Pages

Wednesday, September 28, 2011

உபுண்டு பற்றி CNN-IBN தொலைக்காட்சியில் ஒரு விவாதம்

உபுண்டுவை பற்றி இந்திய செய்தி தொலைக்காட்சியில் ஒரு விவாதம். கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.




மேற்கண்ட வீடியோ சுமார் 22 நிமிடங்கள் ஒடக்கூடியது. 15வது நிமிடத்திலிருந்து உபுண்டுவைப்பற்றிய உரையாடல் தொடங்குகிறது.

Thursday, September 22, 2011

உபுண்டுவில் இரண்டு கணினிகளுக்கிடையே சாட் செய்ய

உபுண்டுவில் நெட்வோர்க் மூலம் இணைக்கப்பட்ட இரண்டு கணினிகளுக்கிடையே சாட் செய்ய முடியும். இதற்கான நிரல் ஏற்கனவே உபுண்டுவில் நிறுவப்பட்டு இருக்கும். அப்படியில்லை என்றால் synaptic package manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.



முதலில் முதலாம் கணினி டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை தட்டச்சு செய்ய வேண்டும்.

nc -l 55555

பின்னர் இரண்டாம் கணினி டெர்மினலில் முதலாம் கணினியின் ஐபி முகவரியினை கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

nc 192.168.1.2 55555

இதில் 55555 என்பது கணினியின் போர்ட் எண்ணாகும்.

இப்போது டெர்மினலில் தட்டச்சு செய்து எண்டட் கீயை அழுத்த இரண்டாம் கணினி திரையில் தெரியும்.



இங்கு சொல்லப்பட்ட இரண்டு கணினிகளும் wifi மூலம் இணைக்கப்பட்டது.

Sunday, September 18, 2011

உபுண்டுவில் இரண்டு கணினி ஒரு அச்சு இயந்திரம்.

உபுண்டுவில் இரண்டு கணினி ஒரு அச்சு இயந்திரம் எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம்.

என்னிடம் ஒரு மேசை கணினி, ஒரு HP 530 மடிக்கணினி wifi வசதி உள்ளது மற்றும் ஒரு HP Desktop F4288 ஆகிய மூன்றையும் ஒரு wifi வசதியுள்ள bsnl modem உதவியுடன் இணைக்கலாம்.

முதலில் மடிக்கணினியையும் அச்சு இயந்திரத்தையும் இணைத்தேன். அச்சு இயந்திரத்திற்கு உபுண்டுவிலேயே டிரைவர் உள்ளதால் தானாகவே இணைந்து கொண்டது.இதனை system->printing சென்றால் காணலாம்.


பின்னர் system->printing->server->settings செல்ல வேண்டும். இதில் show printers shared by other systems, publish shared printers connected to this system, allow printing from the internet, allow remote administration போன்றவைகளில் டிக் செய்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


இந்த கணினியின் ip முகவரி network manager iconஇல் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் connection information ல் தெரிந்து கொள்ளலாம்.



இப்போது இந்த அச்சு இயந்திரத்தில் test pageனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.



இப்போது சற்று தொலைவில் உள்ள மேசை கணினியினை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.

இதிலும் system->printing->server->settingsனை முன்னர் குறிப்பிட்டது போலவே அமைத்துகொண்டாலே அச்சு இயந்திரம் இணைந்துவிடும்.


அப்படியில்லை என்றால் add பொத்தானை அழுத்தி வரும் விண்டோவில் internet printing protocol என்பதனை தேர்ந்தெடுத்து வலது புறம் உள்ள விண்டோவில்

host என்பதில் 192.168.1.3:631/printers/Deskjet-F4200-series என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இதில் அச்சு இயந்திரம் எந்த கணினியுடன் இணைந்திருக்கிறதோ அதன் ip முகவரியினை கீழ்கண்டவாறு தர வேண்டும்.

பின்னர் forward பொத்தானை அழுத்த அச்சு இயந்திரம் தயாரகிவிடும். இரண்டு கணினியிலும் அச்சு இயந்திரத்தின் டிரைவர்கள் இருக்க வேண்டும்.


இப்போது மேசைக்கணினியிலும் அச்சு இயந்திரம் செயல்படுவதைப்பார்க்கலாம்.

