Pages

Friday, August 3, 2012

உபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற

உபுண்டுவில்  android  கைப்பேசியில்  வரும்  call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும்  உபுண்டுவிலும் தேவையான மென்பொருள்களை நிறுவிக்கொண்டால்  போதும்.

இந்த மென்பொருள்கள் இலவசமாகவே நமக்கு கிடைக்கின்றன. இதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான சுட்டி. இதில் உபுண்டுவிற்கான மென்பொருளும் android டிற்க்கான மென்பொருளும்  கிடைக்கிறது.

Androidடிற்க்கான  மென்பொருளை googleலும் பெறலாம். அதற்கான சுட்டி.



Tuesday, May 1, 2012

உபுண்டு 12.04 Precise Pangolin

உபுண்டு 12.04 சில  நாட்களுக்கு முன் வெளியானது. வழக்கம்போல் LTS க்கே உரித்தான பல்வேறு  புதிய  வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

முதலில் இதனை தரவிறக்கி சிடியில் பதிந்து செயல்படதுவங்கியவுடன் இதில் உள்ள  Installation type ல்  உள்ள நான்கு  பிரிவினுள் Upgrade 11.04 to 12.04 ம் அடக்கம்.


முந்தைய பதிப்புகளில் இதற்கே தனியாக  alternate cd தரவிறக்க வேண்டியிருக்கும்.

நெருப்பு நரி புதிய பதிப்புடன் 11.0 வெளியாகி உள்ளது. நிறுவியப்பின் புதிய பதிப்பு நெருப்பு நரி 12.0 update மூலம் நிறுவிக்கொள்ளலாம்.


தண்டர் பேர்டு 11.0.1 பதிப்புடன் வந்துள்ளது.


இந்த புதிய பதிப்பினை நிறுவியப்பின் startup sound வரவில்லை. இதனை startup applicationல்  சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம்.

கெர்னலும் புதிய பதிப்பு 3.2.0.23 உடன் வந்துள்ளது.updateல்  3.2.0.24 ஆக  மேம்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக தமிழ் உள்ளீடு முந்தைய 11.10ல் உள்ளதுபோல் அமைத்துகொள்ள வேண்டும்.இதற்கான சுட்டி உபுண்டு 11.10. Ibus முறையிலேயே அமைத்துக்கொள்ளலாம்.

லிபர் ஆபிஸ் புதிய பதிப்பான  3.5.2.2


System settings பகுதியில் இரண்டு புதிய வசதிகள் சேர்த்திருக்கிறார்கள்.


1.Privacy இதில் நாம் இயக்கிய கோப்புகளை பிறர் பார்க்கதவாறு மறைக்க முடியும்.
2. Management service என்பது Canonicalன் வர்த்தக ரீதியான சேவைகளை காண முடியும்.

இடது பக்கத்தில் உள்ள யுனிட்டி பார் நெருப்பு நரி இயக்கும்போது மறையவில்ல இதனை system settings மூலம் மறையவைக்கலாம்.

எந்தவிதமான பிரச்சனையில்லாமல் நிறுவ முடிந்தது. ஆடியோ, வீடியோ கோடக்குகளை வழக்கம்போல் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.





Thursday, April 5, 2012

உபுண்டு சில தகவல்கள்

ஜீஎன்யு/லினக்ஸ் மற்றும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தினை தோற்றுவித்த திரு. ரிச்சர்ல் ஸ்டால்மென் அவர்களின் Linux for you இதழுக்கு அளித்த நேர்காணல் தமிழில் தந்திருக்கிறார் நண்பர் மகேஷ் அவர்கள். அவருக்கு என் நன்றிகள் பல அதற்கான சுட்டி

நண்பர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்கள் Liebster Blog விருதினை வழங்கியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள் பல. அதற்கான சுட்டி

Sunday, March 18, 2012

உபுண்டுவில் sector 32 Flexnet problem -grub

உபுண்டுவுடன் விண்டோஸ் நிறுவியிருந்தால் தோன்றும் பிழை இது. அதாவது விண்டோஸில் ஏதேனும் வைரஸ் பதிப்பு இருந்தால் இது மாதிரியான பிழை செய்தி வரும். கணினியானது மீண்டும் மீண்டும் மீளத்துவங்கும். grub மேனுவினுள் செல்லாது. சிடி மூலம் grub மீண்டும் நிறுவினால் Sector 32 being in use by FlexNet என்ற செய்தி தோன்றும். அதாவது sector 32 வில் வேறு ஏதுவும் பதிவாகாது.

