Pages

Monday, November 29, 2010

உபுண்டு Places மெனுவில் மேலும் அடைவுகளை சேர்த்தல்

உபுண்டு Places மெனுவில் ஒரு சில அடைவுகள்தான் இருக்கும். அதில் மேற்கொண்டு அடைவுகளை சேர்க்க முடியும்.


முதலில் Home அடைவினுள் நாம் சேர்க்க விரும்பும் அடைவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்கனவே இருக்கும் அடைவனாலும் இருக்கலாம்.


மேலே உள்ள படத்தில் இருக்கும் அடைவான Public என்ற அடைவிவை எடுத்துக்கொள்வோம். இந்த அடைவினை Places மெனுவில் சேர்ப்பது பற்றிப்பார்ப்போம்.

முதலில் டெர்மினலில்

gksudo gedit .gtk-bookmarks

என்ற கட்டளையை கொடுத்து home அடைவினுள் இருக்கும் .gtk-bookmarks என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.

file:///home/user name/Public


இப்போது Places மெனுவில் Public என்ற அடைவு வந்திருப்பதை பார்க்கலாம்.


gtk-bookmarks என்ற கோப்பானது home அடைவினுள் மறைக்கப்பட்ட கோப்பாக இருக்கும்.

Sunday, November 28, 2010

உபுண்டுவில் ALt+printscr பயன்படுத்தி screenshot எடுத்தல்



உபுண்டு 10.10 நிறுவப்பட்டவுடன் Alt+prinscr ஐ பயன்படுத்தி screenshot எடுக்க முடியவில்ல. இந்த கீக்களின் செயல்படுகளை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். அந்த சுட்டி.

மீண்டும் செயல்பட வைக்க டெர்மினலில்.

sudo gedit /etc/sysctl.conf என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில்

kernel.sysrq = 1 என்ற வரியை kernel.sysrq = 0 என்று மாற்றிவிடவேண்டும். இப்போது alt+printscr பயன்படுத்தி screenshot எடுக்கலாம்.


Tuesday, November 23, 2010

உபுண்டுவில் தேவையில்லாத கோப்புகள்/அடைவுகளை நீக்க

உபுண்டுவில் தேவையில்லாத அடைவுகள் மற்றும் கோப்புகளை சிரமமின்றி நீக்குவதற்கு ஒரு எளிய நிரல். இதனை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவேண்டும்.. இந்த கோப்பு zip வடிவில் இருக்கும். இந்த கோப்பினை exatract செய்யும் போது FCLEANER-2.2 என்ற அடைவாக இருக்கும்.


மேற்கண்ட அடைவினுள் இருக்கும் install.sh என்ற கோப்பினை இரட்டை கிளிக் செய்ய நிரல் நிறுவப்பட்டுவிடும்.

இதனை இயக்க Applications->Accessories->File-organiser செல்ல வேண்டும்.



இந்த நிரல் இயங்கும்போது



இதில் ok பொத்தானை அழுத்த கோப்புகளை அழிக்க வேண்டிய அடைவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்தவுடன் கோப்புகள் அழிக்கப்பட்டு இருக்கும்.







Monday, November 22, 2010

உபுண்டுவில் gnome panel font bold/italic/font size மாற்ற

உபுண்டுவில் top panelல் உள்ள எழுத்துக்களை பளீச்சென்று, சாய்வாக மற்றும் எழுத்துருவின் அளவை மாற்ற முடியும். இதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo gedit .gtkrc-2.0 என்று தட்டச்சு செய்து .gtkrc-2.0 என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். கோப்பு இல்லையேன்றால் காலி கோப்பாக திறக்கும். அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவும்.


style "modpanel"
{
font_name = "Bold 10"
}
widget "*PanelWidget*" style "modpanel"
widget "*PanelApplet*" style "modpanel"
widget "*fast-user-switch-applet*" style "modpanel"

பின்னர் செமித்து வெளியேறிவிடவேண்டும். மேற்கண்ட கோப்பினை செயல்படுத்த டெர்மினலில்

killall gnome-panel என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

சாதாரண நிலையில் பேனல்


மேலே உள்ள வரிகளில் font_name="Italic 10" என்று மாற்றினால்


font_name="Bold 10" என்று மாற்றினால்


font_name="Bold 12" என்று மாற்றினால்


இதில் ( ") குறியீடு நேராக இருக்க வேண்டும். சாய்வாக இருக்க கூடாது.

Saturday, November 20, 2010

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் உறைந்து போகாமல் காண

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது சில சமயம் உறைந்து நின்றுவிடுகிறது. மீண்டும் சின்னதாக அமைத்து மீண்டும் முயற்சிகையில் தான் சரியானது. இப்போது இதற்கு ஒரு வழி உள்ளது.