Saturday, September 17, 2011

உபுண்டுவில் wifiஐ பயன்படுத்தி இரண்டு கணினிகளுக்கிடையே கோப்புகளை பகிர்தல்

உபுண்டுவில் இரண்டு கணினிகளுக்கிடையே கோப்புகளை பகிர wifi ஐ பயன்படுத்தாம். இதற்காக இரண்டு கணினிகளிலும் shared option உடைய அடைவுகள் இருக்க வேண்டும். ஒரு அடைவிற்கு shared option ஏற்படுத்துவது எளிதானது.

ஹோம் அடைவினுள் ஒரு அடைவினை ஏற்படுத்தியோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு அடைவில் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் shared options என்று இருப்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.



மேலே உள்ள படத்தில் வருவது போல் விண்டோ வரும் அதில் share this folder என்பதை டிக் செய்திட வேண்டும். இப்போது service நிறுவவில்லை என்று செய்தி வரும். அதாவது samba நிரல் நிறுவவில்லை என்றால் இப்படி ஒரு செய்தி வரும். கூடவே install services என்று இருக்கும் பொத்தானை அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும். அதேபோல் இன்னோரு கணினியிலும் நிறுவிக்கொள்ள வேண்டும்.

என்னுடையது ஒன்று மேசை கணினி மற்றது மடிக்கணினி. இரண்டிலும் அடைவுகளிலும் மேலே சொன்னது போல் shared option ஏற்படுத்திக்கொண்டேன்.



இப்போது Places->network சென்றால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.



இதில் desk என்று இருப்பது மேசைகணினி மற்றது HP-53 என்று இருப்பது மடிகணினி ஆகும். இரண்டின் மீதும் கர்சரைவைத்து அழுத்த கடவுச்சொல் கேட்கும். இதில் கணினியின் கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். இரண்டு கணினியும் மேசை மீது வந்துவிடும்.



நான் மேசைக்கணினியில் இருந்தாவாறு மடிக்கணியில் கோப்புகளை பகிர்ந்து கொண்டேன். இந்த வீடுகளிலும் கணினிகளை எளிதில் இணைத்துக்கொள்ளலாம்.

Thursday, September 8, 2011

உபுண்டுவில் defaultஆக உள்ள அடைவுகளை மாற்ற

உபுண்டுவில் default உள்ள அடைவுகளான downloads, music,videos போன்றவற்றை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும்.

உதாரணமாக இணையத்திலிருந்து ஏதேனும் கோப்பினை தரவிறக்கும்போது Downloads என்ற அடைவினுள் சேமிக்கப்பட்டுவிடும். அவ்வாறில்லாமல் நம் விருப்பம் போல் அடைவினை உருவாக்கி அதில் சேமிக்க முடியும்.

Home அடைவினுள் ஒரு அடைவாக Down என்ற அடைவினை உருவாக்கினேன். இதனை default ஆக மாற்ற கீழ்கண்ட வழிமுறையினை பின்பற்றலாம்.


மேற்கண்ட படத்தில் அடைவு உருவாகி இருப்பதை காணலாம். மேலும் view->show hidden files சென்றால் அதில் மறைக்கப்பட்ட அடைவுகள் தெரிவதை காணலாம். அதில் .conig அடைவிற்கு சென்று அதில் user-dirs.dirs என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும்.


கோப்பினை திறந்தால்


அதில் கீழ்கண்டவாறு வரிகள் இருக்கும்.

XDG_DESKTOP_DIR="$HOME/Desktop"
XDG_DOWNLOAD_DIR="$HOME/Downloads"
XDG_TEMPLATES_DIR="$HOME/Templates"
XDG_PUBLICSHARE_DIR="$HOME/Public"
XDG_DOCUMENTS_DIR="$HOME/Documents"
XDG_MUSIC_DIR="$HOME/Music"
XDG_PICTURES_DIR="$HOME/Pictures"
XDG_VIDEOS_DIR="$HOME/Videos"

இதில்

XDG_DOWNLOAD_DIR="$HOME/Downloads" என்பதற்கு பதிலாக
XDG_DOWNLOAD_DIR="$HOME/Down" என்று மாற்றிவிட்டால் போதும். தரவிறக்கப்படும் கோப்புகள் இந்த அடைவினுள் சேமிக்கப்படும்.


