Pages

Monday, May 23, 2011

உபுண்டு messaging menuவில் skype ஆப்ஷன்

உபுண்டுவில் messaging menuவில் skype ஆப்ஷனை கொண்டுவர முடியும்.



டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

wget http://webupd8.googlecode.com/files/skype-notify-messaging
chmod +x skype-notify-messaging
./skype-notify-messaging

இப்போது கீழ்கண்டவாறு டெர்மினலில் வரும்.


இதில் 1 என்பதனை தேர்ந்தெடுக்க ஸ்கைப் ஆப்ஷன் சேர்ந்துவிடும்.

பின்னர் Applications->internet->skype சென்று லாகின் செய்துகொண்டு அதில் options->notifications->advanced view செல்ல வேண்டும். அதில் Execute the following script on any event என்பதனை டிக் செய்து விட்டு அதன் கீழ் இருக்கும் பெட்டியில் கீழ்கண்ட வரியினை சேர்த்துவிட வேண்டும்.

python /usr/share/skype-notify-improved/skype-notify.py -e"%type" -n"%sname" -f"%fname" -p"%fpath" -m"%smessage" -s%fsize -u%sskype



பின்னர் apply பொத்தானை அழுத்திவிட்டு close பொத்தானை அழுத்தி வெளியேற வேண்டும்.

கணினியை ஒருமுறை மீள துவங்க skype ஆப்ஷன் messaging menuவில் வந்திருப்பதை பார்க்கலாம்.

Monday, May 9, 2011

உபுண்டு 11.04ன் குறைபாடு மற்றும் நெருப்பு நரியின் குறைபாடு

உபுண்டு 11.04 தரவிறக்கி பயன்படுத்தியபோது தான் அதன் ஒரு குறை தெரிந்தது. அதாவது ஏதேனும் ஒர் சந்தர்ப்பத்தில் system logout ஆகிவிடுகிறது. இந்த குறை வரும் நாட்களில் சரியாகலாம்.

அடுத்ததாக நெருப்பு நரி உலாவியில் அதாவது அதன் புதியபத்திப்பில் பழைய பத்திப்பில் வேலை செய்த scim input method வேலை செய்ய வில்லை.

பின்னர் 3.6.17னை தரவிறக்கி பயன்படுத்தி பார்த்தபோது scim வேலை செய்த்தது. புதிய பதிப்பு 4.1னை தரவிறக்கி பயன்படுத்தியபோதுதான் இந்த பிழை தெரியவந்தது.


இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தற்சமயம் தெரியவில்ல. நெருப்பு நரியினை டெர்மினலில் உபயோகப்படுத்தியபோது தான் தெரிந்தது.

Sunday, May 8, 2011

உபுண்டுவில் dual monitor

உபுண்டுவில் மடிக்கணினியிலேயே திரையுடன் இன்னொரு திரையையும் சேர்த்து இரண்டையும் இயக்க முடியும்.

முதலில் ஒரு திரையுடன் இருக்கும் போது monitor preference எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

System->preference->monitors சென்றால் காணலாம்.


இப்போது மடிக்கணினியுடன் இன்னோரு திரையையும் இணைத்துவிட்டால்




என்றாவாறு இருக்கும். இதில் same image in all monitors என்பதனை டிக் செய்துவிட்டு apply பொத்தானை அழுத்த கீழ்வரும் விண்டோ வரும்.


இதில் keep this configuration என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் இரண்டு திரைகளிலும் ஒரே படம் தெரிய ஆரம்பிக்கும்.


Saturday, May 7, 2011

உபுண்டுவில் bsnl wifi இணைய இணைப்பு

உபுண்டுவில் wifi இணைய இணைப்பு பெறுவதைப்பற்றிப்பார்போம்.

என்னுடைய உபயோகத்திற்க்காக bsnl நிறுவனத்திடமிருந்து wifi வசதியுள்ள மோடம் வாங்கினேன். இதில் wifi வசதியை எப்படி அமைப்பது என்பது பற்றிப்பார்க்கலாம்.



நெருப்பு நரி உலாவியில் முகவரி பெட்டியில் அவர்கள் தரும் முகவரியை தட்டச்சு செய்து உபயோகிப்பாளர் பெயர் முகவரி மற்றும் கடவுச்சொல் தட்டச்சு செய்தால் மோடத்தின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்ல முடியும்.

மேலே உள்ள படத்தில் வரும் விண்டோவை போல் வந்தவுடன் அதில் wireless என்னும் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். கீழ்கண்டவாறு விண்டோ வரும்.



இதில் basic என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.


1.enable wireless என்பதனை டிக் செய்திட வேண்டும்.
2.SSID என்பதில் நம் விருப்பம் போல் ஒரு பெயரினை கொடுத்துக்கொள்ளலாம். இந்த பெயர் தான் network managerல் காண்பிக்கும்.
3.save பொத்தானை அழுத்தி அமைப்புகளை சேமித்துக்கொள்ள வேண்டும்.

இந்த பகுதி முடிந்தவுடன் இடது புறத்தில் security என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.