இதனை எவ்வாறு சரி செய்வது பற்றிப்பார்க்கலாம்.

1. முதல் வழி
முதலில் 1லிருந்து 63 sector வரையுள்ள தகவல்களை கீழ்கண்ட கட்டளையின் மூலம் ஒரு backup எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo dd if=/dev/sda of=~/first_63_sectors bs=512 count=63

பின்னர் 1 லிருந்து 62 வரையிலான sector களின் பதிவுகளை அழிக்க பின்வரும் கட்டளை கொடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த sector களில் grubனை மீண்டும் நிறுவவும் flexnet தகவல்களை அழிக்கவும் முடியும்.

sudo dd if=/dev/zero of=/dev/sda bs=512 count=62 seek=1

இப்போது லைவ் சிடி மூலம் grub நிறுவிக்கொள்ளலாம். அந்தந்த பதிப்பு சிடியை பயன்படுத்த வேண்டும்.

அல்லது sector 32 வில் உள்ள flexnet தகவல்களை மட்டும் அழிக்க கீழ்கண்ட கட்டளை கொடுக்க வேண்டும்.

sudo dd if=/dev/zero of=/dev/sda bs=512 count=1 seek=32

இங்கு 32 என்பது sector 32 என்பதாகும். 1லிருந்து 62 வரையிலான எந்த sectorல் flexnet பிழை இருக்கிறதோ அந்த sector என்ணை கொடுக்க வேண்டும்.

குறிப்பு: இந்த வழி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டும்.

2.இரண்டாவது வழி

இதனை PPA மூலமும் செயல்படுத்த முடியும்.

sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install boot-repair

பின்னர் boot-repair என்ற நிரலை இயக்கி பிழையினை சரிசெய்து கொள்ளலாம்.

மேற்கொண்டு grub பிழையினை பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்.

https://help.ubuntu.com/community/Boot-Repair

Thursday, January 26, 2012

உபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற்றும் சிடியில் எழுதுதலும்

உபுண்டுவில் டெர்மினலில் ஒரு iso கோப்பினை உருவாக்கி அதனை சிடியில் எழுதவிட முடியும். இதற்கு brasero போன்ற மென்பொருள்கள் தேவையில்லை.

இதற்கு தேவையான மென்பொருள்களை நிறுவ கீழ்கண்ட கட்டளையே போதுமானது.

sudo apt-get install genisoimage wodim

உபுண்டுவில் பல பதிப்புகளை மேலே கண்ட நிரல்கள் இயல்பாக நிறுவப்பட்டிருக்கும். இல்லையேன்றால் நிறுவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் நாம் விரும்பும் ஒரு அடைவினை தேர்ந்தெடுத்து அதனை சிடியில் எழுதலாம். இதற்கு டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

mkisofs -o some.iso /home/username/folder name

இப்போது some.iso என்ற கோப்பானது home அடைவினுள் உருவாகியிருக்கும். இதனை சிடியில் எழுத சிடி வன்பொருள் இருக்கிறதா என்று பார்க்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.

wodim --devices

கீழ்கண்டவாறு திரை தோன்றும்.



பின்னர் டெர்மினலில்

wodim -v -dao speed=8 dev='/dev/sg0' some.iso

என்று தட்டச்சு செய்தால் சிடியில் some.iso என்ற கோப்பானது எழுதப்பட்டுவிடும்.

Saturday, January 21, 2012

உபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு

உபுண்டுவில் libreoffice ன் புதியபதிப்பு 3.4.5வினை நிறுவுவதைப்பற்றிப் பார்க்கலாம். இதனை PPA மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்வதன் மூலம் நிறுவிக்கொள்ளமுடியும்.

sudo add-apt-repository ppa:libreoffice/ppa

sudo apt-get update

sudo apt-get upgrade


இதை பற்றிய அறிவிப்பினை காண இந்த சுட்டியை பார்க்கவும்.

Monday, January 16, 2012

உபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண

உபுண்டு டெர்மினலில் நமக்கு அருகில் இருக்கும் wifi இணைப்புகளை காண கீழ்கண்ட கட்டளையினை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

iwlist scan

உடனே கீழ்கண்ட திரை டெர்மினலில் தோன்றும்.


இதிலிருந்து wifi யின் தன்மைகளை வேகம் போன்ற தகவல்களை டெர்மினலில் அறிந்து கொள்ளலாம்.