Pages

Sunday, January 31, 2010

உபுண்டுவில் image rotate and resize

உபுண்டுவில் புகைப்படங்ளை rotate செய்யவோ அல்லது அளவை மாற்றி செமிக்க முடியும். முதலில் டெர்மினலில்

#sudo apt-get install nautilus-image-converter imagemagick என்று தட்டச்சு செய்து நிரல்களை நிறுவிகொள்ளவேண்டும்.

பின்னர் ஏதேனும் ஒரு அடைவினுள் இருக்கும் படத்தின் மீது கர்சரை வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் rotate or resize optionஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.


இதில் resize images என்பதை தேர்வு செய்தால்.


இதில் pixelகளி அளவுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் . append ல் வேறு பெயர்கள் கொடுத்து கொள்ளலாம்.

rotate image தேர்வு செய்தால்


இந்த option ல் படங்களை 90 அல்லது 180 டிகிரிகளில் அளவுகளில் மாற்றலாம். அல்லது நாம் விரும்புக் கோணத்தில் மாற்றலாம்.

இப்படி இருந்த படம் கீழ்கண்ட படத்தைபோல் மாறிவிட்டது.

உபுண்டு firefox tips

உபுண்டுவில் firefox tips

1. ஏதேனும் ஒரு கோப்பை தரவிறக்கி முடித்தவுடன் தோன்றும் popup விண்டோவை தவிர்க்க

அட்ரஸ் பாரில் about:config என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் search Boxல்

browser.download.manager.showAlertOnComplete என்பதன் valueவை true விலிருந்து false ஆக மாற்றவேண்டும்.



2.படம் திறக்கும் போது படமானது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில் திறக்க

browser.enable_automatic_image_resizing என்பதன் valueவை trueவிலிருந்து false ஆக மாற்றவேண்டும்.



3. நெருப்பு நரியின் உலாவியின் பின்புல நிறத்தை மாற்ற இதில் இரண்டு முறைகள் உள்ளன.

Edit->preferences->content-colour தேர்ந்தெடுக்கவேண்டும்.



இரண்டாவது முறையாக address barல் about:config தட்டச்சு செய்து

browser.display.background_color என்பதன் Value வை மாற்றவேண்டும்.


மேற்கண்ட படத்தில் #FFFFFF என்பது default மதிப்பு ஆகும். இதை கீழ்கண்ட மதிப்புகள் கொடுத்து மாற்றலாம். ஒவ்வொரு மதிப்பும் தனிதனியான நிறத்தை குறிக்கும்.

#000000 - black
#FFFFFF - white (which is the default)
#000080 - navy
#800080 - purple


Saturday, January 30, 2010

உபுண்டு firefoxல் fax tab என்ற ஒரு நீட்சி

உபுண்டு firefoxல் fax tab என்ற ஒரு நீட்சியை இணைத்து விட்டால் address bar அருகிலேயே இதன் icon அமைந்துவிடும். இணைய உலாவரும்போது அதை சொடுக்கினால் வரும் திரை காட்சிகளை பார்க்கலாம்.












இதில் இடது பக்க கீழ் மூலையி இருக்கும் option பொத்தனில் நமக்கு வேண்டிய settings அமைத்துகொள்ளலாம்.

உபுண்டு: firefox default modeல் private browsing

உபுண்டு firefoxல் சாதரணமாக private browsing செல்வதற்கு tools menu தான் செல்வோம். ஆனால் private browsing default ஆக அமைக்க முடியும். அதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பார்க்கலாம்.


நெருப்பு நரியில் அட்ரஸ் பாரில் about:config என்று தட்டச்சு செய்தால் மேற்கண்ட விண்டோ வரும். அதில்.

அதில் browser.private என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்ட விண்டோவாக mமாறும்


browser.privatebrowsing.autostart என்பதற்கு நேரே value கீழ் உள்ள false என்பதனை true ஆக மாற்றவேண்டும்.