1.select BSSID நாம் முன்னர் கொடுத்த பெயரினை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
2.network authenticationல் wpa-psk என்பதனை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதில் open என்பதனை தேர்ந்தெடுத்தால் யார் வேண்டுமானாலும் இணைப்பினை ஏற்படுத்திகொள்ள முடியும்.
3.wpa pre-shared key என்பதில் ஒரு கடவுச்சொல் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனையும் save பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ள வேண்டும்.

இது வரை மோடத்தில் உள்ள அமைப்பினை பார்த்தோம். இப்போது network managerல் பார்க்கலாம்.

network icon மீது கர்சரை வைத்து கிளிக் செய்தால் wireless இணைப்பு இருப்பதை காட்டும். இதில் connection to hidden network என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் network nameல் SSID யில் என்ன பெயர் கொடுத்தோமொ அதை அப்படியே தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் wireless securityயில் மொடம் அமைப்பில் என்ன security அமைப்பு கொடுத்தோமொ அதனை கொடுக்க வேண்டும். இப்போது கடவுச்சொல் கேட்கும். இங்கு மொடத்தில் என்ன கடவுச்சொல் கொடுத்தொமொ அதனை கொடுக்க வேண்டும். connect பொத்தானை அழுத்த இணைப்பு கிடைக்கும்.

கடவுச்சொல் நிலையாக இருக்க networkmanager->edit connections->wireless->yrname->edit செல்ல வேண்டும்.


மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் அமைத்துக்கொள்ள வேண்டும். SSID யில் மட்டும் அதன் பெயரை கொடுக்க வேண்டும்.

இப்போது wireless security சென்று நாம் மொடத்தில் அமைத்ததை போன்று அமைத்துவிட்டு அங்கே கொடுத்த கடவுச்சொல்லினை இங்கேயும் கொடுக்க வேண்டும்.


மேலே உள்ள படத்தில் உள்ளது போல் அமைத்துகொண்டால் போதும்.

மொடத்தினை பொருத்தவரை உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் பொதுவானதாக இருக்கும். எனவே கடவுச்சொல்லினை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Friday, May 6, 2011

உபுண்டுவும் HP மடிக்கணினியும்

என்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு.

முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரையல் வெர்ஷன். எனவே இதில் உபுண்டுவை நிறுவி அலுவலக பணிக்காக பயன்படுத்த முடிவு செய்தேன். எல்லா நிறுவல் வேலைகளும் எளிதாக முடிந்தது. உபுண்டுவின் புதிய பதிப்பான 11.04 நிறுவினேன்.



அனைத்து வன் பொருட்களும் நல்ல முறையில் இயங்கின. எந்தவித மென்பொருள்களும் இதற்கென்று நிறுவவில்லை. sound card, network card, wireless network போன்றவைகளில் எந்தவித பிரச்னை இல்லாமல் இயங்கியது.

பின்னர் system info என்ற மென்பொருளினை பயன்படுத்தி மடிக்கணினியினுள் எந்தெந்த பாகங்கள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

1.பொதுவான கணினியின் தகவல்கள்




2.இதன் cpu வை பார்க்கலாம்



3.இதன் ram நினைவக தகவல்கள்



4.இதன் hardisk மற்றும் dvd rw


5.இதன் motherboard


6.Graphics card



7.Sound card


8.Ethernet card, wireless card


HP மடிக்கணினிகளில் உபுண்டு எந்தவித பிரச்னையின்றி நன்றாக செயல்படுகிறது. எல்லா டிரைவர்களும் உள்ளினைந்தே வருகிறது. Internal modem மட்டும் செயல்படவில்லை. Headphone பயன்படுத்தும் போது கணினியின் உள்ளே இருக்கும் speakerகள் செயல்படுவதில்லை .

Sunday, May 1, 2011

உபுண்டு 11.04ல் medibuntu ppa சேர்த்தல்

உபுண்டுவின் புதிய பதிப்பான 11.04ல் medibuntu repository எப்படி நிறுவுவது என்பதைப்பற்றி பார்க்கலாம்.



மேசையின்மீது இருக்கும் ubuntu software centerல் கிளிக் செய்து Edit->software sources என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். software sources திறந்தவுடன் அதில் other software->add தேர்ந்தெடுத்து வரும் விண்டோவில் கீழ்கண்ட வரியினை சேர்த்துவிடவேண்டும்.

deb http://packages.medibuntu.org/ natty free non-free





பின்னர் authentication key பெறுவதற்க்கு இந்த சுட்டியினை சொடுக்கவும். அப்படி சொடுக்கினால் வரும் விண்டோவில் இருக்கும் டெக்ஸ்டினை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் செமித்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் software sources->authentication->import key file என்பதனை தேர்ந்தெடுத்து மேலே செமித்து வைத்திருக்கும் கோப்பினை தேர்ந்தெடுத்தால் authentication key சேர்ந்துவிடும்.



இப்போது டெர்மினலுக்கு வந்து கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get update
sudo apt-get install w32codecs libdvdcss2

இதில் நமக்கு தேவையான கோடக்குகள் நிறுவப்பட்டு ஆடியோ மற்றும் வீடியோ பார்க்க முடியும்.