டெர்மினலில்

sudo mkdir /etc/adobe என்று தட்டச்சு செய்து /etc/adobe என்ற ஒரு அடைவினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /etc/adobe/mms.cfg என்று தட்டச்சு செய்து mms.cfg என்ற ஒரு காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவும்.

OverrideGPUValidation=true

சேமித்து வெளியேறிவிடவும்.

இப்போது youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது உறைந்து போவதில்லை.

உபுண்டு கணினி விரைவாக இயங்க ஒரு கர்னல் patch

உபுண்டு கணினி வேகமாக இயங்க ஒரு கர்னல் பேட்ச். இதை அளித்தவர் Red Hatன் developer Lennart Poettering, கர்னலை உருவாக்கிய LinusTorvaldsக்கு எழுதிய பதிலில் தெரிவித்திருக்கிறார்.

இதை எப்படி உபுண்டுவில் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

1.முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/rc.local என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். அதில் exit 0 என்பதற்கு மேலாக கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட வேண்டும்.

mkdir -p /dev/cgroup/cpu
mount -t cgroup cgroup /dev/cgroup/cpu -o cpu
mkdir -m 0777 /dev/cgroup/cpu/user
echo "/usr/local/sbin/cgroup_clean" > /dev/cgroup/cpu/release_agent



பின்னர் சேமித்து வெளியேறிவிடவேண்டும். டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo chmod +x /etc/rc.local

2.Home அடைவினுள் இருக்கும் ./bashrc என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit ./bashrc அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

if [ "$PS1" ] ; then
mkdir -p -m 0700 /dev/cgroup/cpu/user/$$ > /dev/null 2>&1
echo $$ > /dev/cgroup/cpu/user/$$/tasks
echo "1" > /dev/cgroup/cpu/user/$$/notify_on_release
fi



3.டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்து புதிய ஒரு கோப்பினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /usr/local/sbin/cgroup_clean இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

#!/bin/sh
rmdir /dev/cgroup/cpu/$*

பின்னர் டெர்மினலில்

sudo chmod +x /usr/local/sbin/cgroup_clean என்று தட்டச்சு செய்துவிட வேண்டும்.

பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.

இப்போது கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.

மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.

இதை செய்துமுடித்தவுடன் எனக்கு நெருப்பு நரி, தண்டர்பேர்டு, ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்கள் வேகமாக இயங்குவதாக தெரிகிறது.

Thursday, November 18, 2010

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver QMLSaver.


இந்த screen saverஐ நிறுவ டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:prodoomman/qmlsaver
sudo apt-get update
sudo apt-get install qmlsaver

இந்த நிரலை இயக்க System->Preferences->Screensaver சென்று QMLSaver ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது பற்றிய ஒரு வீடியோ

Wednesday, November 17, 2010

உபுண்டுவில் screen saverகளை desktop ல் வைக்க

உபுண்டுவில் இருக்கும் screen saverகளை மேசையின்மீது background ஆக வைக்க முடியும். இதற்கு Anibg மற்றும் Shantz-XWinWrap இந்த இரண்டு நிரல்களை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். நிறுவியபிறகு Applications->Accessories->anibg க்கு செல்ல வேண்டும். இந்த நிரல் top panelல் இருக்கும். இதன் மீது கர்சரை வைத்து இடது சொடுக்கவேண்டும். இந்த நிரல்களை தரவிறக்க


இதில் preferences தேர்ந்தெடுத்தால் உபுண்டுவை ஆரம்பிக்கும்போதே வரவழைக்கலாம்.



இது பற்றிய ஒரு வீடியோ

Monday, November 15, 2010

உபுண்டுவில் remote flight control Drone



உபுண்டுவில் remote flight control இப்போது சிறிய அளவில் வந்துள்ளது. சிறிய helicopter வந்துள்ளது. இந்த சிஸ்டம் wifi இணைப்பாகும். இதில் இரண்டு கேமிராக்கள் உண்டு. இது விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 15000 இருக்கும். இது பற்றிய ஒரு வீடியோ. இது open source மென்பொருளாகும்.





இது பற்றிய தகவல்களுக்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து பெறலாம்.

Official website

ubuntuforms

Sunday, November 14, 2010

உபுண்டுவில் தட்டச்சு கற்றுதர ஒரு நிரல் tux typing

உபுண்டுவில் இந்த குழந்தைகள் தினத்தில் அவர்கள் அறிவை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு எழுத்துக்கள் மற்றும் தட்டச்சு செய்யும் திறனை அதிகரிக்கும் விதமாக இருக்கும் நிரல் தான் tux typing. இந்த நிரலை ubuntu software centerலிருந்து நிறுவிக்கொள்ளலாம்.