பின்னர் firefox restart செய்ய private browsing modeல் சென்று நிற்கும். தேவையில்லை என்று கருதினால் true வை false ஆக மாற்றவேண்டும்.

உபுண்டுவில் apt-getக்கு பதில் apt-fast

உபுண்டுவில் update செய்வதற்கோ அல்லது upgrade செய்வதற்கோ அல்லது ஏதேனும் ஒரு நிரலை நிறுவுவதற்கோ நாம் பயன்படுத்த்வது apt-getதான் அதாவது டெர்மினலில்

#sudo apt-get update
#sudo apt-get upgrade
#sudo apt-get install package name

என்றவாறு தான் தட்டச்சு செய்துதான் பயன்படுத்துவோம். அப்படியில்லாமல் apt-fast என்றவாறும் பயன்படுத்தலாம்.

முதலில் டெர்மினலில்

#sudo apt-get install axel என்று தட்டச்சு செய்து axel என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில்

#sudo gedit apt-fast என்று தட்டச்சு செய்து apt-fast என்ற ஒரு கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரிகளை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடவும்.

# !/bin/sh
# apt-fast v0.02 by Matt Parnell http://www.mattparnell.com, this thing is fully open-source
# if you do anything cool with it, let me know so I can publish or host it for you
# contact me at admin@mattparnell.com

# Special thanks to Travis/travisn000 from the PCLinux Forums for making improvements that allow
# for more complex apt-get commands. See the thread: http://www.pclinuxos.com/forum/index.php/topic,66385.0.html

# Use this just like apt-get for faster package downloading. Make sure to have axel installed.

# If the user entered arguments contain upgrade, install, or dist-upgrade
if echo "$@" | grep -q "upgrade\|install\|dist-upgrade"; then
echo "Working...";

# Go into the directory apt-get normally puts downloaded packages
cd /var/cache/apt/archives/;

# Have apt-get print the information, including the URI's to the packages
# Strip out the URI's, and download the packages with Axel for speediness
# I found this regex elsewhere, showing how to manually strip package URI's you may need...thanks to whoever wrote it
apt-get -y --print-uris $@ | egrep -o -e "(ht|f)tp://[^\']+" > apt-fast.list && cat apt-fast.list | xargs -l1 axel -a

# Perform the user's requested action via apt-get
apt-get $@;

echo -e "\nDone! Verify that all packages were installed successfully. If errors are found, run apt-get clean as root and try again using apt-get directly.\n";

else
apt-get $@;
fi

பின்னர் டெர்மினலில்

#sudo chmod +x apt-fast என்று தட்டச்சு செய்து இயங்ககூடிய நிரலாக மாற்றம் செய்யவேண்டும். பின்னர் இந்த நிரலை /usr/bin/ என்ற அடைவினுள் செமித்து கொள்ள வேண்டும்.

பின்னர் டெர்மினலில்

#sudo apt-fast update என்று தட்டச்சு செய்தால் விரைவாக செயல்படுவதை காணலாம்.


இதே போல் நிரலை நிறுவுவதற்கும் அல்லது உபுண்டு upgrade செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

Friday, January 29, 2010

உபுண்டு desktopல் my computer,trash,home folder, network iconகளை வரவழைக்க

உபுண்டு desktopல் mycomputer, trash, network servers, home folder icon வரவழைக்க கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

விண்டோஸ் os ல் defaultஆக my computer, internet explorer, recycle icon ஆகியவைகள் os நிறுவியவுடன் வந்துவிடும்.

ஆனால் உபுண்டுவில் default ஆக இந்த icon கள் இருப்பதில்லை.


alt+f2 வை அழுத்த கீழ்கண்ட விண்டோ விரியும்.



இதில் மேலே கண்டவாறு 'gconf-editor' என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.


