Pages

Friday, August 26, 2011

உபுண்டுவில் vlc உதவியுடன் வீடியோ wallpaper அமைக்க


உபுண்டுவில் vlcயின் உபயோகம் பல உள்ளது. இதில் ஒன்று ஒரு வீடியோ கோப்பினை wall paper ஆக மாற்றி அமைக்க முடியும். இதற்கு உதவும் கட்டளை cvlc என்பதாகும்.

டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

cvlc --video-wallpaper --no-audio /home/user name/Videos/video file

இதனை உபுண்டு துவங்கும் போதே ஆரம்பிக்க startup applicationல் சேர்த்துவிட வேண்டும்.

system->preferences->startupapplications செல்ல வேண்டும். இதில் add பொத்தானை அழுத்தினால் வரும் விண்டோவில் கட்டளைகளை அமைக்க வேண்டும்.


Name->Video Wallpaper
Command->cvlc --video-wallpaper --no-audio /home/user name/Videos/video file

இந்த கட்டளை கொடுத்தால் ஆடியோ கேட்க்காது. ஆடியோ வேண்டுமென்றால் மேற்கண்ட கட்டளை வரியிலிருந்து --no-audio என்பதனை நீக்கிவிட வேண்டும். இப்போது கணினியை மீளதுவங்க வீடியோ கோப்பு wall paper ஆக ஒட ஆரம்பிக்கும்.



Thursday, August 25, 2011

உபுண்டுவில் அடைவுகளை உருவாக்க ஒரு எளிய வழி



உபுண்டுவில் அடைவுகளை (folder) சுலபமாக உருவக்கலாம். உதாரணமாக abc1, abc2, abc3,abc4 மற்றும் abc5 என்ற பெயர் உள்ள ஐந்து அடைவுகளை உருவாக்க டெர்மினலில் ஒரு சிறிய கட்டளை கொடுத்தாலே போதுமானது.

டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

mkdir abc{1,2,3,4,5}

இப்போது ஐந்து அடைவுகள் உருவாக்கி இருக்கும்.


இந்த அடைவுகளி நீக்குவதும் எளிது. டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

rmdir abc*

இப்போது அடைவுகள் நீக்கப்பட்டு இருக்கும்.

Sunday, August 21, 2011

உபுண்டு உச்ச நீதிமன்றத்திலும் உபுண்டு லினக்ஸ்


கடந்த 5 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த redhat linux 5 தற்சமயம் மாற்றப்பட்டு உபுண்டு லினிக்ஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் அதன் கீழ் இயங்கும் சுமார் 17000 நீதிமன்றத்திலும் உபுண்டு 10.04 பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சுமார் 4 முதல் 5 கணினிகள் இருக்கும். அதன் படி சுமார் அனைத்து நீதிமன்றத்திலும் உபுண்டு என்றால் சுமார் 85000 கணினிகளில் உபுண்டு 10.04 நிறுவப்படும்.

இந்த சுட்டியை பார்த்தால் நமக்கு நன்றாக புரியும். இதில் உபுண்டு நிறுவ விளக்கங்கள் மற்றும் வீடியோ (ogv வடிவில் கிடைக்கிறது) பார்த்தால் தெரியும்.

http://www.sci.nic.in/e-committee.htm



மேலும் உபுண்டு பற்றிய tips & tricks போன்றவற்றை sms மூலம் பெறுவதற்கு கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்.

http://labs.google.co.in/smschannels/subscribe/UBUNTU-LINUX

sms மூலம் trips & tricks பெறுவதற்கு நம்முடைய கைப்பேசியிலிருந்து

ON UBUNTU-LINUX என்று தட்டச்சு செய்து 09870807070 என்ற எண்ணிற்கு sms அனுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்றமே அதில் இருக்கும் ஊழியர்களை tips&trics பெறுவதற்கு இந்த சேனலில் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


Sunday, August 7, 2011

உபுண்டுவில் shut down செய்ய keyboard shortcut key

உபுண்டுவில் விசைபலகையை பயன்படுத்தி shutdown செய்ய cntrl+alt+del அல்லாமல் இரண்டு பொத்தானகளை அழுத்தி செய்யமுடியும்.

இதற்கு Preferences->keyboard shortcuts செல்ல வேண்டும்.


இதில் Add பொத்தானை அழுத்த வரும் விண்டோவில்


Name என்பதில் Shutdown
Command என்பதில் /usr/lib/indicator-session/gtk-logout-helper -s

என்று தட்டச்சு செய்துவிட்டு apply பொத்தானை அழுத்த வேண்டும்.