இந்த நிரல் தட்டச்சு செய்வதை எளிதாக கற்றுத்தருகிறது. நிரலை நிறுவியப்பின் Applications->Education->Tux Typing செல்ல வேண்டும்.




இதில் தமிழ் உண்டு. ஆப்ஷனில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்தால் தமிழ் தட்டச்சு செய்யலாம்.

இது பற்றிய ஒரு வீடியோ

Saturday, November 13, 2010

உபுண்டுவில் நம் கணினித்திரை ஆதரிக்கும் resolutionகள்

உபுண்டுவில் நம்கணினி திரை ஆதரிக்கும் resolution கள் எவை என்று கண்டுபிடிக்க முடியும்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get install v86d hwinfo


பின்னர் டெர்மினலில்

sudo hwinfo --framebuffer என்று கட்டளையிட்டால் நம் கணினிதிரை கீழ்கண்ட resolutionகளை ஆதரிக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

Revision: "Hardware Version 0.0"
Memory Size: 7 MB + 704 kB
Memory Range: 0xd0000000-0xd07affff (rw)
Mode 0x033c: 1920x1440 (+1920), 8 bits
Mode 0x034d: 1920x1440 (+3840), 16 bits
Mode 0x033a: 1600x1200 (+1600), 8 bits
Mode 0x034b: 1600x1200 (+3200), 16 bits
Mode 0x035a: 1600x1200 (+6400), 24 bits
Mode 0x0307: 1280x1024 (+1280), 8 bits
Mode 0x031a: 1280x1024 (+2560), 16 bits
Mode 0x031b: 1280x1024 (+5120), 24 bits
Mode 0x0305: 1024x768 (+1024), 8 bits
Mode 0x0317: 1024x768 (+2048), 16 bits
Mode 0x0318: 1024x768 (+4096), 24 bits
Mode 0x0312: 640x480 (+2560), 24 bits
Mode 0x0314: 800x600 (+1600), 16 bits
Mode 0x0315: 800x600 (+3200), 24 bits
Mode 0x0301: 640x480 (+640), 8 bits
Mode 0x0303: 800x600 (+832), 8 bits
Mode 0x0311: 640x480 (+1280), 16 bits
Config Status: cfg=new, avail=yes, need=no, active=unknown

உபுண்டுவில் மெனுவுடன் ஒரு ஸ்கிரிப்ட்.

உபுண்டுவில் மெனுவுடன் ஒரு ஸ்கிரிப்ட். அதாவது நான்கு ஆப்ஷன்களுடன் ஒரு ஸ்கிரிப்ட்.

டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொண்டு அதில் கீழ்கண்டவரிகளை காப்பி செய்துவிடவும்.

sudo gedit menu.sh

#!/bin/bash
# A menu driven Shell script which has following options
# Contents of /etc/passwd
# List of users currently logged
# Prsent handling directory
# Exit
# As per option do the job
# -------------------------------------------------------------------------

while :
do
clear
echo " M A I N - M E N U"
echo "1. Contents of /etc/passwd"
echo "2. List of users currently logged"
echo "3. Prsent handling directory"
echo "4. Exit"
echo -n "Please enter option [1 - 4]"
read opt
case $opt in
1) echo "************ Conents of /etc/passwd *************";
more /etc/passwd;;
2) echo "*********** List of users currently logged";
who | more;;
3) echo "You are in $(pwd) directory";
echo "Press [enter] key to continue. . .";
read enterKey;;
4) echo "Bye $USER";
exit 1;;
*) echo "$opt is an invaild option. Please select option between 1-4 only";
echo "Press [enter] key to continue. . .";
read enterKey;;
esac
done

பின்னர் செமித்து வெளியேறிவிடவும்.

sudo chmod +x menu.sh

./menu.sh என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்ட மெனுக்கள் வரும்.

M A I N - M E N U
1. Contents of /etc/passwd
2. List of users currently logged
3. Prsent handling directory
4. Exit
Please enter option [1 - 4]

இதில் 1 என்று தேர்ந்தெடுத்தால் /etc/passwd என்ற கோப்பில் உள்ள அனைத்தும் திரையில் வெளிப்படும்.

Thursday, November 11, 2010

உபுண்டுவில் இந்த வருடம் leap வருடமா என்பதை கண்டறிய ஒரு ஸ்கிரிப்ட்

உபுண்டுவில் இந்த வருடமோ அல்லது வேறு ஏதேனும் வருடமோ லீப் வருடமாக என கண்டறிய ஒரு எளிய ஸ்கிரிப்ட்.

டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.

sudo gedit leap.sh என்று தட்டச்சு செய்தால் ஒரு காலி டெக்ஸ்ட் திறந்துகொள்ளும். அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துவிட்டு செமித்து வெளியேறவேண்டும்.

#!/bin/bash
# Shell program to read any year and find whether leap year or not

# -------------------------------------------------------------------------

# store year
yy=0
isleap="false"

echo -n "Enter year (yyyy) : "
read yy

# find out if it is a leap year or not

if [ $((yy % 4)) -ne 0 ] ; then
: # not a leap year : means do nothing and use old value of isleap
elif [ $((yy % 400)) -eq 0 ] ; then
# yes, it's a leap year
isleap="true"
elif [ $((yy % 100)) -eq 0 ] ; then
: # not a leap year do nothing and use old value of isleap
else
# it is a leap year
isleap="true"
fi
if [ "$isleap" == "true" ];
then
echo "$yy is leap year"
else
echo "$yy is NOT leap year"
fi

பின்னர் இந்த கோப்பினை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x leap.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

பின்னர் டெர்மினலில்

./leap.sh என்று தட்டச்சு செய்தால் வருடம் கேட்கும். அதையும் கொடுத்தால் லீப் வருடமா இல்லையா என்று காட்டிவிடும்.

Wednesday, November 10, 2010

உபுண்டுவில் மவுஸின் பொத்தான்களின் செயல்பாட்டை ஒரே பொத்தானில் வைக்க

உபுண்டுவில் மவுஸின் இடது பக்க பொத்தானிலேயே வலது பக்க பொத்தனின் செயல்பாட்டை வைக்க முடியும்.

வெற்று மேசையின்மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் ஆப்ஷன் விண்டோவானது இடது சொடுக்கலேயே வரவழைக்க முடியும்.


இதற்கு System->Preferences->Mouse->Accessibility செல்ல வேண்டும்.


மேலே உள்ள விண்டோவில் Trigger secondary click holding down the primary button என்ற ஆப்ஷனை டிக் செய்திட வேண்டும்.

பின்னர் மேசையின்மீது வெற்று இடத்தில் கர்சரை வைத்து மவுஸின் இடது பொத்தானை சிறிது விநாடிகள் அழுத்த மவுஸின் வலது பொத்தானை அழுத்தினால் வரும் ஆப்ஷன்கள் எல்லாம் வரும். இதை ஒரு கோப்பின் மீதும் செயல்படுத்தலாம்.

Tuesday, November 9, 2010

உபுண்டுவில் screen resolution மாற்றி அமைக்க

உபுண்டுவில் screen resolutionஐ மாற்றி அமைக்க ஒரு ஸ்கிரிப்ட். இதனை மேசைமீது தரவிறக்கி விரித்துக்கொள்ளவேண்டும். விரிக்கப்பட்ட கொப்பின் மீது இரட்டை கிளிக் செய்ய வரும் விண்டோவில் run பொத்தானை அழுத்தவேண்டும்.


மேலே உள்ள படத்தில் default resolution மற்றும் தற்போதைய resolution இருக்கிறது. கீழே மாற்ற வேண்டிய அளவுகள் உள்ளது. இப்போது 1280 என்று கொடுக்க screen எப்படி ஆகிறது என்று பார்க்கலாம்.


மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப default ஆக இருந்த அளவை கொடுத்தால் போதும்.

உபுண்டுவில் வேண்டாத தீம்களை அழிக்க

உபுண்டுவில் System->Preferences->appearance->themes சென்றால் பல தீம்கள் இருப்பதை பார்க்கலாம். இதில் வேண்டாத தீம்களை அழிக்கலாம் என்றால் delete பொத்தான் செயலற்று இருக்கும்.


இந்த delete பொத்தானை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றிப்பார்ப்போம்.

டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gksu gnome-appearance-properties

மேற்கண்ட கட்டளையை செயல்படுத்தியவுடன் கடவுச்சொல் கேட்கும். அதை கொடுத்தவுடன் கீழ்கண்ட விண்டோ திறக்கும்.




மேலே உள்ள விண்டோவில் delete பொத்தான் நல்ல நிலையில் இருப்பதை பார்க்கலாம். இப்போது ஏதேனும் தேவையில்லாத தீம்மை தேர்வு செய்து delete பொத்தானை அழுத்தினால் தீம் அழிந்துவிடும்.