மேலே கண்ட விண்டோவில் app->nautilus->desktop என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேலே இடது பக்க விண்டோவில் இருக்கும் டிக் செய்யப்படாத கட்டங்கள் நான்கு இருக்கும் அவைகளை டிக் செய்துவிட வேண்டும். அதாவது

computer_icon_visible
home_icon_visible
network_icon_visible
trash_icon_visible

ஆகிய நான்கு கட்டங்களிலும் டிக் செய்யவேண்டும்.

இப்போது dekstop கீழ்கண்டவாறு காட்சி அளிக்கும்.


icon தேவையில்லை என்று கருதினால் மேற்கண்ட முறையில் நான்கு கட்டங்கலில் இருந்து டிக்கை எடுத்துவிடவேண்டும்.

Wednesday, January 27, 2010

உபுண்டுவில் google DNS

உபுண்டுவில் google DNS எப்படி அமைப்பது என்பது பற்றி பார்ப்போம்.

google சமீபத்தில் தன்னுடைய dns server அறிமுகம் செய்தது. இதை எப்படி உபுண்டுவில் அமைப்பதை பார்க்கலாம்.
முதலில் dns server எப்படி அமைக்கப்பட்டிருந்தது என்பதை காணலாம்.


top பேனலில் இருக்கும் network manager icon ஐ இடது சொடுக்கினால் வரும் விண்டொவில் edit connections தேர்ந்தெடுக்கவேண்டும். அல்லது System->Preferences->network connections தேர்ந்தெடுக்கவேண்டும்.


இதில் Auto etho தேர்ந்தெடுத்து edit பொத்தனை அழுத்தினால்


மேலே உள்ள படத்தில் ipv4 settings போத்தனை அழுத்தவேண்டும்.

மேலே உள்ள படத்தில் method என்பதில் automatic (dhcp) என்பதற்கு பதில் automatic (dhcp) addresses only என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் dns servers என்பதில் 8.8.8.8,8.8.4.4 என்பதை தட்டச்சு செய்து apply பொத்தனை அழுத்தவேண்டும்


பின்னர் connection information சென்று பார்த்தால் கீழ்கண்டவாறு இருக்கும்.


இதே முறையை பயப்படுத்தி open dns யும் அமைக்கலாம்.

Tuesday, January 26, 2010

உபுண்டு (9.10)ல் webcam

உபுண்டு (9.04) ல் webcam என்ற ஒரு பதிவை 25-09-2009 அன்று எழுதியிருந்தேன். அதில் cheese webcam booth ல் வீடியோ வேலை செய்கிறது ஆனால் ஆடியோ வேலை செய்யவில்லை என்று எழுதியிருந்தேன்.

ஆனால் இந்த பிரச்னை 9.10லும் தொடர்ந்தது. ஆனால் சமீபத்திய ஒரு update இதை நிவரித்தி செய்துவிட்டது. பேனலில் sound icon இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் webcamஐ detect செய்திருந்தது.

skype, ekiga மற்றும் sound recorderலும் நன்றாக வேலை செய்கிறது.


மேலே உள்ள படத்தில் mic உபயோகப்படுத்தினால் internal audio analog sterio தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் webcam உபயோடப்படுத்தினால் usb2.0_camera analog mono தேர்ந்தெடுக்க வேண்டும்.



webcam detect செய்திருப்பதை பார்க்கலாம். ஆனால் mic or webcam ஏதாவது ஒன்றுதான் உபயோக்க வேண்டும்.

cheese webcam booth வீடியோவுடன் ஆடியோவும் வருகிறது. ogv வடிவில் வீடியோ தெளிவாக இருக்கிறது.

உபுண்டுவில் proxy server

உபுண்டுவில் proxy server எப்படி அமைப்பது என்பது பற்றி பார்ப்போம்.