இதைப்போல் மற்ற அடைவுகளான video, pictures போன்ற அடைவுகளையும் நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.

Tuesday, September 6, 2011

உபுண்டுவில் டெர்மினலில் நாம் தட்டச்சு செய்த கட்டளைகளை மறைக்க

உபுண்டு டெர்மினலில் சிலசமயம் நாம் சில கட்டளைகளை தட்டச்சு செய்து பயன்படுத்தி இருப்போம். அவற்றை பார்க்க டெர்மினலில் arrow விசையை கொண்டு மேலும் கீழும் நகர்த்தி பார்க்கலாம்.

இந்த கட்டளைகளை மறைக்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

#stty -echo


இப்போது arrow விசையை மேலும் கீழும் அசைத்தால் எந்த ஒரு கட்டளையும் வராது.

மீண்டும் டெர்மினலில் கட்டளைகள் தெரிய கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

#stty echo

Sunday, September 4, 2011

உபுண்டுவில் /var/lib/dpkg/lock பிழையை சரிசெய்ய



உபுண்டுவில் update செய்யும்போது பொதுவாக ஏற்படும் பிரச்சனை /var/lib/dpkg/lock ஆகும்.


இந்த /var/lib/dpkg/lock கோப்பு ஏதெனும் காரணத்திற்காக பிழை ஏற்பட்டுவிட்டால் கீழ்கண்டவாறு பிழை செய்தி வரும்.

E: Could not get lock /var/lib/dpkg/lock - open (11 Resource temporarily unavailable) E: Unable to lock the administration directory (/var/lib/dpkg/), is another process using it?

இந்த பிழையை டெர்மினலில் sudo apt-get update என்று தட்டச்சு செய்தால் சரியாகிவிடும். அப்படியும் சரியாகவில்லை என்றால் கீழ்கண்ட வரியினை டெர்மினலில் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.

sudo fuser -cuk /var/lib/dpkg/lock; sudo rm -f /var/lib/dpkg/lock




Thursday, September 1, 2011

உபுண்டுவில் மவுஸ் ஸ்க்ரோல் பொத்தானை செயலிழக்க செய்ய


உபுண்டுவில் ஏதேனும் வலைப்பக்கத்தை பார்த்துகொண்டு இருக்கும்போதோ அல்லது ஏதேனும் கடிதம் தட்டச்சு செய்யும் போது மவுஸ் ஸ்க்ரோல் பொத்தானை மேலும் கீழும் சென்று எளிதில் நம்முடைய வேலைகளை செய்ய பயன்படும்.

இந்த மவுஸ் ஸ்க்ரோல் பொத்தானை செயலிழக்க செய்ய முடியும். இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput list

இந்த கட்டளைக்கு கீழ்கண்டவாறு டெர்மினலில் திரை வரும்.


மேலே உள்ள படத்தில் மவுஸின் அடையாளம் கீழ்கண்ட வரியைபோல் வந்து இருப்பதை பார்க்கலாம்.

↳ Logitech USB Optical Mouse id=8 [slave pointer (2)]

இப்போது டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு திரை வந்திருக்கும்.

xinput get-button-map 8



1234567 என்றவாறு எண்கள் வந்திருக்கும். இந்த எண்களில்தான் மவுஸ் பொத்தானகளின் செயல்படுகள் அமைந்திருக்கின்றன. இதனை தெரிந்துகொள்ள டெர்மினலில் கீழ்கண்ட தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput list 8


இந்த எண்களில் 4 மற்றும் 5 ல் தான் மவுஸ் ஸ்க்ரோல் பொத்தான் வேலை செய்யும். இந்த செயல்பாட்டை தடுக்க டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput set-button-map 8 1 2 3 0 0

இந்த கட்டளையை கொடுத்தவுடன் மவுஸ் வீல் வேலை செய்யாது. இதனை மாற்ற டெர்மினலில் மீண்டும் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput set-button-map 8 1 2 3 4 5 6 7

இப்போது மவுஸ் வீல் வேலை செய்வதைப்பார்க்கலாம்.