உபுண்டுவில்  wifi  இணைய இணைப்பு பெறுவதைப்பற்றிப்பார்போம்.
என்னுடைய உபயோகத்திற்க்காக bsnl  நிறுவனத்திடமிருந்து wifi  வசதியுள்ள மோடம் வாங்கினேன்.  இதில் wifi  வசதியை  எப்படி அமைப்பது என்பது பற்றிப்பார்க்கலாம்.

நெருப்பு நரி உலாவியில் முகவரி பெட்டியில் அவர்கள் தரும் முகவரியை  தட்டச்சு செய்து உபயோகிப்பாளர் பெயர் முகவரி மற்றும் கடவுச்சொல் தட்டச்சு செய்தால் மோடத்தின்  செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்ல முடியும்.

மேலே உள்ள படத்தில் வரும் விண்டோவை  போல் வந்தவுடன் அதில் wireless  என்னும்  பகுதியை  கிளிக் செய்ய வேண்டும். கீழ்கண்டவாறு விண்டோ  வரும்.

இதில் basic  என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.

1.enable wireless  என்பதனை  டிக் செய்திட வேண்டும்.
2.SSID என்பதில் நம் விருப்பம் போல் ஒரு பெயரினை  கொடுத்துக்கொள்ளலாம். இந்த பெயர் தான் network managerல் காண்பிக்கும்.
3.save பொத்தானை  அழுத்தி அமைப்புகளை  சேமித்துக்கொள்ள வேண்டும்.
இந்த பகுதி முடிந்தவுடன் இடது புறத்தில் security என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.

1.select BSSID  நாம் முன்னர் கொடுத்த பெயரினை  தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
2.network authenticationல் wpa-psk  என்பதனை  தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதில் open  என்பதனை  தேர்ந்தெடுத்தால் யார்  வேண்டுமானாலும் இணைப்பினை  ஏற்படுத்திகொள்ள முடியும்.
3.wpa pre-shared key  என்பதில் ஒரு கடவுச்சொல் கொடுத்துக்கொள்ள  வேண்டும்.
இதனையும் save  பொத்தானை  அழுத்தி சேமித்துக்கொள்ள வேண்டும்.
இது வரை  மோடத்தில் உள்ள அமைப்பினை  பார்த்தோம். இப்போது network managerல் பார்க்கலாம்.
network  icon மீது கர்சரை  வைத்து கிளிக் செய்தால் wireless   இணைப்பு இருப்பதை  காட்டும். இதில் connection to hidden network  என்பதனை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் network  nameல் SSID யில் என்ன பெயர் கொடுத்தோமொ அதை  அப்படியே தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் wireless securityயில் மொடம் அமைப்பில் என்ன security  அமைப்பு கொடுத்தோமொ அதனை  கொடுக்க வேண்டும். இப்போது கடவுச்சொல் கேட்கும். இங்கு மொடத்தில் என்ன கடவுச்சொல் கொடுத்தொமொ அதனை  கொடுக்க வேண்டும். connect  பொத்தானை  அழுத்த இணைப்பு கிடைக்கும்.
கடவுச்சொல்  நிலையாக இருக்க networkmanager->edit connections->wireless->yrname->edit  செல்ல வேண்டும்.

மேலே  உள்ள படத்தில் உள்ளதுபோல் அமைத்துக்கொள்ள வேண்டும். SSID யில் மட்டும் அதன் பெயரை  கொடுக்க வேண்டும்.
இப்போது wireless security  சென்று நாம் மொடத்தில் அமைத்ததை  போன்று அமைத்துவிட்டு அங்கே கொடுத்த கடவுச்சொல்லினை  இங்கேயும் கொடுக்க வேண்டும்.

மேலே உள்ள படத்தில் உள்ளது போல் அமைத்துகொண்டால் போதும்.
மொடத்தினை  பொருத்தவரை  உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் பொதுவானதாக இருக்கும்.  எனவே  கடவுச்சொல்லினை  மாற்றிக்கொள்ள வேண்டும்.