பொதுவாக bsnl broadband வீடுகளில் சேவை அளிக்கும்போது direct internet connection தான் இருக்கும். அலுவலகத்தில் பல கணினிகளை இணைத்து இருப்பார்கள். அங்கு இந்த proxy server பயன்படும். வீடுகளில் அல்லது அலுவலகத்திலோ தனியாக ஒரு மோடம் கொடுத்து இருப்பார்கள்.proxy server தேவைப்பட்டால் அவர்களே settings அமைத்து கொடுத்துவிடுவார்கள். ஒருவேளை os செயல்இழந்தாலோ அல்லது மீண்டும் நிறுவ வேண்டி வந்தாலோ அவர்களை அழைக்க வேண்டி இருக்கும். அதற்க்காக அவர்களிடம் இந்த proxy server மற்றும் port no. ஆகியவைகளை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

proxy server அமைக்க

System->preferences->network proxy தேர்ந்தெடுத்து அதில் அமைக்க வேண்டும்.

இதில் பெரும்பாலும் வீடுகளில் direct internet connection தேர்வு செய்து இருப்பார்கள். proxy server தேவைப்படும் இடங்களில் manual proxy coniguration தேர்வு செய்ய வேண்டும். HTTp proxy, secure proxy, ftp proxy போன்றவைகளிலும் அமைக்க வேண்டும். அவ்வாறில்லாமல் எல்லாம் ஒன்றாக இருந்தால் use same proxy for all protocols தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் details பொத்தனை அழுத்தினால் user name, password கேட்கும்.

தேவைப்பட்டால் கொடுக்கலாம் இல்லையேன்றால் தேவையில்லை.

பின்னர் synaptic package managerல் சென்று இதே போல் proxy server அமைக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு update செய்ய முடியும்.

System->Administration->Synaptic package manager ->preferences->network


இங்கும் direct internet connection மற்றும் manual proxy configuration இருக்கும். network proxy ல் என்ன அமைத்தோமோ அதையேதான் இங்கும் அமைக்க வேண்டும். மாற்றினால் update ஆகாது. எனவே update ஆனாமல் இருந்தால் இந்த இரண்டையும் உடனடியாக பார்க்க வேண்டும்.

இதற்கு பிறகும் கூட firefox உலாவியில் இதே போல் proxy server அமைக்க வேண்டும்.

Firefox->Edit->preferences->advanced->network->settings



இதில் நான்கு option இருக்கிறது இதில் நாம் network proxyயில் direct internet connection என்று தேர்வு செய்திருந்தால் இங்கு use system proxy settings,auto detect proxy settings for this network இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தேடுத்து கொள்ளவேண்டும். அவ்வாறில்லாமல் manual proxy settings கொடுத்திருந்தால் use sytem proxy settings அல்லது manual proxy settings தேர்ந்தெடுக்க வேண்டும். manual proxy settings தேர்ந்தெடுத்து இருந்தால் இங்கும் network proxy ல் அமைத்தது போலவே அமைக்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளே இணைய உலாவ போதுமானது. உபுண்டுவில் network manager என்ற நிரல் default ஆகவே அமைத்து இருப்பார்கள் அதுவே பார்த்துகொள்ளும்.


பேனலில் network manager iconல் இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் connection information தேர்ந்தெடுத்தால் அதில் ip address போன்றவை இருக்கும்.

இதில் நம்முடைய broadband modem details இருக்கும்.

உபுண்டுவில் GPG error BADSIG என்று வந்தால்

உபுண்டுவில் சில சமயம் update செய்யும் போது GPG Error BADSIG என்றவாறு வந்து updae ஆகாமல் போகும். அதாவது கீழ்கண்டவாறு பிழை செய்தி வரும்.

W: GPG error: http://archive.canonical.com karmic Release: The following signatures were invalid: BADSIG 40976EAF437D05B5 Ubuntu Archive Automatic Signing Key

இதை கீழ்கண்ட முறையில் சரி செய்யலாம்.

type 1

டெர்மினலில்

#sudo -i இது root டெர்மினலுக்கு செல்ல உதவும்.

#apt-get clean

#cd /var/lib/apt என்ற அடைவினுள் செல்லவேண்டும்.