இப்போது திரையில் keyboard shortcut விண்டோவில் custom shortcuts என்பதற்கு கீழே shutdown வந்திருப்பதையும் அதற்கு நேரே disabled என்பது இருக்கும். Disabled என்பதில் கிளீக் செய்தபின் newshortcut என்று வரும். அப்போது ஏதேனும் இரண்டு விசைகளை அழுத்த அதுவே shutdown செய்வதற்கு shortcut விசையாக பயன்படும். நான் இதில் Alt+s என்பதாக வைத்துக் கொண்டேன். பின்னர் close பொத்தானை அழுத்தவேண்டும். இப்போது மேசை மீது Alt+s என்ற விசைகளை அழுத்தினால் shutdown திரை வந்துவிடும்.

Saturday, August 6, 2011

உபுண்டுவில் தமிழக அரசின் விசைப்பலகை drivers

உபுண்டுவில் தமிழ் விசைப்பலகைக்கான driverகளை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான சுட்டி

இந்த சுட்டியிலிருந்து கோப்பினை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். இந்த கோப்பு zip வடிவில் கிடைக்கிறது. இதனை விரித்து மேசைமீதே வைத்து கொண்டேன். பெரிய பெயராக இருந்ததால் அதனை சிறிய பெயராக மாற்றிக்கொண்டேன்.இதனை நிறுவுவது சுலபம். அதிலேயே வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் 99 விசைப்பலகை உள்ளது.

எனவே டெர்மினலில் விசைப்பலகை அடைவிற்கு சென்று கீழ்கண்டவாறு கட்டளை கொடுக்க வேண்டும்.

sudo su
sh Install

என்று கொடுத்தால் போதும் நிறுவப்பட்டுவிடும்.


இதன் driver களை இயக்குவதற்கு Applications->Tamil Keyboard Interface->TN Govt.Keyboard Interface செல்ல வேண்டும்.




இப்போது டாப் பேனலில் இதன் ஐகான் இருப்பதை காணலாம். இதில் வலது சொடுக்கினால் பல ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


இதில் help தேர்ந்தெடுத்து விசைப்பலகையை திரையில் காணமுடியும். முதலில் பழக இதனை பார்த்து தட்டச்சு செய்துகொள்ளலாம்.




இதனை geditல் பயன்படுத்தலாம்.


Libre officeலும் பயன்படுத்த முடியும்.



இதன் குறைகள்

நெருப்பு நரி மற்றும் தண்டர்பேர்டில் பயன்படுத்த முடியவில்லை.

இது ஒரு சோதனை பதிப்புதான். நிறைகுறைகள் கேட்கப்பட்டு உள்ளது. வெகு விரைவில் மேற்கண்ட குறைகள் சரியாகிவிடும்.

Thursday, August 4, 2011

உபுண்டு 11.10 மற்றும் 12.04 LTS ன் release schedule

உபுண்டுவின் அடுத்த பதிப்புகளின் release schedule கீழே தரப்பட்டுள்ளது.

11.10

02-06-2011 Alpha 1
30-06-2011 Alpha 2
04-08-2011 Alpha 3
01-09-2011 Beta 1
22-09-2011 Beta 2
13-10-2011 11.10 Final

இதன் பெயர் oneiric

12.04 LTS

01-12-2011 Alpha 1
02-02-2012 Alpha 2
15-03-2012 Beta 1
22-03-2012 Beta 2
19-04-2012 Release Candidate
26-04-2012 12.04 LTS final

இந்த பதிப்பிற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை

Tuesday, August 2, 2011

உபுண்டுவில் இரண்டு சொடுக்கில் shutdown செய்ய

உபுண்டுவை shutdown செய்யும் போது கீழ்கண்டவாறு திரை வரும்.



அப்படியில்லாமல் இரண்டு சொடுக்கில் shutdown செய்ய டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type bool --set /apps/indicator-session/suppress_logout_restart_shutdown true

இப்போது shutdown பொத்தானை அழுத்தினால் உடனடியாக shutdown ஆகும்.

மீண்டும் shutdown message வருவதற்க்கு கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type bool --set /apps/indicator-session/suppress_logout_restart_shutdown false

இரண்டாவது முறைப்படி gconf-editor சென்று apps->indicater-session இடது புறம் உள்ள விண்டோவில் suppress_logout_restart_shutdown என்பதற்கு நேராக டிக் செய்திட வேண்டும்.