Pages

Showing posts with label deb. Show all posts
Showing posts with label deb. Show all posts

Friday, May 21, 2010

உபுண்டுவில் deb கோப்பில் உள்ளவற்றை காண

உபுண்டுவில் deb கோப்புகள் என்பது விண்டோஸில் exe கோப்புகளை போன்றது. நிரல்களை நிறுவ இந்த வகையான கோப்புகளை சொடுக்க வேண்டும்.

deb வகை கோப்புகளின் உள்ளே இருக்கும் கோப்புகளை காண கீழ்கண்ட கட்டளையை முதலில் கொடுக்க வேண்டும்.

sudo apt-get update && sudo apt-get apt-file


பின்னர் டெர்மினலில்

sudo apt-file update என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

நிரல் நிறுவப்பட்டவுடன் டெர்மினலில்

sudo apt-file list wget என்று கட்டளை கொடுத்தால்


என்று வரும்.

sudo apt-file list vlc என்று தட்டச்சு செய்தால்


இப்போது deb கோப்பின் உள்ளவற்றை காண

sudo dpkg-deb -c cndr*.deb என்று கொடுக்க வேண்டும். இதில் cndrvcups-capt_2.00-2_i386.deb என்ற கோப்பின் உள்ளதை காண இந்த கட்டளை கொடுக்கப்பட்டது.

Wednesday, February 3, 2010

உபுண்டுவில் .deb repack

உபுண்டுவில் ஏற்கனேவெ நிறுவப்பட்ட நிரல்களை மீண்டும் .deb ஆக மாற்றலாம். இப்படி மாற்றம் செய்யப்பட்ட நிரல்களை செமித்து வைத்து கொள்ளலாம். முதலில் டெர்மினலில்

sudo apt-get install dpkg-repack என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிகொள்ள வேண்டும்.

டெர்மினலில் நாம் எந்த நிரலை repackஐ செய்ய விரும்புகிறோமோ அதன் பெயரை கொடுக்க வேண்டும்.

sudo dpkg-repack vlc என்று தட்டச்சு செய்தால் vlcயின் .deb package வந்துவிடும்.

இதே போல் thunderbird, rythambox போன்றவைகளையும் போட்டு கொள்ளலாம்.

இந்த நிரல்கள் 32bitக்கானது. இதே amd 64 என்றால் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.

sudo dpkg-repack --arc=amd64 என்று கட்டளையிட்டால் 64 bitக்கானது repack ஆகிவிடும்.