்.

sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install boot-repair

பின்னர் boot-repair என்ற நிரலை இயக்கி பிழையினை சரிசெய்து கொள்ளலாம்.

மேற்கொண்டு grub பிழையினை பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்.

https://help.ubuntu.com/community/Boot-Repair