Monday, November 8, 2010

உபுண்டுவில் எண்களை வார்த்தைகளாக மாற்ற ஒரு எளிய ஸ்கிரிப்ட்



உபுண்டுவில் எண்களை வார்த்தைகளாக மாற்ற ஒரு எளிய நிரல். அதாவது எடுத்துக்காட்டாக 116 என்று எடுத்துக்கொள்ளவோம் இந்த நிரலை இயக்கினால் one one six என்று வெளிப்பாடாக வரும். இதற்கு முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.

sudo gedit noword.sh

இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துகொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்


#!/bin/bash
# Shell script to read a number and write the number in words. Use case
# control structure. For example 12 should be print as one two
# -------------------------------------------------------------------------

echo -n "Enter number : "
read n

len=$(echo $n | wc -c)
len=$(( $len - 1 ))

echo "Your number $n in words : "
for (( i=1; i<=$len; i++ ))
do
# get one digit at a time
digit=$(echo $n | cut -c $i)
# use case control structure to find digit equivalent in words
case $digit in
0) echo -n "zero " ;;
1) echo -n "one " ;;
2) echo -n "two " ;;
3) echo -n "three " ;;
4) echo -n "four " ;;
5) echo -n "five " ;;
6) echo -n "six " ;;
7) echo -n "seven " ;;
8) echo -n "eight " ;;
9) echo -n "nine " ;;
esac
done

# just print new line
echo ""

பின்னர் இந்த ஸ்கிர்ப்ட் கோப்பினை இயக்க வைக்க டெர்மினலில்
sudo chmod +x noword.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். டெர்மினலில்

./noword.sh என்று தட்டச்சு செய்தால் எண் கேட்கும். அதை தட்டச்சு செய்தால் வார்த்தைகளாக மாறி வரும்.


Sunday, November 7, 2010

உபுண்டுவில் bsnl 3g data card தொடர்ச்சி

உபுண்டுவில் bsnl 3g data card இணைப்பதை பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். இணைய இணைப்பிற்க்கான நிரல் அதுவும் deb நிரல் அந்த data cardல் இருக்கிறது. கீழே உள்ள சில படங்களை பார்த்தால் தெரியும்.

usb portல் இணைத்தவுடன் மேசைமீது தெரியும் ஐகான்


இந்த ஐகான் மீது கர்ஸரை இரட்டை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ திறக்கும்.


மேலே உள்ள படத்தில் linux,windows,mac ஆகிய மூன்று ஒஸ்க்களுக்கும் நிரல்கள் இருக்கும். சிகப்பு கட்டம் காட்டப்பட்ட இடத்தில் நமக்கு தேவையான நிரல் உள்ளது.


இந்த நிரலை நிறுவியவுடன் Applications->internet சென்றால் அதில் ஆப்ஷன் இருக்கும்.



இதில் bsnl 3g தேர்ந்தெடுத்தவுடன்



இதில் 5 மெனுக்கள் உள்ளன.
1. இதில் சிக்னல் தெரியும்.
2.இதில் connection speed, sent & received bytes தெரியும்


3.இதில் sms அனுப்பலாம்.


4.இதில் போன் நம்பர்களை சேமித்துக்கொள்ளலாம்


5.இதில் settings அமைத்துக்கொள்ளலாம்.

உபுண்டுவில் bsnl 3g data card

உபுண்டுவில் bsnl 3g data card செயல்படுத்துவதற்கு எந்தவிதமான நிரல்களின் உதவியின்றி network manager மூலம் அமைக்கலாம்.

Teracom Ltd ன் தயாரிப்பு. இதன் வேகம் 7.6 Mbps இதன் விலை தற்சமயம் 2500+RC110+Data plan 326 ஆக மொத்தம் 2936.

இதனை usb portல் இணைத்துவிட்டால் போதும். Top panelல் உள்ள network manager icon மீது வலது சொடுக்க வரும் விண்டோவில் Edit connections->Mobil broadband->Add தேர்வு செய்தவுடன் கீழ்கண்ட விண்டோ வரும்.


இதில் Forward பொத்தானை அழுத்தியவுடன்


மேலே உள்ள விண்டோவில் கணினி data cardஐ ஏற்றுகொண்டுவிட்டதை காட்டுகிறது. பின்னர் forward பொத்தானை அழுத்த








மேலே உள்ள விண்டோவில் சில அமைப்புகளை அமைக்க வேண்டும்.

Connect automatically என்பதனை டிக் செய்திட வேண்டும்.
APNல் உள்ள bsnlsouth என்பதை bsnlnet என்று மாற்றிவிட வேண்டும்.
Type ல் 5 ஆப்ஷன்கள் உள்ளன அதில் any என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Available to all users என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் Apply பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது data card இயங்க ஆரம்பித்துவிடும்.