Pages

Friday, July 29, 2011

உபுண்டுவில் பெரிய அளவுள்ள கோப்புகளை பிரிக்க/சேர்க்க

உபுண்டுவில் பெரிய அளவுள்ள கோப்புகளை பிரித்து பின்னர் அவற்றை ஒன்றாக சேர்க்க உதவும் மென்பொருள் gnome-split. இதனை நிறுவ கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:gnome-split-team/ppa
sudo apt-get update
sudo apt-get install gnome-split

இப்போது நிரல் நிறுவப்பட்டு விடும். இதனை இயக்க Applications-> accessories-> nome split செல்ல வேண்டும்.


இதனை இயக்கவுடன் மேலே உள்ள திரை வரும். இதனுடன் Assistant எனும் திரையும் வரும். அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையேன்றால் cancel பொத்தானை அழுத்தி அந்த திரையை எடுத்துவிடலாம்.

ஒரு வீடியோ கோப்பினை எப்படி பிரிப்பது என்பது பற்றிப்பார்ப்போம்.


இந்த கோப்பானது 1024mb அளவுள்ளது.


இதில் file என்பதில் கோப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும். 1 மற்றும் 2
Destination என்பதில் கோப்பு சேமிக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும். 3 மற்றும் 4
5 என்பது கோப்பு எத்தனை கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
6 Split in என்பது கோப்புகள் எத்தனை அளவு பிரிக்க வேண்டும் என்பதை குறிக்கிறது
7 இதில் கோப்புகள் எந்த வித பார்மெட்களில் பிரிக்க வேண்டும் என்பதை குறிக்கும்.

பின்னர் மேலே அம்பு குறி இடத்தில் கிளிக் செய்தால் கோப்புகள் பிரிந்து விடும்.


பின்னர் கோப்புகளை சேர்ப்பதற்கு splitற்க்கு பதிலாக merge தேர்ந்தெடுத்து மேலே சொன்ன வழிமுறைகளை மீண்டும் பின்பற்ற கோப்புகள் சேர்ந்துவிடும்.



கோப்புகள் சேர்ந்து முடிந்ததும் முழு கோப்பு முன்பு இருந்ததை போலவே இருப்பதை காணலாம்.

மேலே உள்ள படம் வீடியோ கோப்பு பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்தவுடன் விஎல்சியில் இயங்குவதை காணலாம்.

Friday, July 22, 2011

உபுண்டு 10.4.3 maintenance பதிப்பு வெளியீடு

உபுண்டு 10.04ன் மூன்றாவது maintenance பதிப்பு 10.04.3 வெளிவந்துள்ளது. 10.04 ஒரு LTS பதிப்பாகும். இதில் பல பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இதல் என்னனென்ன பிழைகள சரிசெய்யப்பட்டன என்று இந்த சுட்டியில் உள்ளது.

இதனை தரவிறக்கம் செய்ய இந்த சுட்டிக்கு செல்ல வேண்டும்.

10.04 பதிப்பின் ஆயுகாலம் மேசைக்கணினிக்கு 2013 செர்வர்களுக்கு 2015 வரையுள்ளது.

Saturday, July 16, 2011

உபுண்டுவில் restart,shutdown ஆப்ஷன்களை மறைக்க

உபுண்டு top panelல் உள்ள restart,shutdown ஆப்ஷன்களை மறைக்க முடியும்.


Alt+f2 ஒரு சேர அழுத்தி வரும் விண்டோவில் gconf-editor என்பதனை இயக்க வேண்டும்.


gconf-editor திறந்தவுடன் அதில் apps->indicator-session என்பதற்கு வலது பக்கமுள்ள விண்டோவில் suppress_restart_menuitem மற்றும் suppress_shutdown_menuitem என்பதற்கு முன்னல் டிக் செய்திட வேண்டும்.



இப்போது restart, shutdown ஆப்ஷன்கள வராது.


இந்த ஆப்ஷன்கள் தேவைப்பட்டால் மீண்டும் gconf-editor சென்று மாற்றிக்கொள்ளலாம்.

Sunday, July 10, 2011

உபுண்டுவில் shutter 0.87.3 நிறுவுதல்

உபுண்டுவில் screenshot நிரலான shutter 0.87.3 எப்படி நிறுவுவது என்பது பற்றிப்போம்.இதற்கேன்று ppa உள்ளது.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும்.

sudo add-apt-repository ppa:shutter/ppa
sudo apt-get update
sudo apt-get install shutter

இந்த நிரல் screenshot எடுப்பத்தற்கு ஒரு சிறந்த நிரலாகும். பயன்படுத்த எளிமையானது. பல புகைப்பட தளங்களுக்கு படங்களை ஏற்ற ஒரு நிரலாகும்.


Saturday, July 9, 2011

உபுண்டுவில் அண்மையில் தோன்றி மறைந்த notifications காண

உபுண்டுவில் பலவிதமான notificationsகள் வலது மூலையில் தோன்றி மறைந்துவிடும். மீண்டும அவற்றை பார்க்க முடியாது. எனவே அண்மையில் தோன்றி மறைந்த notificationsகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த நிரல் பயன்படுகிறது.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:jconti/recent-notifications
sudo apt-get update

உபுண்டு 11.04 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get install indicator-notifications

பழைய பதிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு தேவையில்லை. மீண்டும் டெர்மினலில்

sudo apt-get install recent-notifications என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும்.

இப்போது top panelல் கர்சரை வைத்து வலது கிளிக் செய்து Add to panel தேர்ந்தெடுத்து அதில் recent notifications என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.



Add பொத்தனை அழுத்தினால் top panelல் சேர்ந்துவிடும்.




இப்போது திரையில் எந்தவிதாமான notifications தோன்றினாலும் அதனைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும்.