பின்னர் இதில் இருக்கும் lists என்ற அடைவை ஒரு backup copy எடுத்துக்கொள்ளவேண்டும்.

#mv lists lists.old என்றவாறு தட்டச்சு செய்தால் backup எடுக்கப்பட்டுவிடும். பின்னர்

#mkdir -p lists/partial lists என்ற அடைவினுள் partial என்ற அடைவை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே partial என்ற அடைவு இருந்தால் இது தேவையில்லை.

மீண்டும்.

#apt-get clean

#apt-get update என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

type 2

இன்னொரு முறையில் டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.

sudo aptitude -o Acquire::http::No-Cache=True -o Acquire::BrokenProxy=true update

sudo apt-get update என்று தட்டச்சு செய்தால் பிழை நீக்கப்பட்டு சரியான முறையில் இயங்க தொடங்கும்.

Monday, January 25, 2010

உபுண்டுவில் பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்க

உபுண்டுவில் பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்க wget என்ற கட்டளை பயப்படுகிறது. இதை பயன்படுத்த முதலில் டெர்மினலில் ஏதேனும் பெயரில் ஒரு கோப்பினை உருவாக்கி அதில் நாம் தரவிறக்கம் செய்யப்பொகும் கோப்புகளின் url கொடுக்கவேண்டும்.

#sudo gedit file_name இந்த கோப்பில் தரவிறக்கப்பட வேண்டிய கோப்புகளின் url இருக்கும்.

http://sourceforge.net/projects/peazip/files/PeaZip%20for%20Linux%2C%20GTK2/2.9/peazip-2.9.LINUX.GTK2-1.i586.rpm/download
http://sourceforge.net/projects/parchive/files/gpar2/0.3/gpar2_0.3-1_i386.deb/download
http://sourceforge.net/projects/areca/files/areca-stable/areca-6.0.7/areca_6.0.7-ubuntu-gtk-32.deb/download

மேற்கண்டவாறு கோப்பு இருக்கும். பின்னர் டெர்மினலில் கீழ்கண்டவாறு கட்டளையிட வேண்டும்.

#wget -i pic என்று தட்டச்சு செய்யவேண்டும்.


நமக்கு நேரம் மிச்சம் ஆவதுடன் விரைவாகவும் தரவிறக்கவும் முடியும்.

உபுண்டுவில் alaram clock

உபுண்டுவில் alaram clock ஒன்றை வரவழைக்கலாம். முதலில் டெர்மினலில்

#sudo apt-get install alarm-clock என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர்

Applications->Accessories->Alarm Clock சென்றால் நிரல் வேலை செய்ய துவங்கும்.


இதன் பின் + குறியை அழுத்த புதியதாக alarm செட் செய்யலாம்.



ok அழுத்தினால்


இங்கு dateன் கீழ் single day schedule என்று இரண்டு option இருப்பதை காணலாம். single day என்பது ஒரு நாள் மட்டும் செயல்படும் schedule என்பது நாம் விரும்பும் நாட்களில் alarm வைத்துக் கொள்ளலாம்.



ok அழுத்தி வெளியேறவேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் alam செயல்பட ஆரம்பித்தவுடன்


இதில் நாமே கூட நமக்கு வேண்டிய ஒலிகளை வைத்துக்கொள்ளலாம்.

உபுண்டுவில் add/remove applications மீண்டும் நிறுவுதல்

உபுண்டு 9.10ல் ubuntu software center தான் அமைந்து உள்ளது. ஆனால் add/remove applictions என்ற option இல்லை. இதை மீண்டும் வரவழைக்க ubuntu software centerல் இதற்கான நிரல் இருக்கிறது.


இந்த நிரல் நிறுவப்பட்டவுடன் இயக்க

System->Administration->Add/remove applications செல்ல வேண்டும்.

ubuntu software centerஐ விரும்பாதவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.